For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296

வாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296

By Staff
|

என் வாழ்க்கையில மறக்க முடியாத காலம் அது. காதலிச்சதுனால மட்டுமில்ல... அதுக்கு பின்னாடி நிறைய வலி, வேதனை, அவமானம்... அதெல்லாம் தாண்டி எனக்கு கிடைச்ச உண்மையான தோழமை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு சொல்வாங்க... ஆனா, இந்தியாவுல வேற எந்த ஊருக்கு போனாலும்.. தமிழன... தமிழன மட்டுமில்ல... வேற்று மாநிலத்து காரங்களா பெரிசா வாழ விடமாட்டாங்க. (இது என் சொந்த வாழ்க்கையில நடந்த அனுபவங்கள மட்டும் வெச்சு சொல்றேன். பொதுவான கருத்து இல்ல).

எந்த ஊருன்னு சொல்ல விரும்பல... ஆனா, வேற மொழி.. எனக்கு என் வாழ்நாள்ல பரிச்சயம் ஆகாத, ஒரு வார்த்தை கூட புரியாத, தெரியாத மொழி பேசுற ஊருல எனக்கு ஒரு வேலை கிடைச்சது. என்ஜினியரிங் படிச்சுட்டு... ரெண்டு வருஷமா நாய் படாத பாடுபட்டு கிடைச்ச வேலை... ஊரு வேற, மொழி தெரியாதுன்னு சப்பக்கட்டு கட்ட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புது உலகம்!

புது உலகம்!

கலாச்சாரம் புதுசு, பாஷை புதுசு, அவங்க டிரெஸ்ஸிங், கோவில், ட்ரான்ஸ்போர்ட் பஸ் கலரு, கட்டிடங்கள் கட்டியிருக்க முறை, மக்களோட பழக்கவழக்கங்கள்னு எல்லாமே புதுசு... காலையில அம்மா கையில இட்லி, தோச... கூட சட்னி இல்ல சாம்பார் சாப்பிட்டு பழகின வாயும், வயிறும் அந்த ரொட்டி துண்டுகள விழுங்க முடியாம விக்குச்சு. என்ன பண்றது... சாப்பிட்டு தான் ஆகணும்.., பெங்களூர், டெல்லி, மும்பைன்னு என் பிரண்ட்ஸ் பல ஊருல இருக்காங்க. எல்லாரும், "மச்சான் இங்க ஒரு தமிழ்நாட்டு காரர் கடை இருக்குடா.. அதான் புழைச்சுட்டு இருக்கேன்னு" சொல்லுவாங்க. அப்படி ஒரு இட்லி கடை போடுற தமிழன் இந்த ஊருல இருக்க மாட்டாரானு ஏங்கி இருக்கேன்.

பிரெண்ட்ஸ்!

பிரெண்ட்ஸ்!

இருக்குறதுலேயே பெரிய பிரச்சனை பிரண்ட்ஸ் தான். நல்ல சாப்பாடு இல்லாம கூட வாழ்ந்திட முடியும். ஆனா, நம்பிக்கையான நட்பு இல்லாம எந்த ஊருலயும் வாழ முடியாது. இங்க பிரச்சனை என்னன்னா.. எனக்கு இந்த ஊரு லோக்கல் பாஷை தெரியாது. இங்க இருக்கவங்களுக்கு இந்தியும், லோக்கல் பாஷையும் தவிர இங்கிலீஷ் கூட தெரியாது. ஒருவேளை இந்தி படிச்சிருக்கலாமோன்னு தோணும்... ஆனா, ஏக், தோ-க்கு மேல இந்தி நஹி மாலும் தான். பிரண்ட்ஸ் கிடைக்க நிறையவே கஷ்டப்பட்டேன். நல்ல நண்பர்கள் கிடைக்க நிஜமாவே ரொம்ப கஷ்டப்பட்டேன்.

ஆபீஸ்ல!

ஆபீஸ்ல!

பேருக்கு தான் எம்.என்.சி. கம்பெனி... கோடிங் தவிர்த்து வேற எதுக்கும் இங்கிலீஷ் பயன்படுத்தாத ஒரு டீம், டீம்மேட்ஸ். எதுக்கு எடுத்தாலும் கயமுயா, கயமுயான்னு பேசிக்குவாங்க. நாம எதாச்சும் இங்கிலீஷ்ல பேசுனா.. வெறப்பா பதில் பேசுவாங்க. எச்.ஆர்., டீம் லீட், மேனேஜர் தவிர வேற யார் கூடயும் பெருசா பேசுனதே இல்ல. முதல் ரெண்டு வாரம் கம்பெனியே தங்குறதுக்கு இடம் கொடுத்திட்டாங்க. அதுக்குள்ள வீடு தேடனும். பேயிங் கெஸ்ட், இல்ல யாராச்சும் கூட ஒண்டி குடித்தனம் நடத்த தேடிட்டு இருந்தேன்.

டீம் மேட்!

டீம் மேட்!

அப்ப தான், கடவுள் போல ஒருத்தன் எனக்கு பிரெண்ட் ஆனான், பக்கத்து டீம் பையன் தான். அவனும் வெளியூரு தான். ஆனா, அதே மாநிலம். அவன் ரூம்ல ஒரு வேகன்ஸி இருக்கு, வரியான்னு கேட்டான். ஏதோ அமெரிக்காவுக்கு ஆன்சைட் கூப்பிடுற மாதிரி அதுப்பா பேசினான். வேற வழியில்ல. போனேன். என் கூட இங்கிலீஷ் ஆவது பேச கிடைச்ச ஒரே ஆள் அவன்தான். அவன் யார் கூட எல்லாம் பேசுறானோ அவன் தான் என் பிரெண்ட்ஸ்.

மொக்கை!

மொக்கை!

அவனோட பிரெண்ட்ஸ் நாலஞ்சு பேரு இருந்தாங்க. அவங்க கூட தான் நானும் சாப்பிட போவேன், வெளியே போவேன்... நாங்க எல்லாம் ஒரே ரூம். அவனுங்க சிரிச்சா நானும் சிரிப்பேன். அவனுங்க சீரியஸா இருந்தா.. நானும் முறைச்சிட்டு சீரியஸா இருப்பேன். வேற வழியில்ல. நாலஞ்சு மாசம் இப்படி தான் போச்சு. ஹோட்டல், பஸ் கண்டக்டர், ஆபீஸ் ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப், செக்யூரிட்டின்னு சிலபல பேர்கூட பேசி, பேசி.. அந்த ஊர் பாஷை கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. எனக்கு அந்த ஊரு பாஷை புரிஞ்ச பின்ன தான் இன்னொன்னு விளங்க ஆரம்பிச்சது.

அவமானம்!

அவமானம்!

ஒரு நாள் செக்யூரிட்டி ஒருத்தன ஏதோ கோபமா சொல்லி திட்டுக்கிட்டு இருந்தான்... அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டதுக்கு கேவலமா ஒரு மீனிங் சொன்னான். அதே வார்த்தைய பலமுறை எங்க ரூம்ல கேட்டிருக்கேன். அன்னிக்கி ராத்திரி ரூம்ல அதே வார்த்தைய கேட்கும் போதுதான். அவனுங்க என்ன ஆரம்பத்துல இருந்து அந்த கேவலமான வார்த்தைய சொல்லி திட்டுனது தெரிய வந்துச்சு. எப்பவும் போல அமைதியா சிரிச்சிட்டே விட்டுட்டேன். என்ன பண்றது பிரெண்ட்ஸ்னு நம்பி பழகியாச்சு. இருக்க இடம் கொடுத்தது அவனுங்க தான். அதுக்கான மரியாதையாவது கொடுக்கணும்ல.

அனு!

அனு!

அந்த ஊருல எனக்கு கிடைச்ச முதல் பிரெண்ட் அனு. நிறையா இங்கிலீஷ்ல தான் பேசுவா. தெலுங்கு பொண்ணு. அவளுக்கும் அந்த ஊரு புதுசு. கேம்பஸ் இன்டர்வியூல இருந்து வேலை கிடைச்சு இங்க வந்ததா சொன்னா.. இவனுங்க கேம்பஸ் இன்டர்வியூ எல்லாம் போய், இந்த ஊருக்கு ஆள பிடிச்சுட்டு வரானுங்கனு அப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன். நிறையா பேசுவோம், அவ கூட நான் பழக ஆரம்பிச்சதுல இருந்து, என் பிரெண்ட்ஸ்... சாரி... சாரி.. ரூம் மேட்ஸ்க்கு என் மேல கோபம் அதிகமாயிடுச்சு.

காண்டு!

காண்டு!

எங்க க்ளோஸ் பிரெண்ட் ஒருத்தன் வரான்... அவன் எங்க கூட தான் தங்குவான்.. நீ வேணும்னா வேற ரூம் பாத்துக்கன்னு டைரக்டா சொல்லிட்டானுங்க. அப்ப தான் கையில கொஞ்சம் காசு சேர்ந்துச்சு. அத அட்வான்ஸ் கொடுக்க வெச்சுட்டான்னுங்க. தனியா ஒரு ஒன். பி.எச்.கே ரூம் வாடைக்கு எடுத்தேன். அனு மூலமாக நிஜமாவே நல்ல பிரெண்ட்ஸ் ஃபார்ம் ஆனோம். எல்லாருமே வேற, வேற ஸ்டேட். நிறையா புதுபுது விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டோம். எங்கள தெரியாத மொழியில திட்ட இங்க யாருமே இல்ல. அனு மூலமா தான் எனக்கு புனிதா பிரெண்டானா.

காதல்!

காதல்!

என்னமோ தெரியல... அவ்வளோ க்ளோசா பழகுன அனு மேல வராத ஒரு ஈர்ப்பு. புனிதா மேல முதல் நாள்லயே வந்திடுச்சு. ஓ! இதுக்கு பேரு தான் காதலான்னு நினைச்சுக்கிட்டேன். சத்தியமா எப்படி கரக்ட் பண்றதுன்னு தெரியல... எதாச்சும் விளையாட்டா பேசுனா.. அவளுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு வருமோன்னு நினைச்சேன். நாங்க அவுட்டிங் போகும் போதெல்லாம் புனிதாவும் வருவா. நானும், அவளும் க்ளோசா பழக ஆரம்பிச்சோம். ஆனா, அதுல நட்பு மட்டுமே இருந்துச்சு. எப்படி அத காதலா மாத்துறதுன்னு எனக்கு தெரியல.

கேலி!

கேலி!

அவள நிறையா கிண்டல் பண்ணுவேன். அதுலயும் எங்க ஆபீஸ்ல ஒரு மாங்கா இருந்தான். அவன் கூட சேர்த்து வெச்சு வறுத்து எடுத்திருக்கேன். அப்பப்ப திட்டுவா.. ஆனா, திரும்ப என்கிட்டே பேசிடுவா. சில சமயம் புனிதா காதல் பத்தின பேச்சு எடுக்கும் போது மட்டும், எதாச்சும் கலாய்ச்சு டாப்பிக் மாத்திடுவேன். நான் ஏதாவது உளறி, காதலிக்கிறத சொல்லி, அவ என்னைவிட்டு போயிட்டா என்ன பண்றதுன்னு பயம். ஆனா, எத்தனை நாளுக்கு தான் பயந்துட்டே இருக்க முடியும்.

தைரியம்!

தைரியம்!

ஒரு நாள் நாங்க எல்லாரும் ரிசார்ட் போயிருந்தோம். அப்ப, புனிதா தனியா இருந்த சமயத்துல அவக்கிட்ட என் மனசுல இருந்த காதல் மொத்தமும் கொட்டிட்டேன். ஆனா, அவ என்கிட்ட எந்த பதிலும் சொல்ல. நான் தான் அவள ரூம்ல டிராப் பண்ணேன். பை மட்டும் சொல்லிட்டு கிளம்பிட்டா. அதுக்கப்பறம் நாங்க நேர்ல, ஆபீஸ்ல, மெசேஜ்லன்னு எதுலயும் பேசிக்கல. அஞ்சு மாசம் ஓடிடுச்சு.

க்ளைமேக்ஸ் சேஞ்!

க்ளைமேக்ஸ் சேஞ்!

விளையாட்டா ஜஸ்ட் லைக் தட் மாதிரி பேசி பழகினா.. வாலி அஜித் போல லவ் செட் பண்ணிடலாம்னு நெனச்சேன்.. ஆனா, புனிதாவ நான் ஒரு மாங்கா கூட சேர்த்து வெச்சு பேசி கிண்டல் பண்ணேன்னு சொன்னேன்ல. அவன் மேல புனிதாவுக்கு காதல். நான் பேச ஆரம்பிச்ச பின்ன தான் அவன பத்தி அவ தெரிஞ்சுட்டு இருக்கா.

அஞ்சு மாசம் ஆகியும், எந்த பதிலும் வரலன்னு அனுக்கிட்ட புலம்பும் போதுதான். அனு, புனிதவும், அந்த மாங்காவும் காதலிக்கிற விஷயத்த சொன்னா. ஆனா, கடைசில ஷாஜகான் விஜய் போல நானே ஐடியா கொடுத்து சேர்த்து வெச்சது மாதிரி ஆயிடுச்சு என் காதல்.

ஆண்டவன் இருக்கான் குமாரு... அவன் எதையோ கிறுக்கி வெச்சிருக்கான். அதுதான் நடக்கும் போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Because of My Fear, I Lost My Love!

My Love is true, But because of my fear I lost the love of my life. Not only love, I lost the great friend that I had.
Story first published: Friday, August 17, 2018, 17:56 [IST]
Desktop Bottom Promotion