For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா?

பாலியல் விஷயங்களைத் தொடங்குவது ஒரு நபரின் கடமையாக உணருவதற்கு பதிலாக, ஒருவருக்கொருவர் தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்வதற்கான ஒரு வழியாக இதை இருவரும் உருவாக்கலாம்.

|

பெரும்பாலும் நிறைய தம்பதிகளின் முக்கிய பிரச்சனை அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை பற்றியதுதான். பாலியல் வாழ்க்கையில் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம், மற்றொருவர் மகிழ்ச்சியில்லாமல் இருக்கலாம். இது, உடலுறவில் ஈடுபடும் இருவரையும் பொருத்து அமைகிறது. நீங்கள் மற்றும் உங்கள் துணையின் பாலியல் வாழ்க்கை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றி உங்களுக்குதான் தெரியும். தம்பதிகள் இருவரும் போதுமான அளவு நெருக்கமாக இருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்க அவர்களின் உடல் நெருக்கத்தை அளவுருவாக கருதலாம்.

signs you need to bring a change in your sex life

இருப்பினும், சில சமயங்களில் கிடைத்ததை வைத்து நீங்கள் திருப்தி அடைந்தாலும், உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏதோ ஒரு ஏக்கம் இருக்கிறதாக நீங்கள் உணரலாம். அவ்வாறு நீங்கள் இருந்தால், சில மாற்றங்களைக் கண்டறிந்து, காணாமல் போனதாக நீங்கள் உணருவதை நிரப்ப சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. இதை உங்கள் துணைக்கும் நீங்கள் தெரிவித்து உங்கள் பாலியல் வாழ்க்கையை அழகாக மாற்றுங்கள். அவை என்னென்ன முயற்சிகள் என்பதை அறிய, இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனம் திறந்து பேச வேண்டும்

மனம் திறந்து பேச வேண்டும்

முதலில், யாருடைய மனதையும் இங்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் துணை உங்கள் பாலியல் ஆசைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்து நிறைய எதிர்பார்த்தால், அது உங்களுடைய தவறு. நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒருவருக்கொருவர் ஆசைகள் மற்றும் கற்பனைகளைப் பற்றி மனம்திறந்து பேச வேண்டும்.

MOST READ:‘அந்த ' நேரத்தில் ஆண்கள் செய்யுற இந்த விஷயங்கள் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காதாம்...!

செக்ஸ் பற்றி பேசுங்கள்

செக்ஸ் பற்றி பேசுங்கள்

உங்கள் துணை உங்களுக்கு எந்த செயலை செய்ய வேண்டும், எந்த செயலை செய்யக்கூடாது என்பதை நீங்கள் உங்கள் துணையிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் துணையால் இதை செய்ய இயலாது என்று நீங்களே நினைத்துக்கொண்டால், அது தவறு. தம்பதியினர் இருவரும் பாலியல் பற்றி விவாதிப்பது உண்மையில் நல்லது என்பதை உங்கள் துணைக்கு தெரியப்படுத்துங்கள். இருவரும் உங்களுக்குள் இருக்கும் ஆசைகளைப் பற்றி பேசவில்லையென்றால், உடலுறவில் உச்சக்கட்டத்தைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை உங்கள் கூட்டாளருக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒரே நபர் எப்போதும் உடலுறவைத் தொடங்குவது

ஒரே நபர் எப்போதும் உடலுறவைத் தொடங்குவது

தம்பதிகள் இருவரில் எப்போதுமே ஒருவரே உடலுறவைத் தொடங்குபவராக இருந்தால், மற்றவர் இறுதியில் அதற்கு ஒப்புக்கொள்கிறார் அல்லது நேர்மாறாக இருந்தால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய நேரம் இது. நீங்கள் இருவரும் சமமாக உடலுறவில் ஈடுபட்டால் அது உங்கள் உறவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவரும் தொடங்கலாம்

இருவரும் தொடங்கலாம்

பாலியல் விஷயங்களைத் தொடங்குவது ஒரு நபரின் கடமையாக உணருவதற்கு பதிலாக, ஒருவருக்கொருவர் தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்வதற்கான ஒரு வழியாக இதை இருவரும் உருவாக்கலாம். எப்போதும், ஆண்கள்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை, பெண்களும் தொடங்கலாம். ஒவ்வொரு முறையும் பொறுப்பேற்க வேண்டிய பணியில் நீங்கள் இருவருமே சுமையாக இதை உணரமாட்டீர்கள். இருவரும் அதிக ஈடுபாட்டோடு உடலுறவில் ஈடுபடும்போது, அது உங்கள் உறவை வலுப்படுத்துகிறது.

MOST READ:இந்த பொஷிசன்கள் உங்களின் உடலுறவை சுவாரஸ்யமானதாக மாற்றும்...!

ஃபோர்ளேவில் ஈடுபடாதது

ஃபோர்ளேவில் ஈடுபடாதது

ஃபோர்ப்ளே இல்லாத உடலுறவு சலிப்பை ஏற்படுத்தும். உடலுறவின்போது, உங்கள் துணையை மகிழ்ச்சிப்படுத்த ஃபோர்ப்ளே மிக அவசியம். வெறும் இரண்டு அல்லது ஐந்து நிமிடத்தில் முடிவதற்கு உடலுறவு ஒன்றும் மேகி நூடுல்ஸ் இல்லை. ஃபோர்ப்ளேவில் அதிக நேரம் நீங்கள் இருவரும் ஈடுபடும்போது அது உற்சாகமாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். உடலுறவை விரைவாக முடிப்பதை இன்றுடன் முடித்துக்கொண்டு, நேரத்தை அதிகமாக செலவிடுங்கள்.

ஆழமான தொடர்பை ஏற்படுத்தும்

ஆழமான தொடர்பை ஏற்படுத்தும்

ஃபோர்ப்ளேக்கு இன்பத்துடனும் திருப்தியுடனும் எந்த தொடர்பும் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறாக இருக்கலாம். உங்கள் துணை எதை விரும்புகிறார் என்பதை அறிய ஒரு வழி ஃபோர்ப்ளே. மேலும், இது உண்மையில் உடலுறவில் ஈடுபடாமல் மற்றொரு நிலை திருப்தியைக் கொண்டுவரும். உங்கள் கூட்டாளருடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தவும் இது உங்களுக்கு உதவும்.

வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள்

வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள்

நீங்களும் உங்கள் கூட்டாளியும் உடலுறவை ஒரே மாதிரியாக மீண்டும் மீண்டும் செய்திருந்தால், இது உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நேரம். ஒரே பாலின வழக்கத்தைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அதை மேலும் உற்சாகப்படுத்தும் வழிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் சமையலறையில் அன்பை உருவாக்க முயற்சி செய்யலாம் அல்லது கண்ணை மூடிக்கொண்டு விளையாடுவதை பற்றி சிந்திக்கலாம்.

MOST READ: உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா?

ஆதிக்கம் செலுத்துங்கள்

ஆதிக்கம் செலுத்துங்கள்

இது தவிர, இருவரும் கவர்ச்சியான ஆடைகளை அணியலாம். குறிப்பாக பெண்களின் விஷயத்தில் உள்ளாடை போன்ற ஆடைகள் உடலுறவிற்கு முக்கிய பங்கு விளைவிக்கிறது. காதல் உணர்வின்போது வழக்கமாக ஆதிக்கம் செலுத்துபவர் நீங்கள் என்றால், இந்த நேரத்தில் உங்கள் துணை ஆதிக்கம் செலுத்தட்டும். இந்த வழியில் நீங்கள் நிச்சயமாக உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

உடலுறவுக்குப் பிறகு உறவு

உடலுறவுக்குப் பிறகு உறவு

உடலுறவு முடிந்த பின்பு வேலை முடிந்தது என்று பின்னால் திரும்பி தூங்க வேண்டாம். நீங்கள் இருவரும் அன்பையும், மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பாரிமாரிக்கொண்ட பின் இவ்வாறு நடந்து கொள்வது உங்கள் துணை புறக்கணிக்கப்பட்டதாக உணரப்படலாம். எனவே, உடலுறவுக்குப் பிறகு உங்கள் துணையுடன் நீங்கள் பழகுவது அவர் அல்லது அவள் நேசிக்கப்படுவதை உணரக்கூடும். இது உங்கள் வாழ்க்கையில் காதலையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும். இது உங்கள் பாலியல் வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியைத் தரும்.

குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்

குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்

சில நேரங்களில் தம்பதிகளில் சிலர் பாலியல் வாழ்க்கையில் எந்தவிதமான உற்சாகமும், சந்தோஷமும் இல்லாத காரணத்திற்காக தங்கள் துணையின் மீது பழியை சுமத்துகிறார்கள். ஆனால் இது சரியான விஷயம் அல்ல. இது உங்கள் பாலியல் வாழ்க்கை மற்றும் உறவு இரண்டிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

MOST READ:உடலுறவின்போது உங்களுடைய உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க இத செய்யுங்க போதும்...!

ஊக்கப்படுத்த வேண்டும்

ஊக்கப்படுத்த வேண்டும்

நீங்கள் இருவரும் உங்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை நீங்களும் உங்கள் துணையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, முழு குற்றச்சாட்டையும் ஒரு நபர் மீது வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. உண்மையில், உங்கள் பாலியல் வாழ்க்கையில் இழந்த இன்பங்களை மீண்டும் கொண்டுவருவதற்கான சில வழிகளை நீங்கள் கண்டுபிடித்து அதை மேலும் உற்சாகப்படுத்தலாம். உங்கள் துணையை ஊக்கப்படுத்துங்கள்.

ஆழமான பிணைப்பு

ஆழமான பிணைப்பு

உற்சாகமான பாலியல் வாழ்க்கைக்கு குறுக்குவழி எதுவும் இல்லை. உங்களின் உண்மையான முயற்சிகள் மற்றும் உண்மையான அன்புதான் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, உங்கள் துணையுடன் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தலாம். இதனால் நீங்கள் இருவரும் செக்ஸ் பற்றி பேசும்போது ஒரே பக்கத்தில் இருக்க முடியும். இந்த வழியில் நீங்கள் ஒரு சிறந்த பாலியல் வாழ்க்கையை நோக்கி நகரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

signs you need to bring a change in your sex life

Here we talking about the signs that you need to bring a change in your sex life.
Desktop Bottom Promotion