லவ் பண்ற பொண்ணுக்கு க்ளோஸ் ஆண் தோழர் இருந்தா? இதெல்லாம் முன்னவே தெரியுமாம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இதுவரை நாம் கண்ட பெரும்பாலான படங்களில் பெண்ணுடன் எந்த ஒரு ஹீரோவும் வெறும் நட்புடன் பழகியதே இல்லை. நிச்சயம் அது காதலாக தான் முடியும்.

ஏன், பெற்றோர், ஆசிரியர்கள் என யாரிடம் சென்று ஒரு ஆண், பெண் கடைசி வரை நட்பாக பழக முடியுமா என்று கேட்டால், விவாதத்தின் போது மட்டுமே சிலர் ஆம் என்று கூறுவார்கள். ஏனெனில், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என 90% நெருங்கிய ஆண், பெண் தோழமை காதல், திருமணத்தில் தான் முடிகின்றன.

மீத 10%த்தில் இருப்பவர்கள், எங்கே காதலிக்கிறேன் என்று கூறினால், இப்போது நிலைத்திருக்கும் நட்பும் கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் பிரபோஸ் செய்வதே இல்லை.

மிக அரிதாக தான் நாம் இந்த நெருங்கிய தோழமையில் பழகும் ஆண், பெண் தோழமையை காண இயலும். அவர்களும் வேறு ஒரு ஆண், பெண்ணுடன் காதல் உறவில் இருக்கலாம்.

ஒருவேளை ஏற்கனவே அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் காதலில் இருந்தால் அந்த நெருங்கிய தோழன் மூலமாக என்னென்ன விஷயங்கள் எல்லாம் அவர் முன் கூட்டிய அறிந்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராடுத்தனம்!

பிராடுத்தனம்!

எந்தெந்த தருணத்தில், எப்படி எப்படி எல்லாம் சால்ஜாப்பு காரணங்கள் சொல்லி நண்பர்களுடன் ஊர் சுற்றுவார்கள். எப்போதெல்லாம் சரக்கு, தம்மு என ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளன என தனது நெருங்கிய தோழன் மூலமாக தனது காதலன் என்னென்ன பிராடுத்தனம் எல்லாம் செய்கிறார் என்பதை முன்னவே அறிந்துக் கொள்வார்களாம்.

 தப்பியோட்டதிற்கு உதவி!

தப்பியோட்டதிற்கு உதவி!

ஒருவேளை தங்கள் காதலை வீட்டில் பெற்றோர், பெரியவர்கள் சம்மதிக்கவில்லை என்றால், வீட்டைவிட்டு ஓடிப் போய் தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் பெண் தோழிகளை விட, நெருங்கிய ஆண் தோழர்களே அதிகம் உதவுவார்கள். அதிலும், பெஸ்டீ ரேஞ்சில் ஒரு தோழன் இருந்தால், அவனே தலைமை தான் ரிஜிஸ்டர் திருமணம் செய்து வைத்துவிடுவான்.

சண்டைக்கு காரணம்!

சண்டைக்கு காரணம்!

காதலர்கள் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் அசால்ட்டாக கடந்து வந்துவிடுவார்கள். ஆனால், சின்ன, சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சண்டையிட்டு பல நாட்கள் பேசாமல் இருப்பார்கள். இது போன்ற காலத்தில், உங்கள் சண்டைக்கு இதுதான் காரணம், இதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல என்று அட்வைஸ் கூறி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

உணர்வு ரீதியான பிரச்சனைகள்!

உணர்வு ரீதியான பிரச்சனைகள்!

காதலில் உணர்வு ரீதியான பிரச்சனைகள் எட்டிப் பார்க்கும் போது, அந்த சூழலில் அவளது காதலன் எத்தகைய உணர்வு ரீதியில் வெளிப்பட்டிருப்பான், அவன் கடந்து வரும் சூழலானது எத்தகையானதாக இருக்கலாம் என்பதை காதலனின் சூழலில் இருந்து யோசித்து, அவர்களுக்குள் விரிசல் ஏற்படாமல் இருக்க உதவுவான். இதுவே பெண் தோழிகளாக இருந்தால், இந்த பசங்களே இப்படி தாண்டி என புறம்பேசி காதலுக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.

துரோகம் டிடக்டர்!

துரோகம் டிடக்டர்!

ஒருவேளை தனது காதலன் தனக்கு துரோகம் செய்வதாக கருதுவதாக அல்லது துளி சந்தேகமாக இருந்தாலும் சரி, அதை தனது நெருங்கிய ஆண் தோழனிடம் கூறினால் போதுமானது, டிடக்டிவ் போல இராப்பகலாக கண்காணித்து அவனது 24x7 ஆக்டிவிட்டீஸ் பற்றி முழு அறிக்கை தெரிவித்து, அவன் நிஜமாகவே வேறு பெண்ணுடன் உறவில் இருக்கிறானா? இல்லையா? என்பதி புட்டுப்புட்டு வைத்திவிடுவான்.

பரிசுகள்!

பரிசுகள்!

காதல் பரிசுகள், சர்பரைஸ் பரிசுகள் என்று வரும் போது, பெண்களுக்கு அவர்களுக்கு பிடித்த மாதிரியான பரிசுகள் தான் தேர்வு செய்வார்கள். அதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு தனது காதலனுக்கு பிடித்த மாதிரி பரிசுகள் வாங்கி தருவதற்கு, சர்ப்ரைஸ் ஒரு டீஸ்பூன் அதிகமாக இருக்க நெருங்கிய ஆண் தோழர்களின் உதவி இருக்கும்.

சூழல் சார்ந்த போதனை!

சூழல் சார்ந்த போதனை!

காதல் உறவில் பெரும்பாலும் சண்டை வருவதற்கு காரணம், காதலி சூழலை காதலன் அறிந்துக் கொள்ளாமல் போவதும், காதலனின் சூழலை காதலி அறிந்துக் கொள்ளாமல் போவதும் தான். இந்த வேளையில் நட்பு என்ற பெயரில் நடுவே புகுந்து சேர்த்து வைப்பவர்களும் இருக்கிறார்கள், பிரித்து வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், ஒரு பெண்ணுக்கு நெருங்கிய ஆண் தோழன் ஒருவன் நட்புறவில் இருந்தால், அவன் எந்தெந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிய வைத்து காதல் பிரியாமல் இருக்க உதவுவான்.

ஃப்ரீடம்?!

ஃப்ரீடம்?!

ஒரு பெண்ணுக்கு நெருங்கிய ஆண் தோழன் இருப்பதால், காதலில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? என்று யோசிக்காதீர்கள். இதில் தீமைகளும் சிலவன இருக்கின்றன.

சுதந்திரமாக காதலனுடன் எங்கேயும் சென்று வர முடியாது. இதெல்லாம் தப்பு, அம்மா - அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் என்று கிட்டத்தட்ட போட்டுவிடும் குணம் கொண்ட தோழனாகவோ, கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட தோழனாகவோ இருந்தால், நீங்கள் எங்கேயும் போய் வர முடியாது.

ஒருவேளை!

ஒருவேளை!

அதே போல, 50 - 50% ஒரு பெண்ணுடன் நெருங்கிய நட்பு உறவில் இருக்கும் ஆண் காதல் வயப்படவும் வாய்ப்புகள் உண்டு. அப்படி ஒருவேளை அந்த நெருங்கிய தோழன் உங்கள் மீது காதல் வயப்பட்டிருந்தால், மேற்கூறிய எல்லா நன்மைகளையும் தீமையாக்கி பிரித்துவிடவும் வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கே தெரியாமல் ஒரு உள்குத்து விவகாரம் ஓடவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், இதற்கு பெயர் நட்பே அல்ல.

ஆனாலும்...

ஆனாலும்...

என்ன தான் ஒன்னு ரெண்டு தீமை நடக்க வாய்ப்புகள் இருந்தாலுமே கூட, லவ்வுல ஏதாவது பிரச்சனைனா, போலீஸ், கீலீஸ்ன்னு எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்ன்னு முன்ன நின்னி அந்த காதல சேர்த்து வெச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறது 99% ஆண் தோழர்கள் தான். இதை யாராலும் மறுக்கவே முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Every Girl Who Has a Close Male Friend Only Know These Relationship Lessons!

Every Girl Who Has a Close Male Friend Only Know These Relationship Lessons!
Story first published: Monday, March 12, 2018, 17:51 [IST]