Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
காதலில் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் இல்லாமல் இருக்க இத பண்ணினாலே போதுமாம் ...!
எந்தவொரு உறவாக இருந்தாலும் அதற்குள் எதிர்பார்ப்புகள் வரும்போதுதான் பிரச்சினையே தொடங்குகிறது. பொதுவாக எதிர்பார்ப்புகள் அதிகம் சிதைப்பது காதலைதான்.
உறவுகள் எப்பொழுதும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும், ஆனால் அனைவரின் துன்பத்திற்கும் காரணமாக இருப்பதும் உறவுகள்தான். அதற்கு காரணம் நமது உறவுகளை நாமே சிக்கலாக்கிக் கொள்வதுதான். எந்தவொரு உறவாக இருந்தாலும் அதற்குள் எதிர்பார்ப்புகள் வரும்போதுதான் பிரச்சினையே தொடங்குகிறது.

பொதுவாக எதிர்பார்ப்புகள் அதிகம் சிதைப்பது காதலைதான். நமது காதலன்/காதலி நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத போது அங்கு ஏற்படும் ஏமாற்றம் அவர்களின் உறவிற்குள் விரிசலை ஏற்படுத்துகிறது. நாம் ஒருவரை நடத்துவது போல அவர்களும் நம்மை நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமெனில் நிச்சயம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த பதிவில் உங்கள் காதலில் எதிர்பார்ப்புகளை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.

புரிந்து கொள்ளுதல்
யாராவது உங்களை அவர்களின் சொந்த வழியில் உங்களை நேசிக்க விரும்பினால் அது உங்களுக்கு புரியாமல் போகலாம். உங்களுக்கு புரியவில்லை என்பதற்காக அவர்கள் உங்களை நேசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. நீங்கள் செய்ய வேண்டியது அவர்களின் செயல்களில் இருக்கும் மாற்றங்களை புரிந்து கொள்வது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால் உங்களுக்குள் தேவையில்லாத எதிர்பார்ப்புகள் தோன்றாது.

உங்களின் தேவைகளை தெரிந்து கொள்ளுங்கள்
உங்களின் உறவிலிருந்து உங்களின் தேவை என்னவென்று கூறுவதில் நேர்மையாக இருங்கள். நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை நீக்கி, யதார்த்தமானவற்றில் செயல்படுவதன் மூலம் நீங்கள் அதைச் செய்யத் தொடங்கலாம்.

தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
எதிர்பார்ப்புகளை யதார்த்தத்துடன் சமப்படுத்த முடியும். உங்கள் எதிர்பார்ப்புகள் எவ்வளவு யதார்த்தமானதாக இருந்தாலும், அவற்றை எப்போதும் பூர்த்தி செய்ய முடியாது. இதனால் நீங்கள் விரக்திக்கு ஆளாகிறீர்கள். இங்கு பரிபூர்ணமானவர்கள் என்று யாரும் இல்லை, எனவே தங்களின் சுயத்தில் சிறந்து விளங்க முயற்சிப்பார்கள். மனிதர்களை பொறுத்தவரை தவறுகள் செய்வது என்பது இயற்கையானதுதான். இங்கு யாரும் சரியானவர்கள் அல்ல. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்காக உங்கள் எதிர்பார்ப்புகளை யதார்த்தத்துடன் அடித்தளமாக வைத்திருக்கலாம்.

கவனமாக கவனிப்பது
மற்ற நபரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட நடத்தையை எதிர்பார்க்கும்போது நீங்கள் விஷயங்களை இன்னும் தெளிவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்குப் பதிலாக அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கத் தொடங்குங்கள்.

உறவுகளின் தரநிலைகள்
தரநிலைகள் என்பது ஒரு நபரில் நீங்கள் கருதும் குணங்கள், நெறிமுறைகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகும். எனவே அவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். மற்றவரின் மீதான உங்களின் தரநிலைகள் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் உங்களின் எதிர்பார்ப்புகள் யதார்த்தமானதாக இருக்க வேண்டும்.

மற்றவரின் நிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள்
நீங்கள் திறந்த மனமுடையவராக இருந்து மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராக இருந்தால் மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் மற்றவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டால் அவர்களின் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று சிந்தித்து பாருங்கள், அதன்பின் உங்களின் உறவை சிதைக்கும் எதிர்பார்ப்புகள் உங்களுக்குள் எழாது.

சண்டைகளின் உதவி
இதற்காக நீங்கள் தினமும் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டுமென்று அவசியமில்லை. மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் செய்தால் சண்டைகள் உங்கள் உறவை மேலும் பலமாக்கும். இதன்மூலம் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவது முட்டாள்தனமான விஷயங்களை எதிர்பார்ப்பதை நிறுத்திவிடும்.



Click it and Unblock the Notifications
