For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  யாரும் அறியாத ஆன்லைன் டேட்டிங் தளங்களின் அகோர முகம்!

  |

  இது ஒரு ஆன்லைன் யுகம். ஒரு விளம்பரத்தில் வருவதை போல, வீட்டில் உட்கார்ந்து கொண்டே அனைத்து வேலைகளையும் செய்துவிடலாம்... சலூன் செல்வதை தவிர்த்து. கரண்ட் பில், கேஸ் பில், ஷாப்பிங், பேங்கிங், சினிமா, ரயில், பஸ், ஃப்ளைட் டிக்கெட் புக் செய்வது என அனைத்தும் விரல்நுனியில்.

  இந்த டிஜிட்டல் முறை நம் வாழ்க்கையை மிக எளிதானதாக மாற்றிவிட்டது அல்லவா... ஆனால், இந்த மாய உலகில் காதல் மட்டும் உண்மையானதாக கிடைக்காது. காதல் என்பது ஒருவரை பார்த்தவுடன் பிறக்கலாம்... ஆனால், வளராது... அது வளர வேண்டுமெனில் அவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

  சிங்கிள்ஸாக இருப்பவர்களுக்கு என்றே பல ஆன்லைன் டேட்டிங் தளங்கள், செயலிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் அகோரமான வேறொரு முகத்தை பலரும் அறிந்துக் கொள்வதை இல்லை. ஆன்லைன் தளங்களில் அதிக நேரம் செலவழித்த பயனாளிகள் சிலர் கூறும் பகீர் உண்மைகள் இதோ....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  திருமணமானவர்கள்!

  திருமணமானவர்கள்!

  நான் ஆன்லைன் டேட்டிங் தளங்களில் பல திருமணமானவர்களின் முகவரிகளை கண்டுள்ளேன். இல்லறத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கேளிக்கை அவர்களுக்கு தேவைப்படுவதை அறிய முடிகிறது. எனது தோழி ஒருவர் ஆன்லைன் டேட்டிங் தளத்தின் மூலமாக அறிமுகமான ஆணுடன் ஒருசில முறை டேட் செய்தார்.

  பின்னாட்களில் தான், அவர் தனக்கு திருமணமான உண்மையை கூறினார். தன் கணவர் வேறு பெண்களுடன் டேட் செய்து வருகிறார் என்ற விபரம் அந்த நபரின் மனைவிக்கு சுத்தமாக தெரியாது.

  கேசுவல் செக்ஸ்!

  கேசுவல் செக்ஸ்!

  உண்மையில் டேட்டிங் தளங்கள் மூலம் காதலிப்பவர்கள் எல்லாம் லட்சத்தில், கோடியில் ஒருவராக தான் இருக்க முடியும். இங்கே ப்ரீமியம் அக்கவுண்ட் மூலம் நுழையும் பலரும் டெக்ஸ்ட்டிங், செக்ஸ்டிங், கேசுவல் செக்ஸ் மூலம் வாழ்க்கையை என்ஜாய் செய்வதற்கு தான் வருகிறார்கள்.

  இந்த தலைமுறையில் ஒன் நைட் ஸ்டாண்ட் பெருகி வருகிறது. சிலர் கேசுவல் உறவில் இணைகிறார்கள். சிலர் அதை கொஞ்ச காலம் நகரத்தி செல்கிறார்கள். யாரோ ஓரிருவர் தான் காதலிலும், இல்லறத்திலும் இணைகிறார்கள். இங்கே உண்மையான காதலை தேடி அலைவது என்பது முட்டாள்தனம்.

  ப்ரேக்-அப்?!

  ப்ரேக்-அப்?!

  முன்பு ப்ரேக்-அப் என்பது பெரிய வலி. ஒரு நீண்ட ஆலோசனைக்கு பிறகு, இனிமேல் அவன் / அவளுடன் உறவில் இருப்பது என்பது ஆகாத காரியம், இது சரிப்பட்டு வராது என்பதை... பல வாய்ப்புகள் அளித்து அது வீணான பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. ப்ரேக்-அப் செய்த பிறகும் கூட அந்த காதலை மறக்க முடியாமல் மாதங்கள், வருடங்கள் வலியுடன் கழித்த காதல் உள்ளங்கள் ஏராளம்.

  ஆனால், இன்றோ! ப்ரேக்-அப்பான அடுத்த சில மணி நேரங்களில் ஒரு டேட்டிங் ஆப் இன்ஸ்டால் செய்து சில பெண்களை ஸ்வைப் செய்து பேச துவங்கிவிடுகிறார்கள். உங்கள் மனதுக்குள் ப்ரேக்-அப் ஒரு வலியோ, காயமோ ஏற்படுத்தவில்லை எனில், அந்த உறவுக்கு பெயர் எப்படி காதலாக இருந்திருக்க கூடும்.

  முகம் பார்த்து பழகு...

  முகம் பார்த்து பழகு...

  டேட்டிங் தளங்கள் மற்றும் செயலிகளில் நடக்கும் பெரும் தவறே முகத்தை பார்த்து பழகுவது தான். ஒருசில அழகான (எடிட்டிங் மற்றும் ஃபில்டர் சேர்க்கப்பட்ட) படங்களை கண்டும், அவர்கள் பயோ செக்ஷனில் ஈர்ப்பாக எழுதியிருக்கும் (Ctrl+c, Ctrl+V செய்த) வாக்கியங்களை கண்டும் இடதுபுறம் ஸ்வைப் செய்வதா?, வலதுபுறம் ஸ்வைப் செய்வதா? என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

  ஒருவரை அவர் மனம் அறிந்துக் கொள்ளாமல் நிராகரித்தும், ஆதரித்தும் பழக துவங்குவது உறவே இல்லை. அங்கே நமது கவனம் முழுக்க கவர்ச்சி அழகில் தான் கொட்டிக் கிடக்கிறது. உண்மையில் இதுபோன்ற ஆன்லைன் டேட்டிங் தளங்களில் நிராகரிக்கப்படுவதன் மூலமாகவும் மனம் புண்படும் நபர்கள் இருக்கிறார்கள்.

  விபரீத விளையாட்டு!

  விபரீத விளையாட்டு!

  நான் ஒரு பெண்ணுடன் ஆன்லைன் டேட்டிங்கில் மேட்ச் ஆனேன். உடனேயே எங்கள் இருவருக்குள்ளும் ஒரு கனக்ஷன் உண்டானது. நாங்கள் ஓரிரு மாதங்கள் சாட்டிங் செய்து வந்திருப்போம். எல்லாமே நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை நேரில் சந்தித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், ஒருநாள் திடீரென என்னை அவர் அன்-மேட்ச் செய்துவிட்டாள்.

  அதை கண்டு நாம் அதிர்ச்சி அடைந்தேன். நான் அவள் மீது அளவு கடந்த நேசம் கொண்டிருந்தேன். அவள் எதற்காக என்னை பிரிந்தால் என்பதை என்னால் அறிந்துக் கொள்ளவே முடியவில்லை. ஒரு நபருக்காக என் வாழ்வின் முக்கிய நாட்களில், பலமணி நேரத்தை செலவழித்தேன். ஒரே ஒரு கிளிக்கில் அவள் என்னை நீக்கிவிட்டாள்.

  அவள் மீது கோபம் வருவதற்கு பதிலாக, நான் தான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ, அவளை இழந்துவிட்டேனோ என மனம் வருந்த துவங்கினேன். ஒருவேளை அவள் என்னுடன் டைம் பாஸ் செய்வதற்காக கூட பழகி இருக்கலாம். நான் தான் அதை உண்மை என்று கருதி நேசிக்க துவங்கிவிட்டேன் போல.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Dark Side of Online Dating in Tamil

  How Online Dating Sites and Apps are Working. Some People thinks it is entertaining and interesting. But, actually it ruins our relationship.
  Story first published: Friday, July 27, 2018, 12:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more