“புணர்தல்” எங்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பகிரங்க கேள்வி! My story #57

By: volga
Subscribe to Boldsky

ம்மா.... இன்னைக்காவது வாங்கித்தருவியா?

இடுப்பிலிருந்து நழுவும் டவுசரை கையில் பிடித்துக் கொண்டு கண்ணை கசக்கிக் கொண்டு நிற்கும் மகனுக்கு ஒரு அரைஞான் கயிறு கூட வாங்கத் துப்பில்லாத நிலைமை யாருக்கும் வந்து விடக்கூடாது ஆண்டவா... மனதில் சொல்லிக் கொண்டேன்.

Relationship story of a young family man

Image Courtesy

அப்பா வர்ற ஞாயித்துக் கிழம சம்பளம் வாங்கிட்டு வருவாறு அப்போ வாங்கித்தரேன் சரியா இப்போ பாப்பா ரிப்பன் இருக்கு அத கட்டிவிடுறேன் ஒண்ணும் விழாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டவுசரில் :

டவுசரில் :

போம்மா.... பசங்க எல்லாம் என்னைய கிண்டல் பண்ணுவாங்க என்று எழுந்து ஒடினான்.

பள்ளிக்குச் செல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்தவனை அடித்துப் பிடித்து இழுத்து வந்து, டவுசரில் இரண்டு பின் கோர்த்து மாட்டி விட்டு அனுப்பியிருக்கிறேன்.

இரண்டு மாதங்கள் :

இரண்டு மாதங்கள் :

வெளியிடத்தில் நம் ஆடை லேசாக நழுவுகிறது என்றாலே எப்படிப் பதறகிறோம். ஓடியாடி விளையாடும் குழந்தை ஒவ்வொரு நடையின் போதும் எங்கே தன் ஆடை கழண்டிடுமோ என்று பயந்து கொண்டேயிருக்க முடியுமா?

நிச்சயம் அந்த குழந்தை இந்த வாழ்க்கையை வெறுத்திருப்பான். எங்களை சபித்திருப்பான். வாரக்கடைசி வாரக்கடைசி என்று சொல்லி சொல்லியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. இந்த வாரக்கடைசியில் வாங்கிக் கொடுக்க வில்லையெனில் அவ்வளவு தான்.

நாயை விட கேவலமான பிழைப்பு :

நாயை விட கேவலமான பிழைப்பு :

ஹைவேஸ் ரோட்டிற்கு இடதுபுறமாக ப்ளாட்பாரத்திலேயே நாங்கள் ஐந்து குடும்பங்கள் வசிக்கிறோம். ஊரில் கூலி வேலை சரியாக கிடைக்காததால் பிழைப்புக்காக இங்கே வந்தோம், நாயைவிட கேவலாமான பொழப்பு தான்.

வேலை :

வேலை :

ப்ளாட்பாரம் சுவற்றிலேயே மேலே ஒரு சுவரொட்டியை கிழித்து மேற்கூரையாக போட்டுக் கொண்டோம்.களிமண் பொம்மை,மண் பானை, ஆகியவற்றை செய்து பேரம் பேசி விற்பதற்குள் தாவு தீர்ந்திடும்.

ஆண்கள் பகல்வேலைகளில் கூலி வேலைக்குச் சென்று விடுவர், ஒன்று கட்டிட வேலை, ரோட்டோரங்களில் குழி வெட்டுவது, ரோடு போடுவது, சில நேரங்களில் சாக்கடை அள்ளும் வேலையைக் கூட செய்து விட்டு வருவார்கள்.

Image Courtesy

மழை :

மழை :

குழந்தைகள் குப்பையை பொறுக்கிக் கொண்டு திரிவார்கள். ஒவ்வொரு வேலை உணவுமே பெரும் திண்டாட்டம் தான். தினமும் இரவுகளில் பத்து மணிக்கு ஒன்று கூடும் நாங்கள் அன்றைய பொழுதில் நடந்தவற்றை பேசி நொந்து விவாதித்து தூங்கி விடுவோம்.

மழை நாளில் சொல்லவே வேண்டாம். சில நேரங்கள் சொட்டசொட்ட நனைந்து கொண்டு நிற்ப்போம். எப்படியாவது குழந்தைகளை மட்டும் நனையாமல் எங்காவது ஒதுங்க வைத்து விடுவோம்.

Image Courtesy

பசி :

பசி :

பல இரவுகளில் எங்களுக்கு உணவு கிடைக்காது. நாங்கள் வசிக்கும் ஏரியாவிலேயே கடைசியில் தண்ணீர் டேங்க் இருக்கிறது. நாங்கள் கும்பலாக சென்று வயிறு முட்ட தண்ணீர் குடித்து விட்டு வந்து படுத்துக் கொள்வோம்.

என்ன அன்றைய தினம் பசியால் புரண்டு புரண்டு படுக்கும் குழந்தைகளை பார்த்தால் தான் பரிதாபமாக இருக்கும். எங்காவது வேலை கிடைக்காதா.... அனத்திக் கொண்டிருக்கும் இந்த வயிற்றை சமாதானப்படுத்த முடியாதா என்ற தவிப்பு எங்கள் எல்லாருக்கும் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

Image Courtesy

நிம்மதி :

நிம்மதி :

வீட்டில் கதவை சாத்திக் கொண்டு தூங்குவது போல் நிம்மதியாக தூங்க முடியாது. எப்போது யார் வருவார்கள் என்று கூட சொல்ல முடியாது, என்ன ஒரே நிம்மதி நாங்கள் வசிக்கும் ரோடு மிகவும் குறுகலானது அதனால் பெரிய பெரிய வண்டிகள் வராது. வண்டிச்சக்கரத்தில் நசுங்கிச் சாக மாட்டோம் என்ற நிம்மதியிருந்தது.

நடைபாதை :

நடைபாதை :

ஆனால் இரவில் ‘தொல்லை'கள் ஜாஸ்தி.... சற்று விலகிப்போய் படுத்தாலும் எங்கே அப்படியே அள்ளிக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து கொண்டு நாங்கள் எல்லாருமே ஒரேயிடத்தில் தான் தூங்குவோம்.

இரவில் மட்டும் ஓலைத்தடுப்பு போல செய்து ஒரு பகுதியில் முழு ப்ளாட்பாரத்தையும் மறைத்துக் கொள்வோம். விடியற்காலை எழுந்து உடை மாற்றுவதற்கு அந்த இடம். வேலை முடிந்ததும் அதனை கழற்றி சுவறோரமாக படுக்க வைத்து விடுவோம்.

Image Courtesy

கட்டியவள் :

கட்டியவள் :

பகலெல்லாம் நாய் படாத பாடு. வயசு வித்யாசம் இல்லாம பேச்சு வாங்கிட்டு, அவன் கொடுக்குற பிச்சக்காசுக்காக கையகட்டிட்டு நிக்க வேண்டியதா இருக்கு கூலிக்காரன்னு ஒரு இளக்காரம் வேற.... அங்கே காட்ட முடியாத கோபமும், எரிச்சலும் கட்டியவள் மீது தான் வந்து விழும்.

Image Courtesy

இரவு பன்னிரெண்டு மணி :

இரவு பன்னிரெண்டு மணி :

இங்கே சோற்றுக்கே வழியில்லை என்று கதறிக் கொண்டிருக்க.... பிராந்தி பாட்டில் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்ள மட்டும் கணவன்மார்களுக்கு காசு சேர்ந்திடும். குடித்திருந்தால் மட்டும் அங்கே குழந்தைகளை விட்டு தள்ளியே தூரமாக படுக்கச்சொல்வேன்.

சில நேரத்தில் அவன் கேட்காமல் தந்தைப்பாசம் பீறிட்டு வந்து குழந்தைகள் பக்கத்தில் படுத்துக் கொண்டால் சிறிது நேரம் கழித்து குழந்தையை தூக்கி இடம் மாற்றி தூரமாக படுக்க வைத்துவிடுவேன்.

புலம்பல் :

புலம்பல் :

யம்மா... நீ பெத்துப் போட்ட புள்ள இப்ப என்ன பண்ணுது தெரியுமா? ..... பிச்சயெடுக்குது ஐயா.... அம்மா பிச்சப்போடுங்க என்று சொல்லி கையேந்தி புலம்பிக் கொண்டிருந்தான். மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்கும்.

ஆள் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்துவிட்டது. பக்கத்து தெருவில் எரியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் நாங்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்க அவன் சத்தத்தை கேட்டு முழித்துக் கொண்டேன்.

கணவரின் தள்ளாட்டம் :

கணவரின் தள்ளாட்டம் :

லுங்கியை தொடை தெரிய ஏற்றிக் கட்டியிருந்தான். கால் இரண்டையும் பின்னிப் பிணைந்து வரும் போதே ஆள் சரியில்லை என்பதை யூகித்துக் கொண்டேன். எழுந்து நாங்கள் படுத்துக் கொண்டிருக்கும் இடத்தை விட்டு தள்ளி அவனுக்கான தலையணையான துணி மூட்டையை தூக்கிப் போட்டேன்.

ஜம்முனு நடக்கும் :

ஜம்முனு நடக்கும் :

யே... அழகி உடனே எழுந்து வந்துட்ட ... ரொம்ப நேரமா காத்துகிடக்கியா? நீ பாத்துட்டேயிரு அங்க தெரியுது பாரு அந்த மாதிரி ஒரு மாடிவிட்டுல கொண்டு போய் உன்னைய உக்கார வைப்பேன். என் புள்ளைக எல்லா பெரிய பெரிய மூட்டைய மாட்டிக்கிட்டு பள்ளிகூடத்துக்கு போகுமுங்க ஜம்முனு நடக்கும் கண்டிப்பா

ம்ம்.. சரி சரி நடக்கட்டும் நீ துண்ணு என்று பழைய சாதம் வைத்திருக்கும் சட்டியை அவன் முன்னால் வைத்தேன்.

கண்ணு தெர்ல :

கண்ணு தெர்ல :

இரு டீ... எங்கடீ வெடப்பா எந்திருச்சு போற உக்காரு என்று கையைப் பிடித்து இழுத்தான்.

ஏய் விடு... தண்ணியடிச்சா புத்தி மங்கிப் போயிரும் புள்ளைக எல்லாம் தூங்குத கண்ணு தெர்ல...

அதுக தூங்கட்டும் டீ நீ உக்காரு என்று இழுக்க நான் விடு என்பது போல கையை இழுத்துக்கொண்டேயிருந்தேன்.

பளார் :

பளார் :

பொட்ட நாயி என்ன திமிறு.... சொல்லிட்டேயிருக்கேன் என்று ஒரே இழு... நான் தரையில் விழுந்து கிடந்தேன், கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை.

படுத்திருந்தவர்கள் எழுந்து டேய்.... மூடிட்டு தின்னமாட்டியா என்னடா சண்ட என்று குரல் கொடுத்து விட்டு படுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு ஆளாக எழுந்து எங்களைப் பார்ப்பதும் திரும்பி படுத்துக் கொள்வதுமாய் இருந்தார்கள்.

பள்ளிக்கூடம் :

பள்ளிக்கூடம் :

ஏய் சொல்லு டீ... நம்ம புள்ளைக பள்ளிகூடத்துக்கு போகும்ல நல்லா படிக்கும்ல

அடுத்த வேலை சோத்துக்கே வக்கில்லையாம் இதுல துரை பள்ளிகூடத்துக்கு அனுப்ப போறீங்களாக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டே... ம்ம்ம் போகும் போகும் என்று சொன்னேன்.

Image Courtesy

பாவம் :

பாவம் :

அந்த காண்ட்ராக்டர் நாயி காலைல அவன் குடிக்கிற டீ கிளாஸ நான் கையில தொட்டுட்டேனாம் அப்பிடி கத்துறான். குரல்வலைய கடிச்சு துப்பியிருக்கணும் இப்படி ஆரம்பித்து அவன் காலையிலிருந்து சந்தித்தவற்றை புலம்பித் தீர்பான்.

ஒரு பக்கம் பாவமாய் இருக்கும். அவனும் மனுஷன் தான நம்ம இங்கனயே இருந்துட்டு பசிய பத்தி மட்டும் நினச்சுட்டு உக்காந்திருக்கோம். அவன் நாலு இடத்துக்கு போறவன் ஒவ்வொருதனும் என்ன பேச்சு பேசுவானுங்க எல்லாத்தையும் கேட்டா நைட்டு நிம்மதியா தூக்கம் வருமா...

குடிக்கட்டும் நல்லா குடிக்கட்டும் மெய் மறந்து ஒரு அஞ்சு மணி நேரமாவது நிம்மதியா தூங்கட்டும் என்று தான் எனக்கு தோன்றியது.

எல்லாருக்கும் சிரிப்பு :

எல்லாருக்கும் சிரிப்பு :

சாப்பிட்டு முடித்திருந்தான். எழுந்து நடந்து சென்றான் எங்கே செல்கிறேன் என்று எட்டிப்பார்த்தேன். கொட்டகை போட்டு வைத்திருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.

என்னைய நம்பி கட்டிட்டு வந்தவளே.... எங்கடீ போன இங்கன வாடி என்று அங்கிருந்து கத்தினான். எல்லாரும் திரும்பி படுத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Image Courtesy

வரப்போறீயா இல்லையா?

வரப்போறீயா இல்லையா?

யோவ்.... மானத்த வாங்காத மூடிட்டு தூங்கு என்று சொல்லிவிட்டு நானும் படுத்துக் கொண்டேன்.

இந்தம்மா அதான் வீட்டுக்காரரு ஆசையா கூப்டுறாரு...

அக்கா சும்மாயிருக்கா அந்த ஆளு வேற விவஸ்த்தையே இல்லாம பேசிட்டு கிடப்பான்.

நான் வராததையெடுத்து மீண்டும் என்னருகில் வந்துவிட்டான். என்னை காலால் உதைத்தான்... ஏய் வரப்போறீயா இல்லையா ???

Image Courtesy

ஐந்தே நிமிடம் :

ஐந்தே நிமிடம் :

நீ தூங்கு பேசாமா காலைல நாலு மணிக்கு கிளம்ப வேணாமா மணி இப்பவே ரெண்டாயிடுச்சு என்றேன்.

ஐஞ்சு நிமிஷம் வந்துட்டு போயேண்டீ...

எனக்கு பின்னால் படுத்திருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பது நன்றாக கேட்டது.

இவன் சொன்னால் கேட்டுத் தொலையமாட்டான். தள்ளூ வந்துத் தொலையுறேன் என்று சொல்லி எழுந்து கொண்டேன்.

குளிர் காற்று :

குளிர் காற்று :

பாதி மறைக்கப்பட்ட ஓலை கொட்டைகைக்குள் புகுந்து கொண்டோம். ஒருவர் நீட்டி படுக்கலாம் அவ்வளவு தான் இடம். மீதி இடத்தை சேலையைக் கொண்டு கதவாக்கினோம். குளிர்ந்த காற்று உடலெங்கும் படர்ந்தது.

எனக்கு விருப்பமில்லை என்றாலும் அவனுக்காக.... எல்லாமே அவனுக்காகத்தான். விடிந்திருந்தது. வழக்கம் போல நான் முழிப்பதற்கு முன்னரே அவன் எழுந்து கிளம்பிவிட்டிருக்கிறான்.

இன்னைக்காவது மூணு வேல சோறு கிடைக்கணும். இயந்திர வாழ்கை ஆரம்பமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship story of a young family man

Relationship story of a young family man
Subscribe Newsletter