For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணம் வேணாம், செக்ஸ் மட்டும் போதும்ங்கிறது என்ன மாதிரியான வாழ்க்கை? - My Story #317

கல்யாணம் வேணாம், செக்ஸ் மட்டும் போதும்ங்கிறது என்ன மாதிரியான வாழ்க்கை? - My Story #317

By Staff
|

எனக்கு அவன 10 வருஷமா தெரியும். நானும் அவனும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். என்னோட கிளாஸ்மேட் ஓட க்ளோஸ் ஃபிரெண்ட் அவன். அந்த நாலு வருஷ கல்லூரி வாழ்க்கையில நான் அவன அப்பப்போ பார்த்திருக்கனே தவிர, பெருசா பேசி, பழகினது இல்ல.

பார்க்க நல்லா அழகா, ஸ்மார்டா தான் இருப்பான். காலேஜ்ல என்கிட்டே எப்படியாவது பேசிடணும்னு அட்லீஸ்ட் டைம் என்னனு கேட்டுட்டு போன பசங்கள கூட நான் கடந்து வந்திருக்கேன். ஆனா, இவன் என் கிளாஸ்க்கு வந்து பக்கத்து பெஞ்ச்ல மணிக்கணக்கா உட்கார்ந்து என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பேசிட்டு போவான்.

ஆனா, என்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல. அவனுக்கென்ன அவ்வளோ திமிருன்னு நான் அவன் கூட பேச ட்ரை பண்ணவே இல்ல. ஆகமொத்தத்துல நாங்க ரெண்டு பேரும் காலேஜ் லைப்ல ஒருத்தர ஒருத்தர் அடிக்கடி பார்த்துக்கிட்டமே தவிர, ஒரு தடவ கூட பேசிக்கல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வர்க் லைப்!

வர்க் லைப்!

காலேஜ் முடிச்சதும் வேலை. வீட்டுல எனக்கு முழு ஃப்ரீடம் கொடுத்தாங்க. அத நான் மிஸ் யூஸ் பண்ணிடனோன்னு இப்ப கொஞ்சம் ஃபீல் பண்றேன்.

நானும் அவனும் ஒரே ஐ.டி பார்க்ல தான் வர்க் பண்றோம். அதுவே எனக்கு வேலைக்கு சேர்ந்து நாலு மாசம் கழிச்சு தான் தெரியும். நான் ஆபீஸ் கேப்ல வந்து போயிட்டு இருந்தேன். அவன் பைக்ல வந்து போயிட்டு இருந்தான்.

ஒரு நாள் ஃபிரெண்ட்ஸ் கூட டீம் லஞ்ச போயிட்டு திரும்பி வந்துட்டு இருந்தப்ப, ஆபீஸ் பக்கத்துல இருக்க டீ கடையில அவன பார்த்தேன்.

டேட்!

டேட்!

ஸ்மோக் பண்ணிக்கிட்டு டீ குடிச்சுட்டு இருந்தான். என்ன பார்த்ததும் அவனுக்குள்ள ஒரு ஷாக். அத நான் அவன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்ல. நாலு வருஷ காலேஜ் லைப்ல ஒரு தடவ கூட என்ன ஏறெடுத்து பார்க்காதவன். அன்னைக்கி அப்படி ஒரு பூரிப்போட பார்த்தது எனக்கே கொஞ்சம் ஷாக்கிங்காதான் இருந்துச்சு.

ஹாய், எப்படி இருக்க, இங்க தான் வர்க் பண்றியானு கேட்டுட்டு இருந்தவன்.Can we meet for a Coffeeனு கேட்டான். சரின்னு சொல்லிட்டு நகர்ந்துட்டேன்.

வீக்கென்ட்!

வீக்கென்ட்!

நாங்க பார்த்த அந்த வீக்கென்ட்ல தான் காபி மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணி இருந்தோம். கரக்ட் டைத்துக்கு வந்துட்டான். அப்ப தான், அந்த நாலு வருஷம் ஏன் என் கூடபேசாம இருந்ததுக்கு ஒரு காரணத்த சொன்னான். என்ன அவனோட ஃபிரெண்ட் (என் கிளாஸ்மேட்) லவ் பண்ணிட்டு இருந்ததால தான் பேசல. ஆனா, அவன் உன்கிட்ட பிரபோஸ் பண்ணி, நீ முடியாதுன்னு சொன்ன விஷயத்த அவன் என்கிட்டே சொல்லவே இல்ல. நீங்க ரெண்டு பெரும் லவ் பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் நான் பேசலன்னு படபடன்னு பட்டாசு மாதிரி வெட்டிச்சு தீர்த்துட்டு தான் மூச்சே விட்டான்.

சரி! அவன் என்ன லவ் பண்றதுக்கும், நீ என் கூட பேசாம இருந்ததுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டேன்... திருதிருன்னு முழிச்சான்.... புரிஞ்சுக்கிட்டேன்.

அடுத்தடுத்து...

அடுத்தடுத்து...

அப்பறம், அடிக்கடி லஞ்ச பிரேக், ஈவ்னிங் காபி ஷாப்னு மீட் பண்ண ஆரம்பிச்சோம். காலேஜ் டைம்ல இருந்தே அவன் மேல எனக்கொரு ஈர்ப்பு இருந்துச்சு. நடுவுல காணாம போயிருந்த அந்த ஈர்ப்பு... இப்ப, அவனுக்கும் என்ன பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச பின்ன, காதலா கொஞ்சம், கொஞ்சமா மாற ஆரம்பிச்சது.

நெருக்கம்!

நெருக்கம்!

வீக்கென்டான எதாச்சும் பிளான் பண்ணி லாங் டிரைவ் போக ஆரம்பிச்சோம். கொஞ்சம், கொஞ்சமா அந்த காதல் போதையா மாற ஆரம்பிச்சது. எங்க ரெண்டு பேரால ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரிஞ்சு இருக்கவே முடியல. ஈவ்னிங் கேப்ல போறத விட்டு, அவன் கூட பைக்ல போக ஆரம்பிச்சேன். ஒரு லாங் டிரைவ் போயிட்டு ஒன்பது, பத்து மணிக்கு தான் அப்பார்ட்மெண்ட்க்கே போவேன்.

அவன் கூட ஸ்பென்ட் பண்ண டைம் எல்லாம் கனவு மாதிரி இருந்துச்சு. அந்த காலகக்கட்டதுல நேரம் போனதே தெரியல.

பிரபோஸ்!

பிரபோஸ்!

நாங்க ரெண்டு பேரும் பிரபோஸ் மட்டும் தான் பண்ணிக்கலயே தவிர, லவ்வர்ஸ் மாதிரி தான் வாழ்ந்து வந்தோம். சொல்லி தான் காதல் தெரியனுமானு இருந்தேன். அன்னிக்கி காபி ஷாப்ல அவன் முழிச்ச முழியில இருந்தே அவன் என்ன காதலிக்கிறான்னு நான் முடிவு பண்ணி இருந்தேன்.

ஆனா, நான் போட்ட கணக்கு தப்புன்னு, ஒரு தப்பு நடந்த பின்ன தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

நடக்கக் கூடாதது...

நடக்கக் கூடாதது...

ஒருதடவ லாங் வீக்கென்ட் லீவ் வந்துச்சு. பைக்ல கோவா வரைக்கும் போலாம்னு சொன்னான். கோவா எல்லாம் வேண்டாம் சும்மா லாங் டிரைவ் ட்ரிப்னா ஒகேனு சொல்லி தான் கிளம்பினோம்.

ஆனா, முதல் முறையா இரவுகள் தாண்டின அந்த பயணம் எங்கள ஒரு இனம் புரியாத உணர்வு வளையத்துக்குள்ள சிக்கிக்க வெச்சது. அன்னிக்கி நைட் அது நடந்தத நெனச்சு நான் ஃபீல் பண்ணல. அத வெறும் செக்ஸா மட்டும் என்னால பார்க்க முடியல.

அவன் என் மேல வெச்சிருந்த, காதல், அக்கறை, பாசத்தோட அடுத்த கட்டமா தான் நான் உணர்ந்தேன். அவனும் அப்படி தான் இருந்தான்.

நல்லவன் தான்...

நல்லவன் தான்...

அவன இங்க நான் தப்பா எதுவும் சொல்லல. ஏன்னா அவன் ரொம்ப நல்லவன். ஒரு தடவ சென்னைக்கு வந்தப்ப என் அம்மா கூட அவன பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டாங்க. பிடிச்சிருந்தா சொல்லு அவங்க வீட்டுல கல்யாணம் பத்தி பேசலாம்னு அம்மா சொன்னாங்க.

அவன் என்மேல ரொம்ப கேர் எடுத்துப்பான், ஒரு ஹஸ்பன்ட் தன்னோட வைஃப எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோ அப்படி தான் அவன் என்ன ட்ரீட் பண்ணான். ஆனா, என்னவோ அவனுக்கு கல்யாணத்துல, ஒரு ரிலேஷன்ஷிப் இணைய இன்ட்ரஸ்ட் இல்ல.

நோ!

நோ!

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அவன்கிட்ட மேரேஜ் பிரபோஸ் பண்ணேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டேன். ரொம்ப அமைதியா இருந்தான். சாயந்திரம் இதப்பத்தி பேசலாம்னு சொல்லிட்டு போயிட்டான்.

சாயங்காலம் காபி ஷாப்ல மீட் பண்ணோம். அப்ப தான் தனக்கு ரிலேஷன்ஷிப் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. நாம ஏன் இப்படியே இருந்திட கூடாதுன்னு சொன்னான்.

என்னால முடியாது...

என்னால முடியாது...

ஒருதடவ எங்களுக்குள்ள செக்ஸ் நடந்திருந்தாலும். அத திருப்பி, திருப்பி கல்யாணம் பண்ணிக்காம நடக்கவிட நாம் தயாரா இல்ல. அவன் கூட சேர்ந்து வாழ தான் நான் ஆசைப்படுறேன். ஆனா, அவன் ஏதோ லிவ்-இன் ரிலேஷன்ஷிப் மாதிரி ட்ரை பண்றான். எனக்கு அதுல சுத்தமா நாட்டம் இல்ல.

இப்பவும் நாங்க ஒண்ணா தான் ஆபீஸ்ல இருந்து கிளம்புறோம். அவனால நான் இல்லாம இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவனே அத வாக்குமூலம் மாதிரி சொல்லிருக்கான். ஆனாலும், லிவ்-இன் எனக்கு ஒகே இல்ல.

ஒரு நாள்...

ஒரு நாள்...

கண்டிப்பா இப்ப இல்லாட்டியும் இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ அவன் மனசு மாறும். இந்த வயசு, சம்பாதிக்கிற பணம் எல்லாம் வேணும்னா கல்யாணத்து மேல இன்ட்ரஸ்ட் இல்லாத ஒரு பிம்பத்த ஏற்படுத்தலாம். என்ன இருந்தாலும் தமிழ்நாட்டுல பிறந்தவன் தான அவனும்.

எப்படி?

எப்படி?

ஆனா, என் கண்கூட என் ஆபீஸ்ல.. நான் தங்கி இருக்க அப்பார்ட்மெண்ட்ல இது மாதிரி லிவ்இன் ரிலேஷன்ஷிப் நிறையா பேர பார்த்திருக்கேன். சிலர் வருஷக்கணக்கா இருக்காங்க. சிலர் லிவ்இன் ரிலேஷன்ஷிப்னா என்னன்னு தெரியாம ரெண்டு, மூணு மாசம் மட்டும் சேர்ந்து கூத்தடிச்சுட்டு பிரிஞ்சு போயிடுறாங்க.

Whatever it is, End of the day, காதலும், சந்தோஷமும் வாழ்நாள் முழுக்க நீடிக்கணும்னா கல்யாணம் மட்டும் தான் ஒரே தீர்வு. இத யாராலையும் மறைக்கவும் முடியாது. மாத்தவும் முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: He want to have intercourse with me. But, Not a Life Long Relationship!

Real Life Story: He want to have intercourse with me. But, Not a Life Long Relationship!
Desktop Bottom Promotion