Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
உலகம் முழுவதும் ஆண்கள் உடலுறவின் போது செய்யும் தவறுகள் இவைதானாம்... இனிமேலாவது பண்ணாம இருங்க...!
பொதுவாக உடலறுறவின் போது ஆண், பெண் இருவருமே ஒருவிதமான கிளர்ச்சி நிலையில் இருப்பார்கள். இந்த கிளர்ச்சி நிலைதான் அவர்களின் உறவை முழுமையாக அனுபவிக்க உதவுகிறது.
பொதுவாக உடலறுறவின் போது ஆண், பெண் இருவருமே ஒருவிதமான கிளர்ச்சி நிலையில் இருப்பார்கள். இந்த கிளர்ச்சி நிலைதான் அவர்களின் உறவை முழுமையாக அனுபவிக்க உதவுகிறது. இருவரில் ஒருவருக்கு இந்த கிளர்ச்சி நிலை இல்லையென்றாலும் அந்த உறவு முழுமையானதாக இருக்காது. இந்த கிளர்ச்சி நிலை சீர்குலைய பெரும்பாலும் ஆண்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

உண்மைதான், பாலியல் உறவின் போது ஆண்கள் செய்யும் சில அறிவீனமான செயல்கள் அவர்களுடைய துணையின் கிளர்ச்சி நிலையை பாதித்து அந்த இனிமையான தருணத்தை மோசமான அனுபவமாக மாற்றுகிறது. இந்த பதிவில் பெரும்பாலும் ஆண்கள் படுக்கையில் செய்யும் தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

முத்த தவறுகள்
இதனை நம்புவது கடினம்தான், பெரும்பாலான தம்பதிகள் உடலுறவின் போது தங்கள் துணையை முத்தமிடுவதில்லை, இதில் பெண்களும் அடங்குவர். இதற்கு காரணம் அவர்கள் உறவு கொள்ளும் நிலை அல்லது உச்சக்கட்டத்தை விரைவாக அடைய இருக்கும் ஆர்வமாகும். முத்தமிடுவது இந்த கிளர்ச்சி நிலையை சிதைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். கலவியின் போது முத்தமிடுவது உங்கள் அனுபவத்தை இருமடங்காக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பிறப்புறுப்பில் மட்டும் கவனம் செலுத்துவது
கலவியின் போது பிறப்புறுப்பு என்பது முக்கியமானதுதான், ஆனால் ஆண்கள் தங்கள் துணையின் மற்ற பாகங்களுக்கும் கண்டிப்பாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முழங்கால்கள், மணிக்கட்டு, மார்பகங்கள், கன்னம் என அனைத்து பாகங்களும் உங்கள் கலவியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும். இது உங்கள் துணையின் உற்சாகத்தை பலமடங்கு அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இதனை செய்வதில்லை.

மொத்த எடையையும் துணை மீது சுமத்துவது
இது ஆண், பெண் இருவருமே படுக்கையில் செய்யும் தவறாகும். கலவியின் போது உற்சாகமான மனநிலையில் இருப்பதால் இருவருமே கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார்கள். அனால் தங்கள் துணையின் மீது தன்னுடைய முழு எடையையும் சுமத்தக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இது உங்கள் துணைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதுடன் சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். இது நல்ல தருணத்தை மோசமான தருணமாக மாற்றும்.

துணை ரெடியாவதற்கு முன் ஆக்ரோஷமாக செயல்படுவது
சில தம்பதிகள் ஆக்ரோஷமான உடலுறவை விரும்புவார்கள், ஆனால் அதற்கு அவர்கள் சரியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். கலவியின் போது துணையை ஆக்ரோஷமாக கடிப்பது துணைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அல்லது அவர்களை பயமுறுத்தும். எனவே உங்கள் துணை முழுமையாக தயாரான பிறகு உறவில் ஈடுபடுவது நல்லது.

விரைவான/தாமதமான உச்சக்கட்டம்
இது குறிப்பாக ஆண்களுக்கு. நீங்கள் ஒரு சரியான நேரத்தில் உயிரணுக்களை வெளியேற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த உங்கள் தசைகளில் நல்ல கட்டுப்பாடு இருக்க வேண்டும். விரைவாக நீங்கள் உச்சக்கட்டத்தை அடைவது உங்கள் துணைக்கு ஏமாற்றமாக இருக்கலாம், நீண்ட நேரம் உச்சக்கட்டம் அடையாமல் இருப்பது உங்கள் துணைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க முன்விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிட வேண்டும்.

உச்சக்கட்டத்தை பற்றி கூறாமல் இருப்பது
இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். நீங்கள் உச்சக்கட்டத்தை அடையப்போகிறீர்கள் என்றால் அதனை உங்கள் துணைக்கு முன்கூட்டியே கூறவேண்டியது அவசியம். நான் உச்சக்கட்டத்தை அடையப்போகிறேன் என்ற சாதாரண வார்த்தை கூட போதுமானது. உங்கள் துணைக்கு அதனை தெரிந்து கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது.

ஆபாசப்படம் போல செயல்படுவது
சில ஆண்கள் ஆபாசப்படங்களில் வருவது போல கலவியை விரும்பினாலும், அத்தகைய நடத்தையில் ஈடுபடுவதற்கு முன்பு உங்கள் துணையுடன் பேசுவது புத்திசாலித்தனமாக இருக்கும். உங்கள் துணைக்கு முதலில் பிடிக்குமா என்று தெரியாமல் நீங்கள் அவர்களுடன் அந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவது அந்த தருணத்தை மோசமானதாக மாற்றும்.

அமைதியாக இருப்பது
உரையாடலுடன் கூடிய கலவிதான் இருமடங்கு இன்பத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. நிச்சயமாக ஆண், பெண் இருவருமே இதனை ரசிப்பார்கள். எனவே அவர்களின் விருப்பத்தை மதிப்பது உங்களின் கடமையாகும். சிறிய பாராட்டு அல்லது ரசனையான வார்த்தைக் கூட உங்கள் துணைக்கு இன்பத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications