For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவின்போது 'இந்த' வார்த்தையை உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட சொல்ல வேண்டாமாம்...ஏன் தெரியுமா?

பல வகையான பாலியல் நிலைகள் உள்ளன. மேலும் அனைவருக்கும் ஒவ்வொரு விருப்பம் உள்ளது. நீங்கள் 69 அல்லது டாக்கி பாணியை விரும்பினால், உங்கள் துணை விரும்பவில்லை என்றால், பரவாயில்லை.

|

உடலுறவை சிறந்ததாக்கவும் நீங்கள் உச்சியை அடையவும் பல வழிகள் உள்ளன. ஆனால் நீங்கள் உங்கள் துணையுடன் படுக்கையில் இருக்கும்போது உண்மையில் இருவரும் நன்றாக உணர வேண்டிய விஷயங்களும் உள்ளன. சில நேரங்களில் நாம் உடலுறவு கொள்ளும்போது, அசதியாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் உணரலாம். நீங்கள் உங்கள் துணையுடன் படுக்கையில் இருக்கும் போது சில சங்கடங்களை உணர்வது முற்றிலும் இயல்பானதாக இருக்கும். அதை பெரிதாக எடுத்துக்கொண்டு, உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாலியல் நிலையை விரும்பினாலும், உங்கள் பங்குதாரர் விரும்பாமல் இருக்கலாம். உங்கள் காதலரைப் போல் இல்லாமல் படுக்கையில் புதிய விஷயத்தை செய்ய நீங்கள் விரும்பலாம்.

stop-saying-sorry-about-these-things-in-bed-in-tamil

இதற்காக நீங்கள் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? என்றால், முற்றிலும் இல்லை. ஏனெனில் படுக்கையில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பங்களை வைத்திருப்பதில் தவறில்லை. உடலுறவின் போது மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டும். ஆனால் உடலுறவின் போது நீங்கள் மன்னிப்பு கேட்கக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உச்சக்கட்டத்தை அடைவது

உச்சக்கட்டத்தை அடைவது

ஒவ்வொரு நபருக்கும் உச்சக்கட்டத்தை அடைவது மாறுபாடும். சிலர் சில வினாடிகளிலே உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவார்கள். மற்றவர்களுக்கு உச்சக்கட்டத்தை அடைய 10 நிமிடங்கள் கூட ஆகலாம் அல்லது உச்சக்கட்டம் அடையாமலும் போகலாம். ஆனால் நீங்கள் உங்கள் துணையை விட விரைவாக உச்சியை அடைந்தாலோ அல்லது அதிக நேரம் எடுத்துக் கொண்டாலோ எந்த தவறுமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் விருப்பங்கள் மாறுபடலாம்.

பிடிக்காத விஷயங்கள்

பிடிக்காத விஷயங்கள்

நீங்கள் மக்களை மகிழ்விப்பவராகவும், பரிபூரணவாதியாகவும் இருந்தால், உங்கள் துணையை மகிழ்விக்க நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். உடலுறவின்போது, உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அல்லது செய்வதைத் தவிர்க்க விரும்பினால் அதை வெளிப்படுத்துங்கள். இரு கூட்டாளிகளும் உடன்படும்போது மட்டுமே படுக்கையில் விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. நீங்கள் விரும்பாத அல்லது செய்ய விரும்பாத ஏதாவது இருந்தால், உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.

உடல் உங்களுக்கு பதிலளிக்காதபோது

உடல் உங்களுக்கு பதிலளிக்காதபோது

செக்ஸ் என்பது உங்கள் துணையுடன் இன்பம் மற்றும் பிணைப்பில் ஈடுபடுவது பற்றியது. நம் உடல்கள் எப்போதும் நாம் விரும்பும் விதத்தில் பதிலளிக்காத நேரங்கள் உள்ளன. உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உங்கள் துணை தொட்ட விதம் கடந்த முறை வேலை செய்திருக்கலாம், ஆனால் இந்த முறை உங்கள் உணர்ச்சியை துண்டாமல் இருக்கலாம். இது உண்மையில் பரவாயில்லை, அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.

புதிய விஷயங்களில் விளக்கம் கேட்பது

புதிய விஷயங்களில் விளக்கம் கேட்பது

உங்கள் பங்குதாரர் உங்களை விட படுக்கையில் அனுபவம் வாய்ந்தவராக இருக்கலாம். எனவே உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாலியல் செயல்பாடு குறித்து சந்தேகம் இருந்தால், தெரியாமல் மன்னிப்பு கேட்பதை விட வெறுமனே கேட்டு தெளிவுபடுத்துங்கள். அது என்ன என்று விளக்கம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அடுத்த முறை நீங்களும் மகிழ்ச்சியாக உடலுறவில் ஈடுபடலாம்.

விருப்பமான நிலை அல்லது செயல்பாடு இருப்பது

விருப்பமான நிலை அல்லது செயல்பாடு இருப்பது

பல வகையான பாலியல் நிலைகள் உள்ளன. மேலும் அனைவருக்கும் ஒவ்வொரு விருப்பம் உள்ளது. நீங்கள் 69 அல்லது டாக்கி பாணியை விரும்பினால், உங்கள் துணை விரும்பவில்லை என்றால், பரவாயில்லை. இருவருக்கும் விருப்பமான செக்ஸ் நிலையில் இருங்கள். இது உங்களை அசெளகாரியமாக உணர வைக்கும். அதைவிடுத்து, இருவருக்கும் விருப்பமான நிலைகளில் இன்பத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.

ஆறுதல் தரும் விஷயங்களை விரும்புவது

ஆறுதல் தரும் விஷயங்களை விரும்புவது

அனைவருக்கும் விளக்குகள் எரிந்தோ அல்லது போர்வைகள் இல்லாமலோ உடலுறவு கொள்வதில் வசதியாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஆறுதல் அளிக்கக்கூடிய மற்றும் உடல் உருவத்தைப் பற்றிய பாதுகாப்பின்மையைக் குறைக்க உதவும் ஒன்று தேவை. ஆனால் அதற்காக ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.

புதிதாக முயற்சி செய்வது

புதிதாக முயற்சி செய்வது

ஒவ்வொரு நாளும் படுக்கையில் ஒருமாதிரி செய்வது உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். தம்பதிகள் இருவரும் புதிதான விஷயங்களை முயற்சிக்க வேண்டும். உண்மையில், நீங்கள் அதைப் பற்றி இன்னும் வெளிப்படையாக இருந்தால், இருவரும் செக்ஸை நன்றாகவும் உற்சாகமாகவும் உணரலாம். எனவே, சிறிது முடியை இழுப்பது அல்லது ரோல் விளையாடுவது போன்று, எதையாவது புதிதாக முயற்சி செய்யுங்கள்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

உடலுறவு பற்றிய பொய்யான கட்டுக்கதைகளையும் அதை பற்றிய அழுத்தத்தையும் நாம் அகற்றினால், உடலுறவு மிகவும் சிறப்பாக இருக்கும். நாம் அனைவரும் மனிதர்கள், சத்தம் எழுப்புவது, நம் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவது மற்றும் நமது உயிரியல் பதில்களை எப்போதும் கட்டுப்படுத்த முடியாது. இவை அனைத்தும் இயல்பானவை, இயற்கையானவை மற்றும் பாலியல் இன்பத்தின் அழகான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

stop saying sorry about these things in bed in tamil

Here we are talking about the stop saying sorry about these things in bed in tamil.
Desktop Bottom Promotion