For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மனைவிக்கு உடலுறவு மேல் வெறுப்பு ஏற்படுவதற்கு இதில் ஒன்றுதான் காரணமாக இருக்குமாம் தெரியுமா?

|

ஒரு உறவு மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் தொடர நெருக்கம் மிகவும் முக்கியமானது. இது காதலை உயிரோடு வைத்திருக்கிறது, உங்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக கொண்டுவருகிறது, மேலும் ரொமான்ஸை கட்டுக்குள் வைத்திருக்கும். இருப்பினும், காலப்போக்கில் கவர்ச்சியையும் ஈர்ப்பையும் இழப்பது பல உறவுகளில் மிகவும் பொதுவானது.

பல சந்தர்ப்பங்களில் இந்த ஆர்வ இழப்பு பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது. காலப்போக்கில் உங்கள் மனைவி உங்களை நெருங்குவதற்கு ஆர்வம் காட்டாமல் போகலாம். அது ஏன் நடக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறவில் அதிருப்தி

உறவில் அதிருப்தி

பாலியல் ஆசை பெண்கள் உறவைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதோடு நேரடியாக தொடர்புடையது. உங்கள் மனைவி உங்களிடம் கோபமாக இருந்தால் அல்லது திருமணத்தில் அதிருப்தி அடைந்தால், உடலுறவு கொள்ளும் எண்ணம் அவர்கள் மனதில் தோன்றாது. இந்த விஷயத்தில், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க வேண்டும் மற்றும் உடலுறவிற்கு தயாராகும் முன் அவர்கள்ள் குறிப்பிடும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் மேல் நம்பிக்கையை இழப்பது

உங்கள் மேல் நம்பிக்கையை இழப்பது

உங்கள் மனைவி உங்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தால், நீங்கள் ஒரு வாக்குறுதியை மீறிவிட்டீர்கள் அல்லது அவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கலாம். உங்கள் உறவை வசீர்க்கரமானதாக வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பினால் கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளைத் தேட முயற்சிக்கவும். அவளரிடம் மன்னிப்பு கேளுங்கள், அவர்களுடைய நம்பிக்கையை மீண்டும் வெல்லுங்கள்.

உடலுறவு வலிநிறைந்ததாக இருக்கும்

உடலுறவு வலிநிறைந்ததாக இருக்கும்

வயது அதிகரிக்கும் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஏற்ற இறக்கங்கள் பாலியல் இயக்கத்தை பாதிக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் அவர்களிடம் அதிகமாக ஈர்க்கப்படுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள், நெருக்கமாக இருக்க புதிய முறைகளை ஆராயவும்.

MOST READ: வியட்நாமில் புதிதாக தோன்றியுள்ள காற்றிலேயே பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன தெரியுமா?

தனிப்பட்ட மற்றும் அலுவலக வேலையால் சுமை

தனிப்பட்ட மற்றும் அலுவலக வேலையால் சுமை

உங்கள் மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தால், எல்லாவற்றையும் நிர்வகிப்பது மிகவும் கடினம். தொழில் மற்றும் தனிப்பட்டவேலைகளின் பெரும் சுமை பெரும்பாலும் பெண்களை சோர்வடையச் செய்கிறது. அவர்களுடைய சில சுமைகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்த சிக்கலை நீங்கள் சரிசெய்யலாம். வீட்டுப் பொறுப்புகளில் நீங்கள் அவளுக்கு உதவலாம், எனவே அவர்கள் நெருங்கிய உறவுக்கு சிறிது நேரம் ஒதுக்குவார்கள்.

சீண்டல்கள் இல்லாமலேயே இருப்பது

சீண்டல்கள் இல்லாமலேயே இருப்பது

உடல்ரீதியான செயல்பாட்டையும் தாண்டி உடலுறவில் அதிக விஷயங்கள் உள்ளது. இது நாள் ஆரம்பத்தில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தத்தைப் பற்றியது, நடைபயிற்சி போது ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக் கொள்வது போன்றவை அடங்கியது. இவை அனைத்தும் உங்கள் துணைக்கு ஈர்ப்பு எப்போதும் போல் வலுவாக இருப்பதைக் காட்டுகின்றன. இதனால், ஒவ்வொரு நாளும் உடல்ரீதியான தொடர்பு மற்றும் அக்கறையில் கவனம் செலுத்துங்கள், மேலும் உடலுறவுக்கு மிக வேகமாக செல்ல வேண்டாம்.

மனச்சோர்வு

மனச்சோர்வு

சில காரணங்களால் உங்கள் மனைவி மனச்சோர்வடையக்கூடும், அதனால் அவர்களால் உங்களுடன் உணர்வுபூர்வமாக இணைய முடியாது. அவர்கள் மனச்சோர்வடைவதற்கான காரணத்தை நீங்கள் தேட வேண்டும். மனச்சோர்வு ஒருவரின் மனநிலை மற்றும் அணுகுமுறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் அவர்களுடன் பேச வேண்டும், அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு உதவ வேண்டும்.

MOST READ: காதல்னு சொன்னாலே தலைதெறிக்க ஓடும் ராசிகள் என்னென்ன தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கா?

வழக்கமான செயல்பாடாக மாறுவது

வழக்கமான செயல்பாடாக மாறுவது

நீங்கள் அல்லது உங்கள் மனைவி செக்ஸ் மிகவும் கணிக்கக்கூடியதாகிவிட்டதாக உணர்ந்தால் - அதே நேரம், அதே இடம், அதே நிலைகள் போன்றவற்றை புதிய விஷயங்களை ஆராய்வதற்கான நேரம் இதுவாக இருக்கலாம். உங்கள் எல்லைகளைத் தவிர்த்து, அந்த தருணத்தை அனுபவித்து மகிழுங்கள், இதன்மூலம்உங்கள் மனைவியும் உங்களுடன்நெருக்கமாக இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Your Wife Avoids Being Intimate

Here are the reasons why your wife avoids being intimate with you.
Story first published: Monday, May 31, 2021, 18:47 [IST]