Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்...
ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவர் மற்றொருவரைக் கவர வேண்டுமென்றால், அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய பாடி லேங்குவேஜ் தான்.
ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவர் மற்றொருவரைக் கவர வேண்டுமென்றால், அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய பாடி லேங்குவேஜ் தான்.

ஒருவருடைய மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கூட அழகாக முகம் மற்றும் உடல் மொழி மூலமாகச் சொல்லிவிட முடியும். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள்.

உடல்மொழி
நம்முடைய மனதுக்குள் நினைப்பதை நம்முடைய உடல்மொழி அப்படியே அடுத்தவர்குளுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதிலும் ஆண், பெண்களுக்கு இடையே உள்ள உடல்மொழியைப் பற்றி சொல்லவா வேண்டும். ஆண் தன்னிடம் என்ன சொல்ல நினைக்கிறான் என்பதை பெண்ணும் பெண் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று ஆணும் அவரவர்களுடைய உடல்மொழியை வைத்தே எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

செக்ஸில் உடல்மொழி
மற்ற பொதுவாக விஷயங்களில் மட்டுமல்லாது, செக்ஸிலும் ஆண் மற்றும் பெண் இருவருடைய உடல் மொழியும் மிகமிக முக்கியம். ஒரு ஆண் பெண்ணைக் கவர்வதற்காக அதற்காகத்தான் மெனக்கெடுகிறார்கள். பெண்களுக்கு அது மிக நன்றாக புரியும். ஆனால் தெரியாததுபோலவே புரியாமலே இருப்பது போலவே அலைக்கழிப்பார்கள். ஆனால், பெண்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிஞ்சுகிட்டா ஆண்களுக்குத் தான் நல்லது. பெண்கள் பொதுவாக எதையும் வெளிப்படையாக சொல்வதில்லை. உடல்மொழி மூலமாக, தான் வெனிப்படுத்துவார்கள். அதில் சில உடல்மொழி மூலம் பெண்கள் ஆண்களைக் கவரவேண்டும் என்றும் தங்களுடைய செக்ஸ் விருப்பத்தையும் சொல்வார்கள். அதை ஆண்கள் உணர்ந்து கொண்டால், தங்களால் தங்களைக் கண்ட்ரோல் பண்ணிக் கொள்ளவே முடியாதாம். அப்புறமென்ன. ஒரே கட்டில் கலாட்டா தான். அப்படி என்னென்ன உடல்மொழிகளை பெண்கள் செய்தால், ஆண்கள் உடனே காதல் மழையை பொழிய ஆரம்பிப்பார்கள் என்று பார்க்கலாம்.

கண்ணும் கண்ணும்
மனதில் உள்ள ஒட்டுமொத்த ஆசைகளையும் மனதிலிருந்து தங்களுடைய கண்களுக்குள் கொண்டு வந்து, அதை ஆண்களின் கண்களோடு சேர்த்து பேசும்படி, கண்ணோடு கண் பேசினீர்கள் என்றால், ஆண்கள் அப்படியே கவிழ்ந்து விடுவார்கள். ஏனென்றால் பெண்கள் எப்போதுமே கண்ணோடு கண் பேசினால் அதை நுரடியாக சந்திக்க ஆண்கள் படாதபாடு படுவார்கள்.

உதட்டைக் கடித்தல்
தங்களுடைய கீழுதட்டை பெண்கள் ஓரப் பற்களால் கடித்தால் போதும் அதுதான் ஆண்களை சூடேற்றும் மருந்து. அல்லது சில பெண்கள் உதட்டில் விரல்களை வைத்து லேசாக உதட்டை சுழித்துக் கொண்டு ஒரு உடல்மொழியை வெளிப்படுத்துவார்கள். அப்படி செய்தால் அதன்பின் ஆண்களால் சும்மாவே இருக்க முடியாது. இப்போது என்ன நாம் செய்தால் பெண்ணுக்கு பிடிக்கும் என்று தீவிர ஆலோசனையில் இறங்கிவிடுவார்கள்.

முடியோடு விளையாடுவது
பெண்களுக்கு இந்த அழகான வித்தையை யாரும் கற்றுத் தரத் தேவையே இல்லை. அது தானான பெண்களுக்கென்றே வாய்த்த கலை. ஒரு பக்கமாக லேசாக தலையை சாய்த்துக் கொண்டு, அப்படியே ஒரு காந்தமான காதல் பார்வையோடு அப்படியே தலையைக் கோதிவிட்டால் போதும். ஆண்கள் அப்படியே பிளாட் ஆகிவிடுவார்கள்.

கைகளை உயர்த்துவது
மிக லேசாக ஒரு 30 டிகிரியில் தலையை சாய்த்துக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, சோம்பல் முறிப்பது போல் பெண்கள் நின்றால், அவ்வளவு தான். உடனே ஆண்கள் பெண்களின் கால்களுக்குக் கீழ் அப்படியே இரவு பகலாக விழுந்து கிடப்பார்கள். ஏனெனில் இந்த உடல் மொழியின் மூலம் பெண்ணின் ஆசையும் விருப்பமும் கூட லேசாக வெனிப்பட்டு விடும். இந்த உடல்மொழியில் முகம், தோள்பட்டை, கால்கள் அத்தனையுமே காதல் வசனம் பேசும்.

சருமம்
ஆண்கள் பொதுவாக பெண்களுடைய சருமத்தைப் பார்த்துதான் காதலில் விழுகிறார்கள். ஏனெனில் ஆண்களுக்குத் தெரியும் பெண்கள் எப்போது தங்களை கம்ஃபர்ட்டாக வைத்திருக்கிறார்களுா அப்போதுதான் அவர்களை மற்றவர்கள் நெருங்குவதற்கு, அதிலும் குறிப்பாக ஆணு்கள் நெருங்குவதற்கான இடத்தைக் கொடுப்பார்கள்.

முக பாவனைகள்
முக பாவனைகள் மூலம் பெண்கள் ஆண்களை தன்பக்கம் நெருங்கி வா என்று அழைப்பதில் உள்ள அழகே அழகு. ஏனெனில் அப்படி முகபாவனை மூலம் காதலை வெளிப்படுத்தி, தன்னுடைய எண்ணத்தை தெரிவிக்க நினைக்கும் போது, இயல்பாகவே பெண்களுக்கு கண்கள் மீன் போல துடிக்கும். உதடுகள் லேசாக அதிர்வடையும். ஆண்களிடம் எதையோ அந்த உதடு சொல்லவோ கேட்கவோ நெருங்கும். இப்படியெல்லாம் பார்த்தா அப்புறம் பசங்களால எப்படிங்க சும்மா இருக்க முடியும்.

சிரிப்பு
பெண்கள் சும்மா முறைச்சு பார்த்தாலே அவ என்ன பார்த்துட்டா என்று ஆண்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பார்கள். அதிலும் பெண்கள் தங்களை பார்த்து காதலோடு அன்பாகச் சிரித்தால், சொல்ல வேண்டும். அந்த சிரிப்பில் அவர்களுடைய கண்ணக் குழியிலேயே விழுந்து கிடப்பார்கள். சிரிப்பு ஒன்றே போதும். எத்தனை வார்த்தைகளை பேசினாலும் சாய்த்து விடும்.

ஆண்களை தொடுதல்
பெண்கள் கொஞ்சம் தள்ளி நின்று இந்த உடல் மொழிகளை ஆண்களின் மேல் வீசினாலே ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களுடைய கால்கள் தரையில் நிற்காது. அப்படியே வானத்தில் மிதப்பார்கள். அதிலும் ஆண்களை பெண்கள் நெருங்கி வந்து அவர்களைத் தொட்டால், எப்படி இருக்கும். இதை வார்த்தையால் சொல்ல முடியுமா?... அப்பாபாபாபா....... அப்படியே ஜிவ்வென்று ஆண்களுக்கு உணர்ச்சிகள் ஏறத்தானே செய்யும்.



Click it and Unblock the Notifications











