காதலி இல்லை என பொய் கூறி, உடன் பணிபுரியும் பெண்ணுடன் உறவு கொண்டேன் - இரகசிய டைரி #002

Posted By: Staff
Subscribe to Boldsky

நான் அவளுக்கு இழைத்து துரோகம். அதற்கான பிராயச்சித்தம் எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.

நான் ஏற்கனவே ஒரு பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வருகிறேன். நான் தற்சமயம் வெளியூரில் வேலை செய்து வருகிறேன். என் காதலியை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் சொந்த ஊருக்கு போய்வரும் போது பார்த்து வர இயலும். கடந்த இரண்டாண்டு காலமாக நாங்கள் டிஸ்டன்ஸ்- ரிலேஷன்ஷிப் முறையில் தான் இருந்து வருகிறோம்.

நான் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறு ஒரு புதிய நிறுவனத்திற்கு பணிமாற்றம் ஆனேன். அங்கே ஒரு பெண்ணுக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே நட்பு மலர்ந்தது. எனது புதிய நிறுவனத்தில் யாருக்கும் எனக்கு காதலி இருப்பது தெரியாது. அதை கூறவும் நான் முயற்சிக்கவில்லை.

ஒரு தருணத்தில், எனக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தில் நாங்கள் உறவுக் கொள்ளும் சூழல் அமைந்தது.

வெறும் நட்பாக, கொஞ்சம் நெருக்கமாக பழகும் வரை என்னுள் இருந்த தைரியம் இப்போது இல்லை. அவளுடன் உறவுக் கொண்டது தவறு. அதுவும் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவளை தான் திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்பதை கூறாமல் மறைத்து உறவில் ஈடுபட்டது மிகவும் தவறு.

என் தவறுக்கு கடவுள் பாவமன்னிப்பு தருவாரா என்ற அச்சமும் என்னுள் அதிகம் சூழ்ந்திருக்கிறது. நான் என்ன தான் செய்வது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் ஏற்பீர்களா?

நீங்கள் ஏற்பீர்களா?

நீங்கள் உறவுக் கொண்ட பெண்ணின் நிலை கண்டு வருந்தும் நீங்கள், முதலில் மறுமுனையில் அதே டிஸ்டன்ஸ்- ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் உங்கள் காதலி குறித்து எண்ணி பார்த்தீர்களா? அவரும் உங்களை போன்றவர் தானே? அவர் இதே தவறை செய்தால் நீங்கள் ஏற்பீர்களா?

முட்டாள்தனம்!

முட்டாள்தனம்!

அல்ல அவர் இதே போல கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டு வந்து உங்களை திருமணம் செய்துக் கொண்டால் தான் மன்னித்து ஏற்பீர்களா?

கட்டுப்பாடு இழந்து சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது கார்விட்டு ஏற்றிய பிறகு, இதற்கு பாவ மன்னிப்பு கிடையாதா? என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்பது எப்படி மடத்தனமோ, அத்தகைய மடத்தனம் தான் உங்களுடையதும்.

பொய்!

பொய்!

இந்த உலகிலேயே பெரிய ஆட்கொல்லும் ஆயுதம் பொய் தான். ஒரு பொய்யின் வீரியம் என்னவென்று தெரியாமல் அதை பயன்படுத்துவது பெரிய முட்டாள்தனம்.

பொய் ஒரு மருந்து போல, சில சமயம் சிறிதளவில் எடுத்துக் கொள்வதால் உறவை காக்கும். அதுவே அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது உறவை கொன்றுவிடும். பொய்களால் இறந்த உறவுகளே பல ஆயிரம். நீங்கள் பயன்படுத்திய பொய்க்கு ஒரே பிராயச்சித்தம் மன்னிப்பு தான்.

ஆனால், நீங்கள் கூறிய பொய்யை, தவறை அந்த இரு பெண்கள் மன்னித்தாலும், உங்களுக்குள் இருந்த அந்த காதல் இழ(ற)க்கவும் வாய்ப்புகள் உண்டு.

ஆண் என்றால்?

ஆண் என்றால்?

ஆதி காலம் முதல் இந்த டிஜிட்டல் யுகம் வரையிலும் ஆண் என்றால் சல்லாபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது வாடிக்கை ஆகிவிட்டது. அதனால் தான் பெண்களை பொய் கூறி மயக்குவதும், மாய வலையில் விழச்செய்வதும் ஆண்களுக்கு பிடித்த விளையாட்டாகிவிட்டது.

புத்தியில் ஏறுமா?

புத்தியில் ஏறுமா?

இதுவே ஒரு பெண் செய்தாளல், அவளை வேசி என்று வாய் கூசாமல் கூறுவீர்கள் தானே? உங்களை காதலித்த ஒரு பெண் வேறு ஆணுடன் உறவு கொண்டால் அவளை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, கார்ப்பரேஷன் கழிவறை சுவர்களில் அவர் பெயர் மற்றும் அழைப்பு எண் எழுதி அசிங்கப்படுத்துவீர்கள் தானே?

மன்னிப்பு?

மன்னிப்பு?

நிச்சயம் மன்னிப்பு மட்டும் போதுமானது அல்ல. உங்களை அந்த இரு பெண்களுமே நேர்மையாக தான் நேசித்துள்ளனர். நீங்கள் தான் நெஞ்சில் துளியும் ஈரம் இல்லாமல், இருவரையும் ஏமாற்றி இருக்கிறீர்.

காதலித்த பாவத்திற்கும், நம்பி கற்பிழந்த பாவத்திற்கும் இருவரும் கண்ணீர் மட்டுமே சிந்துவார்கள் என்று கனவு காண வேண்டாம்.

ஒருவேளை இருவரும் மன்னித்தால், உங்கள் காதலி உங்களை மீண்டும் ஏற்றுக் கொண்டால், கடவுடளிடம் பாவ மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, அவர் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்டு, பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுங்கள்.

கைம்மாறு?

கைம்மாறு?

சரி ஒருபுறம் உங்கள் காதலி மன்னித்து ஏற்றுக் கொண்டாலும், உங்களுடன் கடந்த ஓரிரு மாதம் மட்டுமே பழகி வந்த அந்த அலுவலக தோழியின் கதி என்ன? அவருக்கு உங்களால் ஒரு கைமாறும் செய்ய இயலாது.

உறவில் ஒரு பெண்ணை ஏமாற்றினால் அவர் கௌரவம் கருதி வெளியே யாரிடமும் கூறமாட்டாள் என்ற தைரியம் தான் உங்களை இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட வைத்திருக்கிறது.

சிக்கல்!

சிக்கல்!

நீங்கள் மிக எளிதாக மனம் வருந்துகிறேன், பாவ மன்னிப்பு கேட்கிறேன் என்று கிளம்பி விடுகிறீர்கள். ஒருவேளை இந்த உண்மை அறிந்து உங்கள் காதலியோ, அல்லது அலுவலக தோழியோ தவறான முடிவு எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்? கம்பி எண்ணுவதை தவிர வேறு கதி இல்லை.

முதலில்...

முதலில்...

நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியது உங்கள் அலுவலக தோழியிடம். அவரிடம், உங்கள் சல்லாப எண்ணத்தையும், மறைத்த பொய் குறித்தும் துளி அளவு உண்மை மறைக்காமல் கூறுங்கள். ஒருவேளை அவர் மனம் இறங்கி வந்தால், உங்கள் வாழ்க்கையில் நிஜமாகவே உங்களுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.

இல்லையேல், அவர் எடுக்கும் முடிவின் தாக்கம் என்னவோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

சட்டம்!

சட்டம்!

ஒரு ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவில் இணைந்துவிட்டாலே அவர்கள் கணவன் - மனைவி தான் என்கிறது சட்டம். நீங்கள் எத்தனை வருடங்கள் காதலித்திருந்தாலும், இந்த ஓரிரு மாதத்தில் உங்களுடன் உறவுக் கொண்ட அலுவலக தோழி தான் உங்கள் துணை இப்போதைக்கு.

நிஜமாகவே உங்களால் பேசி சமாளித்து, அந்த இரு பெண்களும் தவறான முடிவேதும் எடுக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றால் போய் பேசுங்கள். இல்லையேல், செய்த தவறை உணர்ந்து, உங்கள் கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டு இனிமேலும், இதுபோன்ற தவறை செய்யாமல் இருக்க முயலுங்கள்!

கட்டுப்பாடு இழந்தது வாகனமாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அதற்கான தாக்கத்தை அனுபவித்தே ஆகவேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret- Confession: I Lied to My Co-Workers About Having a Girlfriend and Had Sex with Her

Secret- Confession: I Lied to My Co-Workers About Having a Girlfriend and Having Sex with Her
Story first published: Tuesday, March 13, 2018, 16:30 [IST]