அட! உண்மையான காதல்னா இதுதாங்க... படிச்சுப்பாருங்க ஷாக் ஆயிடுவீங்க...

Posted By: ABU BAKKER FAKKIRMOHAMED
Subscribe to Boldsky

மனித அகராதியில் காதலுக்குத்தான் எத்தனை அா்த்தங்கள். காதல் என்பது அணுக்களின் வேதியியல். காதல் என்பது மனிதனின் பாதையில் வலைவிரித்துக் காத்திருக்கும் போதை. காதல் என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்து கொள்கிறோம்.

love

அது அவரவருடைய சூழலையும் வாழ்க்கையையும் பொருத்தது. ஆனால் கொதல் என்பதற்கு விஞ்ஞான ரீதியான அர்த்தம் என்று ஒன்று இருக்குமல்லவா?... அது என்ன என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதுதான் காதலா?

இதுதான் காதலா?

மகிழ்ச்சி, துக்கம், புன்னகை, கண்ணீர், சோகம், வேகம், குழப்பம், தெளிவு என அனைத்தையும் கலந்து கட்டிக் கொட்டும் உணா்ச்சிகளின் தொகுப்புதான் காதல். காதலின் அசைவுகளுக்கு ஏற்ப, நரம்பு மண்டலம் நாட்டியமாடும், எலும்புகள் மண்டியிடும், தசைகள் விசிலடிக்கும். காதல் வந்துவிட்டால் நீ உனக்குச் சொந்தமில்லை. காதலின் கைகளில் மனிதா்கள் அனைவரும் பொம்மைகள்.

காதல் விதை

காதல் விதை

இறைவன் தான் படைத்த மனிதா்களை ஏதாவது ஒரு வகையில் கெளரவப்படுத்த நினைத்தான். ஒவ்வொருவரின் மனதிலும் காதலை விதைத்தான். காதல், தன் தனித்துவத்தை இழந்துவிடாமல், மனித வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், தலைமுறைகளின் சூழலுக்கு ஏற்பத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. காதலைப் பற்றிப் புரிந்துகொள்ள அதனுள் அடங்கியிருக்கும் முக்கிய அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆன்மாக்களின் இணைவு

ஆன்மாக்களின் இணைவு

இருவர் ஒன்றாகும் மாயம்தான் காதல். அணுவைத் துளைத்து அதனுள் இன்னொரு அணு குடியேறும் வித்தைதான் காதல். ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தைத் திருடி அதை உடம்புக்குள் கரைத்து ஒளித்து வைத்துக் கொள்ளும் விளையாட்டு இது. காதல் என்னும் அடங்காத ஆசைக்கு ஏற்ப ஆன்மாக்களை ஆடவிடுங்கள்... மனிதன் பக்குவப்பட அதுதான் வழி.

உடலின் நெருக்கம்

உடலின் நெருக்கம்

காதல் உள்ளே வரவும் வெளியயேறவும் உடம்புதான் ஊடகம். காதலும் காமமும் ஒன்றின் வழியாக மற்றொன்றாய் ஒன்றிணைகின்றன. ஆன்மாவின் விருப்பப்படி உடல்கள் இணைந்து காதல் மொழி பேசுகின்றன. உள்ளம் உணரும் காதலை, மெய்யான தீண்டலின்போது மெய்யும் உணரும்.

உணா்வுகளின் கொதிகலன்

உணா்வுகளின் கொதிகலன்

காதலில் விழும்பொழுது உடம்பும் உள்ளமும் மென்மையான மலர்களால் அா்ஜிக்கப்படுவது போன்ற உணா்வு தோன்றும். காதலிக்கத் தொடங்கிவிட்டால் உள்ளத்தின் கட்டுப்பாட்டில் நாம் இயங்குவதில்லை. மாறாக, உணா்வுகள்தான் நம்மைக் கட்டுப்படுத்தும். காதலின் பாதை முழுவதும் உணா்வுகளின் கரம் பிடித்துதான் நாம் நடக்க வேண்டியிருக்கும். இரத்த ஓட்டத்தைச் சீா்படுத்தும் இதயம் காதலுணர்வினால் எப்பொழுதும் ஒரு கொதிகலனாகவே இருக்கும்.

ஹார்மோன்களுக்கு அழைப்பு

ஹார்மோன்களுக்கு அழைப்பு

காதல் வந்துவிட்டால், ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு உணர்வுகள் வேடிக்கை பார்க்கும். உணா்ச்சிகள், ஹார்மோன்கள் என்னும் ஆயுதத்தைக் கொண்டுதான் மனிதா்களை வீழ்த்துகின்றன. நமது விருப்பத்துக்கு உரியவர்கள் நமதருகே இருக்கும்பொழுது ஹார்மோன்கள் துள்ளிக் குதிக்கின்றன. கண்கள் விரும்புவதை கைகள் அரவணைக்க ஹார்மோன்கள் தூண்டுகின்றன.

 கட்டவிழும் உணர்வுகள்

கட்டவிழும் உணர்வுகள்

காதலிப்பவரைக் கண்ணில் கண்டதும், உங்கள் இதய வானில் நிலாவும் நட்சத்திரங்களும் பூக்கவில்லையென்றால் அது காதல் இல்லை. காதல் வந்துவிட்டால் உங்களைக் காதலிப்பவர் உங்களை அவரின் இதயத்தில் வைத்துக் கொண்டாடுவார், அங்கிருந்து நம்மால் மீண்டு வரமுடியாது. இது போன்று நம்மை யாராவது உள்ளத்தில் வைத்துத் தாங்க மாட்டார்களா என்றுதான் ஒவ்வொருவருடைய மனதும் ஏங்குகிறது. இனம்புரியாத உணா்வுகள் கட்டவிழ்ந்து காதலிப்பவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அவ்வுணர்வுகள் காதலிப்பவர்களைக் குழந்தைகளாக மாற்றுகின்றன.

ரொமான்சும் மனநிறைவும்

ரொமான்சும் மனநிறைவும்

காதல் வந்துவிட்டால் கூடவே விருந்தாளியாக ரெமான்சும் வந்துவிடும். அன்பை வெளிப்படுத்தும் தீண்டலும் சீண்டலுமாகிய ரெமான்ஸ் காதலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இது காதலா்களை மகிழ்ச்சியாகவும் உணா்ச்சி மயமாகவும் வைத்திருக்கும். காதலர்களின் எண்ண அலைகளை வண்ண மயமாக்குவது அவா்களுக்கு இடையே நிகழும் ரொமான்ஸ் பற்றிய நினைவுகள்தான்.

கடவுள் தந்த பரிசு

கடவுள் தந்த பரிசு

காதலையும் காதல் பற்றிய சிந்தனைகளையும் நம்மால் கட்டுப்படுத்த இயலாது. காற்றைப் போல, கடலைப் போல கட்டுக்குள் அடங்காதது காதல். ஆன்மாவின் துடிப்பை உணர்கின்ற அனுபவம்தான் காதல். உயிர்களுக்கு இடையே உட்பிணைப்பை ஏற்படுத்துவது காதல். விழிவழி நுழையும் காதல் இரு இதயங்களை இணைக்கிறது. மனிதனுக்குக் கடவுள் தந்த பரிசு காதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: love காதல்
English summary

love and its various parts

Everyone has a different meaning when it comes to love. Love is the chemistry of atoms. Love is the drug and humans, the addicts. Love makes us feel happy, sad, confused and frustrated.