For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவன் கல்யாணம் ஆனவன்னு தெரியாம பழகிட்டேன்... - My Story #279

அவன் கல்யாணம் ஆனவன்னு தெரியாம பழகிட்டேன்... - My Story #279

By Staff
|

என் சொந்த ஊர் சென்னை. ஆனா, என் பார்த்தா யாரும் சென்னையில பிறந்த, வளர்ந்த பொண்ணுன்னு சொல்ல மாட்டாங்க. சின்ன வயசுல இருந்தே ஸ்ட்ரிக்டா வளர்க்கப்பட்ட பொண்ணு. அப்பா, அம்மா பேச்ச மீறி நடந்துக்குட்டதே இல்ல. அதுக்குன்னு என் அப்பா, அம்மாவ கொடுமை காரங்க, எனக்கு சுதந்திரம் கொடுக்கலன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.

Real Life Story: I Do Not Know That He is Married. But My Love is True!

ஸ்கூல், காலேஜ் வரைக்கும் என் இஷ்டப்படி தான் படிக்க வெச்சாங்க. எனக்கு என்ன வேணும்கிறது என்ன விட அவங்களுக்கு தான் நிறையவே தெரியும். சென்னை விட எனக்கு ரொம்ப பிடிச்ச ஊரு வேற எதுவுமே இல்ல. யாருக்கு தான் அவங்களுக்கு பிறந்த ஊறவிட வேற ஊர் பிடிக்கும்.

நான் சென்னைய விட்டு பெருசா எங்கயும் வெளிய போனதே இல்லை. ஒரு முறை காலேஜ் ஐ.வி ட்ரிப்ன்னு எல்லாரையும் போல டெல்லி போனோம், ஒருமுறை மைசூர் போனோம். மத்தப்படி எனக்கு எல்லாமே சென்னை தான். முதல் முறையா நான் சென்னையவிட்டு, என் அப்பா, அம்மாவவிட்டு ரொம்ப தூரம் தள்ளி இருக்குற மாதிரியான உணர்வ கொடுத்தது அந்த பெங்களூர் பயணம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவன்!

அவன்!

நைட் பஸ் ஏறுனா காலையில வந்திடலாம். ஆனா, நெனச்சதுமே வர முடியாது. ஏன்னா, நான் காலேஜ் முடிச்சு வேலைக்கு பெங்களூர் போயிருந்தேன். கிட்டத்தட்ட தமிழ்நாடு போல தான் இருக்கும் பெங்களூரும். எங்க வேணாலும் தமிழ் பேசலாம். நமக்கு கன்னடம் தெரியாட்டியும், அவங்க தமிழ் புரிஞ்சு பதில் பேசுவாங்க. பெரிய கஷ்டம் எதுவும் எனக்கு இல்ல. எல்லாம் அவன பார்க்குற வரைக்கும்.

அவனே தான்!

அவனே தான்!

என் காலேஜ்ல, ஏன் ஸ்கூல்லயே பலர் லவ் பண்ணியிருக்காங்க. ஆனா, எனக்கு தான் என்னவோ அந்த காதல் வரவே இல்லை. என் கிட்டயும் யாரும் பிரபோஸ் பண்ணது இல்லை. ஒருவேளை நான் கண்ணாடி போட்டிருக்கேன்... அதனால தான் என்மேலே யாருக்கும் லவ் வரலையோன்னு கவலை எல்லாம் எனக்கு இல்ல. நான் என்னையே ரொம்ப லவ் பண்றேன். இந்த கண்ணாடி மேட்டர் எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்ல... இதுவும் அவன பாக்குற வரைக்கும் தான்.

ஆன்சைட்!

ஆன்சைட்!

நான் பெங்களூர்ல வேலைக்கு ஜாயின் பண்ணி ரெண்டு மாசம் கூட இருக்காதுன்னு நினைக்கிறேன். முதல் நாள்ல இருந்த அவன நான் ஆபீஸ்ல பார்த்ததே இல்ல. அடிக்கடி ஒரு பேரு சொல்லி அப்பப்போ பேசிப்பாங்க. சரி, யாரோ ஒருத்தன்னு நெனச்சேன். கடைசியில பார்த்தா அவன் என் டீம். ஆன்சைட் கெடச்சு ஆறு மாசம் யு.கே போனவன் அன்னிக்கி தான் ஆபீஸ்க்கு வந்தான். அது நாள் வரைக்கும் என் டீம்-மேட்ஸ் அவ்வளவு சிரிச்சு பேசி நான் பார்த்ததே இல்ல. எல்லாம் மொசடுன்னு நெனச்சேன்.

ஸ்பெஷல்!

ஸ்பெஷல்!

எல்லாம் அவனால தான். எல்லாரையும் சிரிக்க வெச்சிடுவான். எல்லாருக்கும் அவன பிடிச்சது. டி.எல்'ல இருந்து செக்யூரிட்டி வரைக்கும். எல்லாரையும் ப்ரோன்னு தான் கூப்பிடுவான். அது டீம் லீடா இருந்தாலும் சரி, செக்யூரிட்டியா இருந்தாலும் சரி! எல்லாரையும் சார், மேடம்ன்னு கூப்பிடுற செக்யூரிட்டி கூட இவன ப்ரோன்னு தான் கூப்பிடுவாரு. அதுதான் அவனோட ஸ்பெஷல். எல்லாருக்கும் பிடிச்ச அவன எனக்கு மட்டும் எப்படி பிடிக்காம போகும்.

ஒரே குழந்தை!

ஒரே குழந்தை!

முதல் ஒருவாரம் அவன் என்ன கண்டுக்க கூட இல்ல. யாரும் பெருசா இன்ட்ரோவும் கொடுக்கல. ஒரு நாள் டீம் மீட்டிங் போனப்ப தான் என்ன முதல் தடவையா அவன் கவனிச்சான். ஏதோ ரொம்ப நாள் பழகுன மாதிரி அசால்டா பேச ஆரம்பிச்சுட்டான். நான் அந்த விஷயத்துல கொஞ்சம் வீக். வீட்டுல ஒரே குழந்தைங்கிறதுனால யார் கிட்ட பழக நெனச்சாலும் கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கும். அது அவன் கிட்ட பழகும் போதும் எட்டிப் பார்த்துச்சு.

லவ் வந்திடுச்சு!

லவ் வந்திடுச்சு!

ஆனா, ரொம்ப நாள் அந்த தயக்கம் நீடிக்கல. நிறையா பேசுவான். தொணதொணன்னு பேசிக்கிட்டே இருப்பான். கொஞ்ச நாள்லயே அவன் மேல லவ் வந்திடுச்சு. டெக்ஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். அவனும் ரிப்ளை பண்ணுவான். எத்தன மணி இருந்தாலும் நைட் 12, 1 மணிக்கு எல்லாம் கூட உடனே ரிப்ளை பண்ணுவான். அதனால அவனுக்கும் என்மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு நெனச்சேன். நல்லவேளை அவன்கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணல. பண்ணியிருந்தா மானம் போயிருக்கும்.

கல்யாணம் ஆயிடுச்சு!

கல்யாணம் ஆயிடுச்சு!

ஆமா! அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இது எல்லாருக்குமே தெரியும். என்ன தவிர. இத அவன் எனக்கிட்ட இருந்து மறைச்சுட்டான்னு சொல்லல. நான் தான் கேட்கல. ஒருநாள் எல்லார் டெஸ்க்குக்கும் வந்து ஸ்வீட்ஸ் கொடுத்துட்டு இருந்தான். எல்லாரும் கங்க்ராட்ஸ் சொல்லிட்டு இருந்தாங்க. சரி அவன் பிறந்த நாள் போலன்னு நெனச்சேன். அப்பறம் தான் நினைவுக்கு வந்துச்சு, அன்னிக்கி அவன் பர்த்டே இல்லன்னு. அப்பறம் எதுக்கு இவன் ஸ்வீட்ஸ் தரான்னு சந்தேகம்.

ஸ்வீட்ஸ்!

ஸ்வீட்ஸ்!

என் டேபிள்க்கு வந்தப்போ, எதுக்கு ஸ்வீட்ஸ்ன்னு கேட்டேன். உனக்கு தெரியாதா? ஓ! நீ புதுசுல... இன்னைக்கு என் கல்யாண நாள். இன்னையோட ஒரு வருஷம் ஆச்சு. சும்மா ஸ்வீட்ஸ் கொடுத்துட்டு போலாம்னு தான் ஆபீஸ் வந்தேன்னு சொன்னான். அவன் கொடுத்த ஸ்வீட் எனக்கு மட்டும் தான் ரொம்ப கசப்பா இருந்துச்சு. அப்பறம் ஏன், எதுக்காக நான் மெசேஜ் பண்ணும் போதெல்லாம் உடனே, உடனே ரிப்ளை பண்ணான். டபிள் கேம் ஆடுறானான்னு டவுட்.

திட்ட மாட்டாங்களா?

திட்ட மாட்டாங்களா?

அடுத்த ரெண்டு நாள் ஆபீஸ் லீவ். திங்கள் கிழமை அவன் ஆபீஸ் வந்ததும் காலையில அவன தனியா கூட்டிட்டு போய் இதப்பத்தி பேசனும்ன்னு நெனச்சேன். ஆனால், மீட்டிங் அது இதுன்னு அவன கையில பிடிக்கவே முடியல. எப்பவும் போல நைட் தான் மெசேஜ் பண்ணான். வைப் கூட இருக்கும் போது எப்படி என் கூட மெசேஜ் பண்ற. அவங்க உண்ண திட்ட மாட்டாங்களான்னு கேட்டேன். அவங்க என் கூட இல்ல. அவங்க ஐதராபாத்ல வர்க் பண்றாங்க. ஒரு வருஷமா ட்ரான்ஸ்பர்காக வெயிட் பண்றோம். கிடைக்கவே இல்லன்னு சொன்னான்.

லவ் ஸ்டோரி!

லவ் ஸ்டோரி!

அப்பறம் சும்மா இருக்காம... அவன் காதல் கதைய பத்தி கேட்க... அவனும் ஒன்னு விடாம சொன்னான். அப்பத்தான் அவங்க ரெண்டு பேரும் எவ்வளோ லவ் பண்றாங்கன்னு. அவன் சந்தோசமா சொல்லிட்டு சாட் முடிச்சுட்டு போயிட்டான். ஆனா, எனக்கு தான் தூக்கமே வரல. அழுகை மட்டும் தான் வந்துச்சு. அவன் வைப் நிஜமாவே ரொம்ப கொடுத்து வெச்சவங்க. இவன மாதிரி பிராப்ளம் ஹேண்டில் பண்றவங்க ஜாஸ்தி பார்க்க முடியாது.

அவாய்ட் பண்ண முடியல...

அவாய்ட் பண்ண முடியல...

நானும் கொஞ்சமாவது அவன பத்தி விசாரிச்சுட்டு பழகி இருக்கலாம். தேவை இல்லாம காதல வளர்த்துட்டு., இப்ப அவன மறக்கவும் முடியல. அவன் கூட பேசாம பழகாம இருக்கவும் முடியல. நான் அவன லவ் பண்ணேன்னு என் பேயிங் கெஸ்ட் ரூம் மேட்ஸ் ஒருத்திய தவிர வேற யாருக்கும் தெரியாது. அவனா வந்து பேசும் போது அவாயிட் பண்ணவும் முடியல. பேசாம இந்த வேலைய விட்டு வேற வேலைக்கு போயிடலாம்ன்னு தோணுச்சு.

கடவுள் இருக்கான்... அவனுக்கும், அவன் வைப்க்கும் ட்ரான்ஸ்பர் கிடைச்சு சொந்த ஊருக்கு ஷிப்ட் ஆயிட்டாங்க. இதுல அவனுக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம். சரி! இனிமேல் நாம, நம்ம வேலைன்னு பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். ஆனாலும், அவன் மேல நான் வெச்சிருந்த லவ் சீரியஸானது, உண்மையானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Do Not Know That He is Married. But My Love is True!

Real Life Story: I Do Not Know That He is Married. But My Love is True!
Story first published: Tuesday, June 26, 2018, 15:46 [IST]
Desktop Bottom Promotion