For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  308 பெண்களுடன் உல்லாசம், டாப் நடிகைகளுடன் காதல்... சிறைவாசம் - ஒரு நடிகனின் காதல் கதை!

  By Staff
  |

  பார்ன் இன் சில்வர் ஸ்பூன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்களே... அப்படியான பிறப்பை பெற்றவர் தான் இவர். இவரது தந்தையும் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், அனைத்திற்கும் மேளாக அரசியல்வாதி. இவரது தாயும் சினிமாவில் நடிகையாக நடித்தவர் தான். சொல்லப் போனால் இவர் பார்ன் இன் சிலவர் ஸ்பூன் அல்ல, கோல்டன் ஸ்பூன்.

  பிறந்ததில் இருந்தே ஆடம்பர வாசம், கேட்டது, கேட்காதது, விரும்பியது, நினைப்பது எல்லாமே கிடைக்கும் யோகம் கொண்டவர். சினிமாவில் மட்டுமல்ல, ரியல் வாழ்க்கையிலும் இவர் ஒரு ரொமான்ஸ் ஸ்டார் தான்.

  Sanjay Dutt and His Love Relationship Affairs!

  Image Source: NewsHunt

  பெரும்பாலான நடிகர்கள் சினிமாவில் சிறை சென்று, சினிமாவால் சர்ச்சை ஏற்பட்டு தான் பார்த்திருப்போம்.. ஆனால், இவர் நிஜ வாழ்விலேயே சிறை வாசம் அனுபவித்தவர், நிஜ வாழ்விலேயே நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர்.

  பார்ன் இன் கோல்டன் ஸ்பூன் என்றாலும், இவர் ரோட்டில் பிச்சை எடுத்ததும் உண்டு. தாயை இழந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி, தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஆயுதங்கள் வைத்திருந்த குற்றம் என இவர் வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போல மேலும், கீழுமாக சுழன்றுக் கொண்டிருந்தது.

  நிச்சயம் இங்கே நாம் கூறிக் கொண்டிருப்பது சஞ்சய் தத் பற்றி தான் என்பதை நீங்கள் இந்நேரம் கண்டிப் பிடித்திருக்கலாம்...

  இது... ஒரு நடிகனின் காதல் கதை...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  300+

  300+

  அதெப்படிங்க.. ஒரு நடிகனா இருந்தாலும், இதெல்லாம் எப்படி சாத்தியம்ன்னு நீங்க கேட்கலாம்.. ஆனா இது தான் உண்மை. இது பற்றி சஞ்சய் தத் பயோபிக் எடுத்த டீமே சொல்றாங்க. சஞ்சு என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்துல வர்க் பண்ண டைரக்டர், ஆக்டர் இதப்பத்தி ட்ரைலர் லான்ச் அப்போ பேசி இருக்காங்க.

  அந்த விழாவில் பேசிய அவர்கள் சஞ்சய் தத் வாழ்க்கை குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளை பகிர்ந்துக் கொண்டனர்.. அதில் ஒன்று தான் சஞ்சய் தத்திற்கு 308 காதலிகள் இருந்தனர் என்ற உண்மை.

  இதுப்போக திரையுலகம் அறிந்த, கிசுகிசுத்த சஞ்சயின் நாயகிகளுடனான காதல் கதைகள் வேறு உள்ளது...

  டினா மூனிம்

  டினா மூனிம்

  சஞ்சையும் டினாவும் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்கள். இவர்கள் நட்பு ஆரம்பத்திலேயே காதலாக மாறியது. சஞ்சயின் அறிமுக படமான ராக்கியில் டினா தான் உடன் நடித்திருந்தார். அப்போதே இவர்கள் இருவரும் நெருக்கமான உறவில் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர்களது காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இதற்கு சஞ்சையின் முரட்டுத்தனமான குடிப்பழக்கம் தான் காரணம் என்று அறியப்படுகிறது.

  ரிச்சா ஷர்மா!

  ரிச்சா ஷர்மா!

  சஞ்சய்க்கு ஏற்கனவே ரிச்சா ஷர்மா மீது பெருமளவில் ஈர்ப்பு இருந்தது. ஒருமுறை ரிச்சாவின் படத்தை ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் கண்டு அவர் மீது மிகுந்த விருப்பம் கொண்டாராம் சஞ்சய். முஹுர்த் என்ற படத்தின் போது, எப்படியோ ரிச்சாவின் டெலிபோன் நம்பரை வாங்கிவிட்டார் சஞ்சய். அவருடன் பேசி டேட் செய்ய அழைத்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த ரிச்சா, கடைசியில் ஒப்புக் கொண்டார். இவர்களுக்குள் ரொமான்ஸ் உறவும் பூத்தது.

  சஞ்சய் ஆக் ஹாய் ஆக்.. என்ற படப்பிடிப்பின் போது ஊட்டியில் வைத்து ரிச்சாவை பிரபோஸ் செய்திருக்கிறார். கொஞ்சம் கால அவகாசம் கேட்ட ரிச்சா, சஞ்சயின் தொடர் நச்சரிப்பால்... ஊட்டியில் வைத்தே ஒகே சொல்லிவிட்டார். இவர்கள் இருவரும் 1987ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு த்ரிஷாலா என்ற மகளும் இருக்கிறார். இல்வாழ்க்கை சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்த போது தான், ஒருநாள் ரிச்சா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அறியவந்தது. அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றனர்.

  இந்த சமயத்தில் தான் சஞ்சய் தத் மாதுரி தீட்சித் உடன் நெருக்கமாக பழக துவங்கினார். ரிச்சா 1996 டிசம்பர் 10 நாள் தனது நியூயார்க்கில் பெற்றோர் வீட்டில் மரணமடைந்துவிட்டார்.

  மாதுரி தீட்சித்

  மாதுரி தீட்சித்

  90களில் பாலிவுட் சினிமாவில் காட்டுத்தீ போல பரவியது சஞ்சய் - மாதுரி தீட்சித்தின் காதல் உறவு. இவர்கள் இருவரும் சாஞ்சன் என்ற படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட போது காதலில் விழுந்ததாக அறியப்பட்டது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த சமயத்தில் தான் 1993ல் சஞ்சய் மீது TADA வழக்கு பதிவானது. இந்த சமயத்தில் மாதுரி தீட்சித் - சஞ்சய் பிரிந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால், சஞ்சய் - மாதுரி தீட்சித் உடனான தனது உறவை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை .

  ரியா பிள்ளை!

  ரியா பிள்ளை!

  1998ல் சஞ்சய் ரியா பிள்ளை எனும் மாடலை காதலிக்க துவங்கினார். இவர்கள் இருவரும் 1998ல் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், இவர்கள் உறவு நீண்ட வருடம் நீடிக்கவில்லை. ரியா பிள்ளைக்கும் லியாண்டர் பயஸ்க்கும் உடையே காதல் ஏற்பட்டதால், 2005ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

  நாடியா துர்ரான்

  நாடியா துர்ரான்

  ரியா பிள்ளைக்கு அடுத்து சஞ்சய் வாழ்வில் நுழைந்த பெண்மணி நாடியா துர்ரான். இவர்கள் இருவரும் முதலில் எங்கே சந்தித்து கொண்டனர் என்பது யாரும் அறியாத விஷயம். ஒருபுறம் ரியா பிள்ளை லியாண்டர் பயஸ் காதல் காரணமாக பிரிந்தார் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் சஞ்சய் - நாடியா துர்ரான் உறவு காரணாமாக தான் ரியா பிள்ளை பிரிந்தார் என்றும் அறியப்படுகிறது.

  ஒருமுறை அமெரிக்காவில் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது நாடியா துர்ரான் மூலம் சர்ச்சை ஏற்பட ரியா விவாகரத்து செய்ய முனைந்தார் என்றும் கூறுகிறார்கள். ஆனால், எந்த காரணமும் அறியப்படாமல் நாடியா துர்ரானும் சஞ்சயை பிரிந்தார்.

  லிசா ரே!

  லிசா ரே!

  இவர்கள் இருவருமே தொழில் மற்றும் சொந்த வாழ்வில் கடுமையான சூழலில் இருந்த போது சந்தித்து கொண்டனர். லிசாவிடம் ஆறுதல் கண்டார் சஞ்சய். ஆனால், இவர்கள் வாழ்க்கை மிக குறுகிய காலம் மட்டுமே நிலைத்தது. லிசா - சஞ்சய் பிரிந்துவிட்ட பிறகு, லிசா தான் சஞ்சய் உடன் ரொமாண்டிக்கான உறவில் ஒருபோதும் இருக்கவில்லை என்றும் கூறினார்.

  ரேகா!

  ரேகா!

  சஞ்சை விட வயதில் மிகவும் மூத்தவர் நடிகை ரேகா. ஒருமுறை படப்பிடிப்பில் இருந்த போது இவர்கள் இருவருக்கும் நடுவே நெருக்கம் ஏற்பட்டது, இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால், ரேகாவின் சுயசரிதை எழுதிய யாசீர் உஸ்மான் என்பவர், இப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  அதிகாரப்பூர்வமாக சஞ்சயும் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  மான்யதா தத்

  மான்யதா தத்

  மான்யதா தத்... ரிச்சா ஷர்மாவுக்கு பிறகு சஞ்சய் தத் வாழ்வில் வலுவாக நிலைத்த ஒரு பெண்... இரண்டு வருடம் காதலித்து வந்த இவர்கள் 2008ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். சஞ்சய்க்கு இது மூன்றாவது திருமணம். இந்த ஜோடிக்கு 2010ம் ஆண்டு இரட்டையர்கள் பிறந்தனர். ஒருவர் பெயர் ஷாஹ்ரான், மற்றொருவர் பெயர் இக்ரா தத்.

  இன்னும்...

  இன்னும்...

  இந்த பெண்களை தவிர, சஞ்சய் தத் கிமி கத்கர், மற்றும் ரதி அக்னிஹோத்திரி போன்றவர்களுடன் மிக குறுகிய காலம் காதலில் இருந்ததாக அறியப்படுகிறது. இளம் வயதில் ப்ளேபாயாக இருந்ததாக இவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

  "ஒரே சமயத்தில் மூவருடன் எல்லாம் உறவில் இருந்திருக்கிறேன். அதற்கெல்லாம் க்ளேவராக இருக்க வேண்டும். ஒருவருக்கு மற்றொருவருடன் என்ன நடக்கிறது என்பதே தெரியக்கூடாது.." என்று சஞ்சய் கூறியுள்ளார்.

  எத்தனையோ காதல் சஞ்சய் தத் வாழ்வில் கடந்து போயிருந்தாலும்... அவர் வாழ்வில் நீடித்த ஒரே பெண் மான்யதா தத் தான். அவருக்கென நிஜமாகவே பிறந்தவர், அவர் மீது அதிக காதலும், அவரது கடுமையான காலத்திலும் உடன் இருந்தவர் அவர் மட்டுமே.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Sanjay Dutt and His Love Relationship Affairs!

  Sanjay Dutt And The Women In His Life, From Tina Munim To Manyata Dutt
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more