For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் அந்த காதல் எவராலும் அசைக்க முடியாத காதலாம்... உங்க காதல் எப்படி?

|

ஆரோக்கியமான காதல் என்பது பல ஆண்டு அன்பு மற்றும் பொறுமையின் மூலம் உருவாக்கப்படுவதாகும். இந்த இரண்டில் ஒன்று குறைந்தாலும் காலப்போக்கில் உங்கள் காதல் போரடிக்கத் தொடங்கி காதலில் உற்சாகத்தை இழப்பீர்கள். உங்கள் துணையுடனான உங்களின் காதலை நிர்ணயிக்கும் விஷயங்கள் பல உள்ளது.

இணக்கமான உறவிலிருந்து தொடங்கி மரியாதைக்குரிய உறவாக மாறுவதற்கு முன் அவர்களின் உறவின் தரத்தை நிர்ணயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் ஒரு நீண்ட கால அல்லது குறுகிய கால உறவில் இருந்தாலும் அல்லது திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் அல்லது நீண்ட தூர உறவில் இருந்தாலும் உங்கள் காதல் உடைக்க முடியாததா என்பதை நிர்ணயிக்கும் சில ரகசியங்கள் இருக்கிறது. உங்கள் காதல் உடைக்க முடியாத காதல் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி அவர்களை மிஸ் செய்வது

அடிக்கடி அவர்களை மிஸ் செய்வது

நீங்கள் வேலைக்காக உங்கள் கூட்டாளரிடமிருந்து விலகி இருக்கும்போதும் அல்லது சில குடும்பத்தினருடன் இருக்கும்போதும், உங்கள் துணையின் எண்ணம் இன்னும் உங்கள் இதயத்தைத் தூண்டுவதாகத் தோன்றினால், உங்கள் உறவு சரியான பாதையில் உள்ளது. நீங்கள் இன்னும் பிஸியாக இருக்கும்போது கூட, நீங்கள் அவர்களை இன்னும் மிஸ் செய்கிறீர்கள் என்பது, அவர்கள் மீதான உங்கள் அன்பைப் பற்றி அதிகம் பேசுகிறது.

தூரத்தில் இருந்தாலும் நம்பிக்கை சிக்கல்கள் இல்லை

தூரத்தில் இருந்தாலும் நம்பிக்கை சிக்கல்கள் இல்லை

பாதுகாப்பற்ற தன்மை, நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகங்கள், பொதுவாக தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொலைவில் இருக்கும்போது எழுகின்றன. உங்கள் துணையைப் பற்றி நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் இரண்டு நபர்களுக்கிடையிலான பிணைப்பின் தரத்தை அளவிட முடியும். சொல்லப்போனால் உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் ஒருவரை ஒருவர் நம்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், நெருக்கடி காலங்களில் கூட நீங்கள் இருவரும் நிச்சயமாக ஒரு வலுவான உறவில் இருக்கிறீர்கள்.

புதிய விஷயங்களை ஒன்றாக முயற்சிப்பது

புதிய விஷயங்களை ஒன்றாக முயற்சிப்பது

காலப்போக்கில் அனைத்தும் நேரத்தை பொறுத்து மாறக்கூடும். ஆனால் இன்னும் நீங்கள் உங்கள் துணையுடன் இரவில் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கிறீர்கள் என்றால் அல்லது சாகசப்பயணத்திற்கு ஒன்றாக விரும்பி செல்கிறீர்கள் என்றால் நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து மகிழ்வதற்கும் நினைவுகளை உருவாக்குவதற்கும் ஒன்றாக முயன்றால் உங்கள் காதல் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும்.

தங்கத்தை பிரசாதமாக விசித்திரமான இந்திய கோவில் எங்க இருக்குத் தெரியுமா? உடனே கிளம்புங்க...!

ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வை பகிர்ந்து கொள்வது

ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வை பகிர்ந்து கொள்வது

நீண்ட காலமாக அதே நகைச்சுவை உணர்வைப் பகிர்வது என்பது, நீங்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் இருந்த அதே நண்பர்களாக இருப்பதற்கான அறிகுறியாகும். இது உங்கள் உறவின் இயக்கவியல் மாறும்போது கூட ஒருபோதும் இழக்க முடியாத ஒரு பிணைப்பாகும். எனவே, நீங்கள் இருவரும் நிச்சயமாக நீண்ட காலம் ஒன்றாக பயணிக்கப் போகிறீர்கள்.

சிக்கல்களை சமாளிக்க ஒன்றாக முயல்வது

சிக்கல்களை சமாளிக்க ஒன்றாக முயல்வது

சிக்கல்கள் மற்றும் நெருக்கடி நிறைந்த சூழ்நிலைகள் தவிர்க்க முடியாதவை. நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒன்றாகக் கையாளும் கலையைக் கற்றுக் கொண்டால், உங்கள் உறவு நிச்சயமாக பாதுகாப்பான நிலையில் உள்ளது, மேலும் உங்கள் பிரச்சினைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் சிக்கல்களை ஒன்றாக சமாளிப்பவர்களை எந்தவித வெளிப்புற தூண்டுதலும் பிரிக்க இயலாது.

உறவில் சமமாக ஆர்வம் காட்டுவது

உறவில் சமமாக ஆர்வம் காட்டுவது

உங்களுக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது, ஆச்சரியங்களைத் திட்டமிடுவது மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், உங்கள் உறவில் வலுவான தொடர்பைப் பிரதிபலிக்கிறது. உங்கள் கூட்டாளருக்கு நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் பிணைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது.

ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்வது

ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்வது

நீங்கள் விரும்பும் நபரை கவனிப்பு, பச்சாதாபம் மற்றும் பாராட்டுடன் நடத்துவதை விட ஆரோக்கியமான உறவின் வலுவான அறிகுறி எதுவுமில்லை. மற்றவர்களிடம் காட்டுவதை விட நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிக அக்கறை மற்றும் கவனிப்பு செலுத்துகிறீர்கள் என்றால் உங்கள் உறவு அசைக்க முடியாததாக இருக்கும்.

சாப்பிட்டவுடன் இந்த செயல்களை தெரியாம கூட செஞ்சிராதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...!

ஆரோக்கியமான சண்டைகள்

ஆரோக்கியமான சண்டைகள்

கருத்து வேறுபாடுகள் இயல்பானவை, எனவே நீங்கள் சண்டையிடவில்லை என்றால், நீங்கள் காதலில் இருந்து பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆரோக்கியமான உறவுகளில் உள்ளவர்கள் சண்டையிடும்போது, அவர்கள் நியாயமாகவும் போராடுவார்கள். இவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்பதைக் காட்டிலும் துணையின் தரப்பை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs of Strong Relationship in Tamil

Here are the signs you are in a rock-solid relationship with your partner.