Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
பெண்கள் ஆண்களிடம் ரகசியமாக எதிர்பார்க்கும் 'அந்த' குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?
காதல் விஷயங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே எப்போதும் தனித்தனி எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் போது அந்த உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
காதல் விஷயங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே எப்போதும் தனித்தனி எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் போது அந்த உறவில் நெருக்கம் அதிகரிக்கும். பொதுவாக ஆண்கள் உறவுகளில் தங்கள் எதிர்பார்ப்புகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பார்கள், ஆனால் பெண்கள் எப்போதும் தங்கள் துணையைப் பற்றி சில வகையான ரகசிய ஆசைகளை வைத்திருப்பார்கள்.

உண்மையில், அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் ஆண்கள் கிடைப்பது உண்மையில் மிகவும் கடினம். அவர்கள் அனைவரும் ஏதாவது விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். ஆனாலும், அவர்கள் தங்கள் காதலனிடம் அந்த விஷயங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆண்களிடம் அவர்கள் ரகசியமாக விரும்பும் சில குணாதிசயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைவரும் மதிப்பவராக இருக்க வேண்டும்
பெண்கள் தாங்கள் மதிக்கக்கூடிய மற்றும் தாங்கள் நினைத்து பெருமைப்படக்கூடிய ஒரு ஆண் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். ஒரு ஆண் வலுவான ஆளுமை, நேர்மை, புத்திசாலித்தனம் மற்றும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள்.

மன்னிப்புக் கேட்பவர்கள்
ஒரு பெண் தன்னை மதிக்கும், மரியாதைக் கொடுக்கும் மற்றும் தன் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் ஆண்களையே விரும்புகிறார்கள். ஒரு ஆண் தவறு செய்தால், அவர் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் காதலரால் எப்போதும் பாராட்டப்படுவதையும் விரும்புகிறார்கள்.

வெளிப்படையானவர்கள்
பெண்கள் உணர்ச்சிகளின் மீது கட்டமைக்கப்பட்ட இணைப்பில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே, விமர்சனங்களுக்குப் பயப்படாமல், அந்தத் தொடர்பை ஏற்படுத்த ஆண்கள் தங்கள் பயங்களையும் கவலைகளையும் தங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த வழியில், அவர்கள் இருவரும் உண்மையில் ஆறுதலான துணையாக மாறுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் காதலிப்பவர்கள்
ஒரு பெண் மீண்டும் மீண்டும் காதலிக்கக்கூடிய ஒரு ஆணை விரும்புகிறார். எனவே ஒரு ஆண் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க உறவில் எப்போதும் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் காதலியைப் பாராட்ட வேண்டும் மற்றும் அவர்கள் தங்களுக்கு எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட ஈடுபடும் காட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

பொறுப்பானவர்கள்
இறுதியாக, ஒரு பெண் தங்கள் விஷயங்களில் பொறுப்பாக மற்றும் நேர்மையாக இருக்கும் ஆணை விரும்புகிறார்கள். தங்கள் காதலியை எப்போதும் கோபப்படுத்தும் ஆண்கள் பெண்களால் விரும்பப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு ஆணின் துணையாக இருக்க விரும்புகிறார்களே தவிர, அவர்களின் தாயாக அல்ல.

குட்டி சர்ப்ரைஸ்கள்
சாக்லேட், காதல் கவிதைகள் மற்றும் பூங்கொத்து என சின்ன சின்ன சர்ப்ரைஸ்களை பெண்கள் ஆண்களிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். பெண்கள் எப்போதும் எண்ணிக்கைகளை பொருட்படுத்துவதில்லை, அது கொடுக்கப்படும் தருணத்தையும், கொடுக்கப்படும் விதத்தையுமே கவனிப்பார்கள்.



Click it and Unblock the Notifications