For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரொமான்ஸ் நேரத்தில் துணையுடன் ஏற்பட்ட சங்கோஜமான விஷயம் குறித்து கூறும் பெண்கள்!

By John
|

நாம் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மை அறியாமல் செய்யும் தவறால் அந்த அழகான சூழலை நாமே கேடுத்துவிடுவோம்.

அப்படி தங்கள் காதல் துணையுடன் அமைந்த ரொமான்ஸான சூழலை தங்கள் காரியத்தால் சந்கோஜமடைய செய்ததாய் சில பெண்கள் ஆன்லைனில் தெரிவித்த உண்மை அனுபவங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நீண்ட நாள் கழித்து நாங்கள் இருவரும் ஒரு டேட் செல்ல பிளான் செய்திருந்தோம். அது ஒரு டின்னர் டேட். திறந்தவெளியில் கேண்டில் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டேபிளில் நாங்கள் அமர்ந்து பத்து நிமிடங்கள் கூட இருக்காது. அப்போது என்னை கடந்து சென்ற ஒரு ஹாட்டான ஆணை நான் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். இது என் காதலனை வெறுப்பேற்றியது. பிறகு சமாதானப்படுத்துவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.

#2

#2

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது பதட்டம், சோகம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டுவிடுவேன். அது தான் என்னுடைய முதல் டேட் அனுபவம். ஆர்வத்தில் ஒகே சொல்லிவிட்டாலும், டேட் சென்ற உடன் பதட்டம் அதிகரித்துவிட்டது. பிட்சா ஹட்டில் சாப்பிட நுழைந்தோம். என் பதட்டத்தை குறைக்க எப்போதும் போல நிறைய ஆர்டர் செய்து சாப்பிட துவங்கிவிட்டேன். அவன் பேசுவதற்கு எல்லாம் பிட்சாவை சாப்பிட்டுக் கொண்டே தலையாட்டிக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவுடன், நான் சாப்பிட்ட மொத்த பிட்சாவும் குமட்டிக் கொண்டு வெளியே வந்துவிட்டது.

#3

#3

அது ஒரு ரொமாண்டிக்கான சூழல்... நாங்கள் இருவரும் என் வீட்டில் தான் இருந்தோம்... சேர்ந்து ஒன்றாக சமைத்துவிட்டு ரொமான்ஸில் ஈடுபடலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், சமைக்கும் போது விளையாட்டாக அவனை கரண்டியை வைத்து அடிக்க முற்பட்டேன், அது அவன் மூக்கில் பலமாக தாக்கி இரத்தம் கொட்ட காரணமாகிவிட்டது. பிறகு அந்த ரொமான்ஸ் சூழல் மருத்துவமனையில் முடிந்தது.

#4

#4

நாங்கள் இருவரும் பெங்களூரில் தங்கி ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். நாங்கள் இருவரும் காதலர்கள் என்று யாருக்குமே தெரியாது. வெளிப்படுத்திக் கொள்ளவும் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆகவே, வார இறுதி நாட்களில் மட்டும் எங்காவது திட்டமிட்டு தூரமாக டேட்டிங் செல்வது எங்கள் வழக்கம். அப்படி ஒருமுறை தீம் பார்க் சென்றிருந்தோம். அங்கே ஒரு விளையாட்டில் ஆடிவிட்டு கீழே இறங்கும் போது, அவன் என்னை மேலே இருந்து கீழே இறங்க உதவ முன்வந்து ஆசையாக தூக்கினான். அந்நேரம் பார்த்து எதிர்பாராத விதமாக வாயு வெளியேறிவிட்டது.

#5

#5

நாங்கள் இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தாலும்... எங்களுக்குள் ரொமாண்டிக் முத்தம் அல்லது கட்டிபிடித்தல் எதுவும் நிகழ்ந்தது இல்லை. அன்று தான் ஒரு ரொமான்டிக்கான தருணம் அதுவாக அமைந்தது. சன்று ஹவுஸ் பார்ட்டியில் நண்பர்கள் அனைவரும் உறங்கிய பிறகு கார்டன் ஏரியாவில் நாங்கள் இருவரும் மட்டும் பேசிக் கொண்டிருந்தோம்.

நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது நிலா வெளிச்சம் மற்றும் எங்களை தவிர வேறு யாரும் இல்லாத சூழல். முத்தமிட்டு கொள்ள இதைவிட நல்ல நேரம் அமையுமா..நெருங்கி முத்தமிடும் போது... என் தொண்டையில் ஒரு வினோதமான சப்தம் வெளிப்பட்டது. ஏப்பம்! மொத்த மூடும் அவுட்டாகி... காமெடி நேரமாகிவிட்டது.

#6

#6

எனக்கு கெட்ட பழக்கம் இருக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். ஆனால், எனக்கோ அதுவே ஒரு சாபமாகிவிட்டது. நான் எதற்கு எடுத்தாலும் சிரிப்பேன். வியப்படைந்தால், மகிழ்ச்சி அடைந்தால், சுவாரஸ்யமாக எதையாவது கண்டால்... அப்படி தான் முதன் முதலில் என் காதலன் என்னை இதழ் முத்தமிட்ட போதும் சிரித்துவிட்டேன்.

#7

#7

அன்று தான் அவனை என் வீட்டில் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைக்க திட்டமிட்டிருந்தேன். அது அவனுக்கு தெரியாது.. வீட்டில் யாருமில்லை வா என்று கூறி அவனை அழைத்திருந்தேன். அவன் வீட்டுக்குள் நுழையும் நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரரின் நாய் சுவர் ஏறி குதித்து எங்கள் காம்பவுண்டுக்குள் வந்துவிட்டது. அவன் அதற்கு பயந்து திரும்பி தலைத்தெறிக்க ஓடிவிட்டான். அவன் நாய்க்கு பயந்து ஓடுவதை என் மொத்த குடும்பமும் வெடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது.

#8

#8

எங்கள் மேனேஜர் கொடுத்த பார்ட்டி நிகழ்வு அது. பார்ட்டி துவங்கிய இரண்டு மணி நேரங்களில் ஆங்காங்கே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர். எங்களை யாரும் கவனிக்காத ஒரு நேரத்தில் நாங்கள் முத்தமிட்டுக் கொண்டோம்... அவன் சரியாக முத்தமிடவில்லை.. உனக்கு கிஸ் பண்ண கூட தெரியல என்று கூறினேன்.. அவன் முகம் அதிர்ச்சியில் உறைந்து போனது... ஏன்டா இதுக்கு போய் இப்படி முழிக்கிற என்று திரும்பி பார்த்தால், ஒரு கூட்டமே எங்களை பார்த்துக் கொண்டிருந்தது. நான் கொஞ்சம் சத்தமாக கூறிவிட்டேன் போல.

#9

#9

நாங்கள் இருவரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தோம். ஒரு திருப்பத்தில் என் கையை அவன் தவறாக பிடித்து இழுக்க வலியில் கியோமுயோ என்று கத்திவிட்டேன். பாடல் நிறுத்தப்பட்டு அனைவரும் என்னை சூழ்ந்துவிட்டனர். அனைவரும் என் காதலனை ஒரு மாதிரி பார்த்தனர். நான் கொஞ்சமாவது வலியை பொறுத்துக் கொண்டு மெச்சூருட்டியூடன் நடந்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

#10

#10

அன்று டேட் சென்ற போது எதிர்பாராத நேரத்தில் பிரபோஸ் செய்து மோதிரம் அனுவித்தான் என் காதலன். ஆனால்... அதே இரவில் டின்னர் முடித்து வாஷ்ரூம் சென்று திரும்பும் போது அந்த மோதிரத்தை தொலைத்துவிட்டேன். எவ்வளவு தேடியும் அந்த மோதிரம் மீண்டும் கிடைக்கவில்லை. இதனால் ஒருசில வாரங்கள் நாங்கள் இருவரும் சரிவர பேசிக் கொள்ளாத சூழல் உண்டானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Embarrassing Things Happened On Date!

Here we have listed the confessions people shared online about the mosts embarrassing things happened on their dating experience.
Story first published: Saturday, December 15, 2018, 13:08 [IST]