TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
வறுமையில் இருப்பவர்களுக்கு காதலில் இப்படியும் பிரச்சனைகள் வரலாம்! my story #246
இந்த உலகமே பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பணம் இல்லை என்று சொன்னால் ஒருவரும் நம்மை மதிக்கமாட்டார்கள் அனைத்திற்கும் தேவை பணம் என்ற ஒற்றை மந்திரம் தான் அனைத்திற்கும் ஆதரப்புள்ளியாக இருக்கிறது என்பார்கள்.
பணம் இருந்தால் போதும் இந்த உலகத்தையே வென்று விடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரேயொரு கேள்வி தான்.... அந்த பணத்தால் ஒருவரின் அன்பை விலை கொடுத்து வாங்க முடியுமா? போலியாக நடிக்கலாம் ஆனால் உண்மையான அன்பை ஒரு போதும் பெற முடியாது. ஏனென்றால் உண்மையான அன்பு இதையெல்லாம் தாண்டி பல இடையூறுகளை கடந்தும் ஜெயிக்கும் ஆற்றல் படைத்தது.
தன்னிடம் பணம் இல்லை என்பதையே மிகப்பெரிய குறையாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உண்மை சம்பவம் ஒரு பாடமாக அமையும்.
காதல் :
காதலர்கள் மத்தியில் எப்போதுமே ஸ்டேட்டஸ் என்ற விஷயம் முக்கிய இடம் வகிக்கிறது. காதலிக்கும் போது தெரியவில்லை என்றாலும் திருமணம் என்று வரும் போது ஸ்டேட்டஸ் என்ற விஷயம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
இதை காரணமாக வைத்தே எத்தனையோ காதல்கள் பிரிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் காதலுக்கு வறுமை ஓர் தடையாய் இருப்பதில்லை என்பதை நிரூபித்த ஒரு நிஜ காதல் தம்பதிகளின் கதை தான் இது.
இனிப்பு :
மார்க்கெட்டில் வேலை முடித்து மாலையில் வீடு திரும்பும் அப்பாவிற்காக எப்போதும் நான் வீட்டில் காத்திருப்பேன் வந்ததுமே வழக்கமாக கேட்கும் அந்த கேள்வியையும் கேட்டுவிடுவேன். என்னைப் போல நிறைய குழந்தைகளும் இந்த கேள்வியை எதிர் கொண்டிருப்பர்.
அப்பா எனக்காக என்ன கொண்டு வந்தீங்க? என்பது தான் அந்தக் கேள்வி. குழந்தைகளுக்கு எப்போதும் வெளியில் சென்று வருகிறவர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் எதாவது பரிசுப் பொருளை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அது சிறியதோ பெரியதோ அவர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய மிட்டாய் கூட அந்த நாளை முழுமையாக்கிடும்.
அவன் யாரோ ? :
என் அப்பாவிடம் இருக்கிற மிகவும் சீரியசான பிரச்சனை இது.... எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக பதில் சொல்ல மாட்டார் ஒரு கேள்வி கேட்டால் பதிலுக்கு இன்னொரு கேள்வியைக் கொண்டு என்னையே மடக்குவார்.... இந்த முறையும் அப்படித்தான் முதல் கேள்வியான என்ன கொண்டு வந்தீங்க என்பதற்கு நீண்ட நேரமாகியும் பதில் வராததால் அப்பா எனக்கு இனிப்பு வாங்கித் தாங்க என்றேன்.
யார் வந்து உனக்கு தினமும் இனிப்பு தருகிறார்களோ அவர்கள் வந்தவுடன் நான் கிளம்பிவிடுவேன்... இங்கேயே இருக்கமாட்டேன் என்றார். தினமும் எனக்கு வந்து யார் இனிப்பு தருவார்கள் என்று சிறிது நேரம் யோசித்தப்படியே நிற்க அப்பா என்னைப் பார்த்து சிரித்தார்... நானும் சிரித்துக் கொண்டே ஒஹோ திருமணத்தைப் பற்றி சொல்கிறீர்களா என்று கேட்டுவிட்டு அப்பாவின் புதிர் கேள்விக்கு விடை கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சிரித்தேன்.
உலகம் :
விவரம் தெரிந்த நாளிலிருந்து எனக்கு எல்லாமுமாக இருப்பவர் அப்பா தான். அம்மா உடனான நினைவுகள் கூட எனக்கு சரியாக இல்லை. எனக்கு இரண்டு வயதான போது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
என் குழந்தைப்பருவத்தை அப்பாவுடன் இருந்த போது மிகவும் சந்தோஷமாக வளர்ந்தேன். துரதிஷ்டவசமாக அப்பாவும் இறந்து போகவே என் உறவுக்கார அத்தை தன் வீட்டு வேலையாளாக என்னை அழைத்துக் கொண்டார். அதன் பிறகு என் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது. இனிப்பு குறித்தும் அதைக் கொண்டு வந்து கொடுக்கப்போகிற என்னுடைய வருங்கால கணவர் குறித்தும் நினைத்துப் பார்க்கக்கூட அவகாசமிருக்கவில்லை.
என் காதலே.... :
ஆண்டுகள் உருண்டோடியது. ஒரு நாள் என் அத்தை வீட்டிற்கு எதிரில் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதவை திறந்தால் அங்கே ஒருவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன நினைத்தேனோ தெரியவில்லை சட்டென்று அவரைப் பார்த்து சிரித்துவிட்டேன்.
அவரும் என்னைப் பார்த்து சிரித்தார். சத்தியமாக அந்த நொடியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இப்போது நினைத்தாலும் அந்த நொடி அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது.
கணவர் :
எப்படி அந்த சிரிப்பில் நான் காதல் கொண்டேன் என்றே தெரியவில்லை அவரைப் பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றிலிருந்து தினமும் அவரைப் பார்ப்பதற்கென்று வீட்டின் வாசலில் காத்திருப்பேன், கடந்து போகிற ஒவ்வொரு நொடியும் அப்படியே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றிடும்.
தினமும் பார்த்தால் கூட பேச வேண்டும் என்று தோன்றியதில்லை. அதை விட பயம் அதிகமாக இருந்ததால் நேரில் சென்று பேசுகிற முயற்சியை சில காலம் எடுக்காமல் இருந்தேன்.
அதன் பிறகு சில காலங்கள் கழித்து பேசத்துணிந்து என் உறவுக்கார தம்பியை உடன் அழைத்துக் கொண்டு அவன் நின்று கொண்டிருக்கிற பலசரக்கடைக்கு ஜாமான் வாங்குவது போலச் சென்றேன்.
கல்யாணம் பண்ணிக்கிறியா? :
அருகில் சென்று விட்டேன் என்ன பேசுவதென்றே தெரியவில்லை தட்டுத்தடுமாறி.... என் தினமும் எங்க வீட்டு முன்னாடி வந்து நிக்கிற என்று கேட்டுவிட்டேன்... இவனும் அப்பாவைப் போலத்தான் போல நான் ஒரு கேள்வியை கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் பதில் கேள்வியை போட்டு வைப்பர்.
அவன் கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை என்னைய கல்யாணம் பண்ணிக்கிறீயா என்று கேட்டுவிட்டான்.
வாழ்க்கை :
ஏற்கனவே அவன் மீதும் எனக்கு அபிப்ராயம் இருந்ததினால் உடனேயே சம்மதம் சொல்லிவிட்டேன் பல எதிர்ப்புகள் மிக முக்கியமாக இருவருமே வறுமையின் கோரப்பிடியில் இருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். அன்றைக்கு வேலைக்குச் சென்றால் மட்டுமே நமக்கு சாப்பாடு கிடைக்கும் என்கிற நிலை சொந்தமாக எங்களுக்கு என்று சொல்லி ஒர் விரிப்பு கூட எங்களிடம் இல்லை.
பலரும் சபித்தார்கள்.
திருமணம் :
பலரது எதிர்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டுவிட்டோம். இதோ கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஓடிவிட்டது. பெரிய பெரிய மாட மாளிகைகளை எல்லாம் நாங்கள் சம்பாதிக்கவில்லை ஆனால் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வமான அன்பை சேமித்தோம். ஒருவரை ஒருவர் அதிகமாக புரிந்து கொண்டோம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் காதலின் சாட்சியாக ஒரு மகளும் பிறந்திருக்கிறாள்.
அதிர்ஷ்டக்காரி :
இந்த வாழ்க்கை அமைந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டக்காரி என்று தான் நினைக்கிறேன். எனக்கிருக்கிற ஒரே கவலை என்ன தெரியுமா? என் கணவருடனான இந்த சந்தோஷமான வாழ்க்கையை பார்ப்பதற்கு அப்பா இங்கே இல்லை என்பது தான்.
உங்களைப் போலவே என்னை தன் குழந்தையாய் அரவணைக்கும் கணவன் கிடைப்பது எவ்வளவு பெரிய பாக்கியம். அது எனக்கு கிடைத்திருக்கிறது ஆனால் அதைப் பார்க்க அப்பா இல்லையே என்று சொல்லி சில நேரங்களில் அழுதுவிடுவேன்.
இங்கே வறுமை விஷயமல்ல :
என் கணவர் தினமும் எனக்கு பிடித்தமான இனிப்பு கொண்டு வந்து என் தலையணைக்கு மேலே வைப்பார். மறுநாள் காலையில் அதை நான் சாப்பிடுவேன். எப்போதாவது நான் அப்பாவை நினைத்து அழுதால் கண்களை துடைத்துவிட்டு என் கையில் இரு இனிப்பைத் திணிப்பார். எதோ குழந்தை இனிப்பு கேட்டு அடம்பிடித்து அழுவது போல எனக்கு தோன்றிடும்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் மிகவும் ஏழைகளாக, வசதி வாய்ப்பற்றவர்களாக தெரியலாம் ஆனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கிடையில் காதல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பெருகிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த காதல் தம்பதிகளான என் பெயர் சோனியா என் கணவர் பெயர் ஆரிஃப்