For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போது அவன் ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ்மேன், ஆனால், 22 வருடமாக நான்... - My Story #281

அவர் என்னை தனியே விட்டு சென்று 22 ஆண்டுகள் ஆகிறது, இன்னொரு துணையை தேடிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை..

By Staff
|

ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை இது. என் முதல் காதல் அனுபவம் எனது 16வது வயதில் பெற்றேன்... அவன் என் பக்கத்து வீட்டில் தங்கி இருந்தவன். அப்போது அவனுக்கு வயது 20 இருக்கும் என நினைக்கிறேன். என்ஜினியரிங் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.

அவன் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் தான் வீட்டுக்கு வந்து செல்வான். சுமாரான நிறம்... சில்கியான முடி, அது அடிக்கடி அவனது நெற்றியை முத்தமிட்டுக் கொண்டே இருக்கும், அவன் தட்டிக்கழித்து கொண்டே இருப்பான்.

Real Life Story: He Left Me 22 Years Ago and Still I Cant Love or Marry Anyone Else!

அவன் மிகவும் ஒழுக்கமானவன், முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்ள கூடியவன். அவன் வயதொத்த மற்ற ஆண்களுடன் ஒப்பிடுகையில் அவன் ஒரு படி மேலே என்றே கூறலாம். அவன் மீது எப்போது எனக்கு ஒரு ஈர்ப்பு பிறந்தது என்பது எனக்கு தெரியாது.

அவன் மீது எனக்கொரு தனி மரியாதை உண்டு. அவனது சகோதரியும், நானும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். நாங்கள் இருவரும் நல்ல தோழிகள். ஒரு நாள் நான் அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் முறையாக...

முதல் முறையாக...

அப்போது தான் முகத்திற்கு நேராக மிக அருகாமையில் அவனை நான் முதல் முறையாக கண்டேன். கடவுளே! காதல் வந்தால் உள்ளே பட்டாம்பூச்சி பறக்கும் என்பதை முதல் முறையாக அறிந்தேன், உணர்ந்தேன்.

அவன் என் தோழியின் அண்ணனாக இருந்ததால், அவனை அண்ணா என்று அழைக்க வேண்டிய கட்டாயம் ஒருபுறம்... ஆனால், முடிந்த வரை அவனை அப்படி கூப்பிடுவதை தவிர்த்து வந்தேன். அவனை போன்ற ஒரு அழகனை எப்படி அண்ணா என்று அழைக்க முடியும்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

அவனை மிக அருகாமையில் பார்த்த முதல் நொடியிலேயே அவன் மீது ஒரு விதமான பெரும் ஈர்ப்பு... பேரார்வம். அவன் என்னை குழந்தை என்று கருதிவிடுவானோ என்ற அச்சம் ஒருபுறம். எப்படியாவது அவனது கவனத்தை ஈர்க்க வேண்டும். ஆனால், அதை எப்படி செய்வது என்ற கேள்வி.

அப்போது தான் எங்கள் வீட்டுக்கும், அவர்கள் வீட்டுக்கும் வேலைக்கு செல்லும் பெண் ஒருவரே என்பது என் மண்டைக்கு புரிந்தது. எனவே, நைசாக அந்த அக்காவிடம் பேசி, அவனை பற்றி அறிந்துக் கொள்வேன்.

அதே தருணத்தில், அந்த அக்காவுக்கு என் மீது சந்தேகம் வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அம்மாவிடம் கூறிவிடுவார்.

நான்..?

நான்..?

அவனுக்கு நீண்ட கூந்தல் உடைய பெண்கள் என்றால் பிடிக்குமாம். ஆனால், நான் பாப்-கட் செய்திருந்தேன். நான் ஒருபோதும் இந்திய பெண்களை போல உடை உடுத்தியதே கிடையாது. ஸ்கூல் யூனிபார்ம் தவிர மற்ற அனைத்தும் வெஸ்டர்ன் ஆடைகளே என்னிடம் இருந்தன.

ஹாய்!

ஹாய்!

எனவே, முதல் வேலையாக அவனுக்கு பிடித்தது போன்ற ஆடைகள் வாங்க வேண்டும். பிறகு, நீளமாக முடி வளர்க்க வேண்டும். எப்படியாவது அவனை ஈர்க்க வேண்டும் என்பதே என் முழு கவனமாக இருந்தது. ஆனால், அவன் என்னை ஒருமுறை கூட கண்டுகொண்டதே இல்லை.

அவன் ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஹாய் சொல்லி கூப்பிடுவேன். அதுவே எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். ஏறத்தாழ இந்த ஹாய் மட்டுமே கூறி ஒரு வருடம் கடத்திவிட்டேன்.

இந்த ஹாய்க்கே என்னுள் அவன் மீதான ஆர்வம் எட்டாத உயரத்தை அடைந்துவிட்டது. ஆனால், அவனுக்கும், எனக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. ஒரு கனக்ஷன் ஏற்படவே இல்லை. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.

கையை பிடித்தான்...

கையை பிடித்தான்...

அப்போது தான், நான் அவன் விரும்புவது போன்ற பெண் இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன். சில நாட்கள் கழிந்தன... நான் எங்கோ வெளியே சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அவன் என் காலனி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது ஒரு சிறுவன் வீசிய பந்து என் கையில் பலமாக அடித்தது, எங்கோ நின்றுக் கொண்டிருந்தவன் ஓடோடி வந்து என்ன ஆச்சு என்று என் கையை பிடித்துக் கொண்டு பேசினான்.

அந்த சிறுவர்களை திட்டினான், அவர்கள் மீது கோபித்துக் கொண்டான்... முதல் முறையாக எங்கள் இருவரின் கண்களும் நெருக்கமாக பார்த்துக் கொண்டன.

கண்கள்!

கண்கள்!

அவனது கண்களும், இதழ்களும் அவ்வளவு அழகு. என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தான்.. நான் மிகுந்த வலி ஏற்பட்டது போல முகத்தை பாவித்துக் கொண்டேன். வீட்டுக்குள் சென்றதும் துள்ளிக் குதுத்துக் கொண்டிருந்தேன். அவன் என் கையை பிடித்து விட்டான் என்ற மகிழ்ச்சியில்.

வித்தியாசமான காதல்!

வித்தியாசமான காதல்!

அப்போது இந்த சமூக ஊடகங்கள்... மொபைல் போன்கள் எல்லாம் இல்லை. ஆகையால் எங்கள் காதல்... சாரி! என் காதல் கொஞ்சம் வித்தியாசமானது.

அவன் எங்கள் வீட்டை கடந்து பைக்கில் போகும்போதெல்லாம் ஹார்ன் அடித்துக் கொண்டே போவான். இப்படியே ஒரு ஆறு மாதங்கள் கழிந்தன. அதன் பிறகு அவன் வேலைக்கு செல்ல துவங்கிவிட்டான்.

அப்போது எனக்கு வயது 18. அவனுக்கு பிடித்தது போல நீளமான கூந்தல், அவனுக்கு பிடித்த மாதரியான உடை அணிந்து... அவனுக்கு பிடித்த பெண்ணாக நான் மாறி இருந்த காலம். எங்களுக்குள் பேசிக் கொள்ள ஒரு துணிவு வரவில்லை.

தற்கொலை!

தற்கொலை!

எதிர்பாராத ஒரு தருணத்தில்... அவனது தந்தை கடன் தீர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் விளைவால் அவர் தற்கொலை செய்துக் கொண்டார். இப்போது அனைத்து சுமையும் இவனது தோள்களுக்கு வந்தன.

அவனது குடும்பம் நகரைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். அவர்கள் ஒரே நாளில் எங்கள் காலனியை காலி செய்துக் கொண்டு செல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வார்த்தை கூட...

ஒரு வார்த்தை கூட...

அவன் ஒருமுறை கூட திரும்பி என்னை பார்க்கவே இல்லை. நான் எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நின்று அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் என்னிடம் சென்று வருகிறேன் என்று கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.

22 வருடங்கள் கழிந்தன...

22 வருடங்கள்!

22 வருடங்கள்!

அவனது தங்கையின் முகநூல் முகவரி மூலமாக அவனை கண்டேன். அவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். இப்போது அவன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்.

ஆனால், நான் இன்றும் அவனையே நினைத்துக் கொண்டு.. திருமணம் செய்துக் கொள்ளாமல்... அவனையே நினைத்து.. காதலித்துக் கொண்டிருக்கிறேன்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: He Left Me 22 Years Ago and Still I Cant Love or Marry Anyone Else!

Real Life Story: He Left Me 22 Years Ago and Still I Cant Love or Marry Anyone Else!
Desktop Bottom Promotion