இந்த 5 விஷயம் கரக்டா இல்லன்னா 'அந்த' விஷயம் நடக்காமலேயே போயிடும்!

Posted By: Staff
Subscribe to Boldsky

தாம்பத்தியம் என்பது உடலளவில் வெறுமென இணைவது அல்ல. தாம்பத்தியம் வைத்துக் கொள்வதால் பல நன்மைகள் விளைகின்றன. உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி தம்பதிகள் சமநிலை உறவில் நீடிக்க தாம்பத்தியம் ஒரு சிறந்த கருவியாக திகழ்கிறது.

தாம்பத்திய வாழ்க்கை அனைவருக்கும், இணையும் அனைத்து முறையும் சிறந்து அமைவதில்லை. சூழல், தருணம், உணர்வு, மருத்துவ நிலை என பல காரணங்களால் தாம்பத்தியம் சில முறை தடைப்பட்டு போகலாம்.

சிலர் மத்தியில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாம்பத்தியம் முற்றிலும் தடைப்படுவது, குறிப்பிட்ட இடைவேளையில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் இணையாமலே இருப்பது போன்றவை உறவில் வேறு சில தாக்கங்கள் உண்டாகவும் காரணமாகிறது.

ஒருவேளை தம்பதிகளின் உறவில் தாம்பத்தியம் தடைப்பட்டு போகிறது, இருவரில் ஒருவர் நாட்டமின்றி காணப்படுகிறார் என்றால், இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று முக்கிய காரணமாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்!

மன அழுத்தம்!

பெரும்பாலான தம்பதிகள் மத்தியில் உடலுறவு தடைப்பட்டு போவதற்கு காரணமாக அமைவது மன அழுத்தம் தான். ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில், பெண்கள் உடனே உச்ச இன்பம் அடையாத போது மன அழுத்தம் கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வேலை?!

வேலை?!

ஆணுடன் உடலுறவில் ஈடுபடும் போது செக்ஸ் என்பதை அவள் ஒரு வேலையாக கருத வேண்டியுள்ளது என்ற கருத்தும் அந்த ஆய்வில் நிறைய பதிவாகியிருந்தன. முக்கியமாக, பிறப்புறுப்பு பகுதியில் ஷேவ் செய்ய வேண்டும், உச்சகட்ட இன்பம் அடைய நீண்ட நேர உறவில் ஈடுபட வேண்டும் போன்ற காரணங்களை அவர்கள் விரும்பவில்லை.

வேறு கருவிகள்!

வேறு கருவிகள்!

அப்படியே நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டாலும் சில சமயம் தான் அந்த இன்பம் அடைய முடிகிறது என கருதும் பெண்கள், வைபிரேட்டர் அல்லது பார்ன் படங்கள் இதை மிக எளிதாகவும், வேகமாகவும் உண்டாக்கிவிடுகின்றன என்றும் கூறுகிறார்கள்.

இது போன்ற தருணத்தில் செக்ஸில் காட்டும் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

முன் அனுபவம்!

முன் அனுபவம்!

திருமணத்திற்கு முன்பே நிறைய முறை / பேருடன் உடலுறவில் ஈடுபட்ட நபர்களுக்கு திருமணத்திற்கு பிறகான தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவாக உள்ளது என்ற தகவல் ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது.

ஆர்வமின்மை!

ஆர்வமின்மை!

இது போன்ற முன் அனுபவம் இல்லற வாழ்வில் துணையுடன் இணையும் போது ரொமான்ஸ் எண்ணங்களை குறைத்துவிடுகிறது. நீண்ட நாள் திருமண உறவில் இருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியான நல்ல துணையாக இருந்தாலும் கூட, சிலருக்கு ஏற்கனவே அதில் முன் அனுபவம் இருக்கும் பட்சத்தில் துணையுடனான தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிப்பதில்லை.

ஒப்பீடு!

ஒப்பீடு!

தம்பதிகள் யார் தங்கள் செக்ஸ் உறவை வேறு நபர்களின் செக்ஸ் உறவு அல்லது திரைப்படம் / ஆபாசப் படங்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்களோ அவர்களது தாம்பத்திய பந்தம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று அறியப்படுகிறது. இவர்களது மகிழ்ச்சியும், இன்பமும் ஒப்பீட்டிலேயே காணாமல் போய்விடுகிறது.

ஆண்மை!

ஆண்மை!

எல்லா தம்பதிகளின் மத்தியிலும் ஒரு கட்டத்தில் சோர்வு அல்லது உடலுறவற்ற காலம் இருக்கும். இது அவரவர் துணை பொருத்தது, அவர்கள் உடலுறவில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதை பொருத்து இருக்கிறது.

ஆய்வு!

ஆய்வு!

2015ம் ஆண்டு 128 தம்பதிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் யாரெல்லாம் அதிகம் முத்தமிட்டுக் கொள்கிறார்களோ, கட்டி மகிழ்ந்துக் கொள்கிறார்களோ, அவர்கள் மத்தியில் சண்டை, சச்சரவுகள் சீக்கிரம் மறைந்து விடுகிறது என்றும். உடலுறவில் யாரெல்லாம் நாள் குறித்து ஈடுபடுகிறார்களோ, அவர்கள் மத்தியில் ஈர்ப்பு அதிகரிக்கிறது என்றும் அறியப்பட்டது.

உணர்ச்சி தூண்டல்!

உணர்ச்சி தூண்டல்!

அதே போல, யாரெல்லாம் வேலைக்கு சென்ற பிறகும், வெளியூர் சென்றிருந்தாலும் தங்கள் துணையுடன் அதிக நேரம் தொடர்பு கொண்டு பேசிக் கொள்கிறார்களோ அவர்கள் மிக எளிதாக தங்கள் துணையின் உணர்சிகளை தூண்டிவிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

குழந்தைகள்!

குழந்தைகள்!

பெரும்பாலான தம்பதிகளின் வாழ்வில் தாம்பத்தியம் தடைப்பட்டு போக காரணமாக இருப்பது அவர்கள் குழந்தைகள் என்றும் கூறுகின்றனர்.

சிலர் குழந்தைகள் வளர்ந்த பிறகு உடலுறவில் ஈடுபட தயங்குகிறார்கள். சிலர், குழந்தைகள் அறிந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Reasons Why Happy Couple Stop Making Love Intercourse!

Five Reasons Why Happy Couple Stop Making Love Intercourse!