Latest Updates
-
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா?
ஒரு பெண் உங்களை பைத்தியக்காரத்தனமாக காதலிக்கும்போது உங்களுக்காக என்னவெல்லாம் செய்வாங்க தெரியுமா?
பொதுவாக ஆண்கள்தான் தங்களின் அன்பை வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்துவார்கள் என்றும், தங்களுக்கு பிடித்த பெண்ணுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஆண்கள்தான் தங்களின் அன்பை வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்துவார்கள் என்றும், தங்களுக்கு பிடித்த பெண்ணுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பெண்களும் ஆண்களைப் போலவே, தங்கள் அன்பைக் காட்டுவதற்கான தனித்துவமான பல வழிகளைக் கொண்டுள்ளனர்.

பெண்கள் அதை வெளிப்படையாக முகத்தில் காட்ட மாட்டார்கள் ஆனால் அவர்களின் வார்த்தைகளை விட அவர்களின் செயல்கள் சத்தமாக பேசும். ஒரு பெண் உங்களை பைத்தியக்காரத்தனமாக விரும்பும் போது என்னவெல்லாம் செய்வார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்களின் முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்துவது
ஒரு பெண் உங்களைப் பைத்தியக்காரத்தனமாக விரும்பினால், அவர் உங்களை நம்புவார், மெதுவாக தனது முக்கியமான ரகசியங்களை உங்களிடம் வெளிப்படுத்துவார். பெண்கள் தங்கள் எண்ணங்களை , உணர்ச்சிகளைஅல்லது ரகசியங்களை எப்போதும் மறைத்து வைப்பார்கள். ஆனால் அவர்கள் உங்களை விரும்பும் போது அல்லது உங்களிடம் முழு நம்பிக்கை வைத்திருக்கும்போது, அவர்கள் மெதுவாக அவர்களின் இரகசிய கதவுகளை திறக்கிறார்கள்.

உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்
பெண்கள் உங்களை விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் உங்களின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். அதற்காக நீங்கள் அவர்களை தவறாக நடத்தலாம் என்று அர்த்தமல்ல, உங்களை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் உங்களின் வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பார்கள். உங்களின் மகிழ்ச்சி அவர்களுக்கும் மகிழ்ச்சியானதாக மாறும்.

உங்களுக்காக பொருட்களை வாங்குவார்கள்
பொதுவாக காதலில் பெண்கள் செலவு செய்ய மாட்டார்கள் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் ஒரு பெண் உங்களை விரும்பும்போது அவர்கள் உங்களுக்காக பல பொருட்களை வாங்குவார்கள். அவர்களை நினைவூட்டும் விதமாக அவர்களுக்கு பிடித்த மற்றும் உங்களுக்கு பிடித்த பொருட்களை தொடர்ந்து பரிசளிப்பார்கள்.

உங்களுக்காக சமைப்பது
பெண்கள் சமைப்பதை வெறுப்பவர்களாகவோ அல்லது எப்போதாவது சமைப்பவர்களாகவோ இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். உங்களுக்காக கஷ்டப்பட்டாவது உங்களுக்கு பிடித்த உணவை அவர்கள் சமைத்துக் கொடுப்பார்கள். இது பெண்களுக்கு இயற்கையாகவே வருகிறது. ஒருவரின் இதயத்தை தொட எளிதான வழி அவர்களின் வயிற்றை நிரப்புவது என்பதை பெண்கள் நன்றாகவே அறிவார்கள்.

சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள்
அனைத்துப் பெண்களும், அவர்கள் எவ்வளவு சீரியஸாகத் தோற்றமளித்தாலும் அல்லது அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு ஒரு நகைச்சுவையான பக்கம் இருக்கும். அவர்கள் யாரையாவது நம்பும்போதும் விரும்பும்போதும் மட்டுமே தங்கள் உண்மையான குணத்தை வெளிப்படுத்துவார்கள். நீங்கள் அவர்களின் பலவீனத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த மாட்டிர்கள் என்றும் அவர்கள் நினைக்கும்போது அவர்கள் அந்தப் பக்கத்தை உங்களுக்குக் காண்பிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
