16 ஆம் நூற்றாண்டு ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தின் தீர்வு 2017 ஆம் ஆண்டு கிடைத்த ஆச்சரியம்!

Posted By:
Subscribe to Boldsky

முதல் காதல் ரொம்பவே ஸ்பெஷலானது யாராலயும் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியது. அது கல்யாணத்துல முடிஞ்சதோ இல்லையோ அதெல்லாம் ரெண்டாம் பட்சம். ஆனா ஃபர்ஸ்ட் லவ்னு நினச்சதும் நியாபகம் வர்ற முகம், நம்ம சிரிச்சது, வெக்கப்பட்டது, பயந்தது, அழுதது, தயங்கினது எல்லாமே ஒரு செக்கண்ட் அப்டியே முன்ன வந்து நிக்குமே...

அந்த ஃபீல் மட்டும் போதும் நம்மள நாம்மளே ரசிக்க.... என்ன நானே ரசிக்கப் போறேன். இந்தக் கதையில நிச்சயம் உங்களோட ஸ்கூல் டேஸ் நியாபகம் வரலாம் ஏன் சிலருக்கு அவங்களோட காதல் பக்கங்களை கூட நினைவுப்படுத்தலாம். என் காதல் ஆரம்பிச்ச இடம் எங்க ஸ்கூல் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது ஆரம்பிச்சதே நாடகம் தான் :

இது ஆரம்பிச்சதே நாடகம் தான் :

அப்போ நான் பதினோராம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். அவளும் தான். அந்த வருஷம் ஸ்கூல் ஆண்டுவிழாவுக்காக ஆங்கில நாடகம் நடத்தினாங்க.

அது ஷேக்ஸ்பியரோட The Merchant of Venice நாடகம். ஆண்ட்னியோ, பெசானியோ, க்ராடியனோ,லாரென்ஸ்,நெரிசா,ஜெஸிகா,ஷைலாக்,போர்சியான்னு நிறைய கேரக்டர்ஸ்.... நம்ம ரசிக்க வேண்டியது போர்சியா தான். ஆமா, அவ போர்சியா கேரக்டர்.

Image Courtesy

 காதலன் :

காதலன் :

ஆரம்பத்துல ஷைலாக், லாரன்ஸ்னு தான் எனக்கு கேரக்டர்கள் கொடுத்து பெசானியோ கேரக்டர் எடுத்தப் பையன் டயலாக் சரியா சொல்லாததால எனக்கு அந்த சான்ஸ் வந்தது.

இனி நான் தான் பெசானியோ.... அதவாது போர்சியாவோட காதலன்.

Image Courtesy

அவளே நிரம்பியிருந்தாள் :

அவளே நிரம்பியிருந்தாள் :

கிட்டதட்ட கதையில அவ போர்ஷன் தான் அதிகம். பெசானியோவோட காதலியா ஒரு பக்கம், பெசானியோவ ஷைலாக் ஏமாத்தியதால நண்பன் ஆண்டனியோகிட்ட கெட்டபேர் வாங்கும் போது மாறு வேஷத்துல வந்து வக்கீலா வாதாடி தன் காதலன் மேல தப்பு இல்ல அவன ஷைலாக் தான் ஏமாத்தினான்னு நிருபிக்கணும்.

கடைசியா போர்சியாவுக்கும் பெஷானியோவுக்கும் கல்யாணம் நடக்குறதா நாடகம் முடியும்.

Image Courtesy

ரிகர்சல் நடக்கும் போது :

ரிகர்சல் நடக்கும் போது :

பெசானியோ கிட்ட காதலச் சொல்றதுக்கும், ஷைலாக் கிட்ட கோபத்தோட பேசறதுக்கும் ரொம்ப சிரமப்பட்டா.... சாட்சிக்கு கூப்ட வேண்டிய கேரக்ட்ரஸ் பேர வேற மறந்து மாத்தி மாத்தி கூப்ட்டுட்டு இருந்தா.

ஒரு கட்டத்துல அந்த இங்கிலீஸ் மிஸ் கடுப்பாகிட்டாங்க. போர்சியா கேரக்டர் உனக்கு சூட் ஆகும்னு கொடுத்தோம் ஆனா இப்டி சொதப்பினா என்ன பண்றது? என்று கேட்டு இப்போ ப்ரின்சிப்பல் சார் ரிகர்சல் பாக்கப் போறாங்க இதுல சொதப்பின அவ்ளோதான்.

இது தான் லாஸ்ட் சான்ஸ் என்று மிரட்டலுடன் ஒத்திகை நடந்தது.

Image Courtesy

குழந்தையே....

குழந்தையே....

நண்பன் ஆண்டனியோ என்னைப் பற்றி தவறாக நினைத்து விட்டான் என்று பெசானியோ வருந்தும் போது, கவலைப்படாதே பெசானியோ உனக்காக நான் வாதாடுகிறேன் என்று அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.

பெசானியோ சோகத்துடன் உட்காரும் வரை காட்சி நன்றாகச் சென்றது. இப்போது போர்சியாவின் நேரம். பெசானியோ அருகில் சென்றாள். அவன் தோலைத் தட்டிக் கொடுக்கும் போது அவள் முகத்தில் ஏதோ தடுமாற்றம், குழந்தை பெயரை மறந்து விட்டது.

Image Courtesy

டியர் :

டியர் :

ஆசிரியரின் கடைசி மிரட்டல் நினைவுக்கு வர கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ஷை..பா.... என்று ஏதோ திக்கி டியர் என்று உச்சரித்துவிட்டாள்.பின்னர் கவலைப்படாதே நானிருக்கிறேன் என்று சொல்ல அங்கிருந்த ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் ஓ....வென்று கைத்தட்டி விசிலைப் பறக்கவிட்டார்கள்.

Image Courtesy

பாராட்டு :

பாராட்டு :

அவளுக்கு பயங்கர பாராட்டு.... இந்த நாடகத்திலேயே மிகவும் நன்றாக நடித்தது போர்ஷியா தான். அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. காதலனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் அப்படியே உண்மையாக கண்ணீர் விடும் காதலிகளைப் போல என்று பிரின்சிபல் சார் பாராட்ட எங்கள் ஆங்கில ஆசிரியர் முந்திக்கொண்டார் எல்லாம் நம்ம ட்ரைனிங் தான் சார்.

நான் தான் இந்தப் பொண்ணு பெர்ஃபெக்டா பண்ணுவான்னு செலக்ட் பண்ணேன் என்றார்.

அவரும் குட் ஜாப் என்று கை குலுக்கிவிட்டு நகர்ந்து விட்டார்.

Image Courtesy

 நாடகக்காரி :

நாடகக்காரி :

இந்த இடத்தில் இப்படி அழ வேண்டும், டியர் என்று சொல்ல வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லித் தரவில்லையே என்று ஆசிரியர் கேட்க.... அவளுக்கு அழுகை நிற்க வில்லை பீறிட்டு அழுகை வந்தது தாரை தாரையாக கண்ணீர் ஊற்ற ஆசிரியர்கள் எல்லாம் பதறிவிட்டார்கள்.

என்னச்சு??? என்று கேட்க அவள் அழுது கொண்டே இல்லை இந்த நாடகத்தில் நான் நடிக்கவில்லை என்றாள்.

Image Courtesy

அட லூசுப் பொண்ணே :

அட லூசுப் பொண்ணே :

துருவித் துருவி விசாரிக்க... தான் பெயரை மறந்துவிட்டதாகவும் பயத்தில் அழுகை வந்துவிட்டதாகவும்,பெயர் மறந்ததை சமாளிக்க டியர் என்று போட்டுக் கொண்டதாகவும் சொன்னாள்.

எல்லாருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

இதற்காகவா அழுகிறாய். அது தான் எங்களுக்கு தெரியவேயில்லையே.... பிரின்சிப்பல் சார் எப்டி உன்ன பாராட்டினாங்க நீ இப்ப சொல்லி தான் எங்களுக்கே இந்த விஷயம் தெரியுது.

Image Courtesy

பிரம்மிப்பு

பிரம்மிப்பு

ஆரம்பத்தில் அவளைப் பார்த்து ஒரு பிரம்மிப்பு இருந்தது. 20 நிமிட நாடகத்தில் கிட்டதட்ட பத்து நிமிடங்கள் வரை மேடையில் இருக்க வேண்டும். பக்கம் பக்கமான வசனங்களைப் பேச வேண்டும். நடுவில் மாறுவேடம் வேறு

அசால்ட்டாக செய்து முடிக்கிறாளே அதோடு மாலை நான்கு மணிக்கு மேல் வகுப்புத் தோழிகளிடம் நோட்டுக்களை வாங்கி அன்றைக்கு நடத்திய பாடங்களை கேட்டுக் கொள்வாள். கணக்கு நோட்டை மட்டும் அங்கேயே உட்கார்ந்து காப்பி செய்து கொள்வாள்.

சில நேரங்களில் அந்த நோட்டுக்கள் எனக்கும் இரவல் வருவதுண்டு.

Image Courtesy

எங்கடா உன் ஆளு :

எங்கடா உன் ஆளு :

நாடகத்தில் என்னுடைய காதலி என்பதால் ரிகர்சல் பார்க்கும் போது அவள் அங்கு இல்லை என்றால் டேய்...பெசானியோ எங்கடா உன் ஆளு என்று கேட்க எனக்கு சிரிப்பும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.

வாத்தியர் அப்படி ஒரு முறைச் சொல்ல நண்பர்கள் அப்படியே பிடித்துக் கொண்டார்கள்.

Image Courtesy

வில் யூ மேரி மீ :

வில் யூ மேரி மீ :

ஒரு கட்டத்தில் அந்த பிரம்மிப்பு அவள் மீதான காதலாக உருவெடுத்தது. ஒரு வித அதீத அன்பு என்று சொல்லலாம். நிறைய பேச ஆரம்பித்தோம். அந்த ரிகர்சல் நடந்த பத்து நாட்களும் என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாதது.

என் கைப்பிடித்து காதலைச் சொன்னது, தோல்தட்டி ஆறுதல் கூறுவது கடைசியில் மோதிரம் மாற்றிக் கொள்வது எல்லாமே என்னை மன ரீதியாக அவள் தான் உன் காதலி என்று நம்ப வைத்தது.

Image Courtesy

 ஏண்டா வெக்கப்படற :

ஏண்டா வெக்கப்படற :

அவள் மீது காதல் வந்ததும். அவளை நேரடியாக பார்க்க முடியவில்லை. அவள் அருகில் வந்தாலே நான் திரும்பிக் கொள்வதும்,வெளவெளத்துப் போவதும், டயலாக் மறப்பதும். கடைசி மோதிரம் மாற்றிக் கொள்ளும் சீன் வரும் போது

இப்டி மோதிரம் மாத்தினா நிஜமாலே கல்யாணம்னு தான அர்த்தம் என்று யோசிப்பதுமாய் கையில் மோதிரத்தை வைத்துக்கொண்டு தயங்கி தயங்கி நிற்பேன். டேய் சீக்கிரம் போட்றா என்று எனக்கு மட்டும் கேட்பது போல கிசுகிசுப்பாள்.

நானும் சிரித்துக் கொண்டே மோதிரம் அவளுக்கு அனுவிப்பேன்.

சில நேரங்களில் என்னடா இவ்ளோ வெக்கப்படற என்று கேட்டு என்னை சங்கடத்தில் ஆழ்த்துவார்கள்

Image Courtesy

 பெசானியோவாகிய நான் :

பெசானியோவாகிய நான் :

ஆண்டுவிழா மேடையில் அரங்கேற்றினோம். நிறையப் பாராட்டுக்கள்... இம்முறை அவளுக்கும் எனக்கும் சேர்ந்தே கிடைத்தது. பெசானியோவையும் போர்சியாவையும் கண் முன் நிறுத்திவிட்டீர்கள் என்று சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ஃபாதர் எங்களை தனியாக அழைத்துப் பாராட்டினார்.

அதன் பிறகு உன்னால் தான் எனக்கு பாராட்டு என்று அவளும் இல்லையில்லை உன்னால் தான் என்று நானும் மாறி மாறி சொல்லிக் கொண்டோம்.

Image Courtesy

 பள்ளிக் காலங்கள் :

பள்ளிக் காலங்கள் :

அவளுக்கும் என் மீது அபிப்ராயம் இருந்ததா என்றெல்லாம் தெரியாது... பார்ப்பாள்,சிரிப்பாள் நான் கேட்கும் உதவிகளை மறுக்காமல் செய்வாள். பள்ளிக்காலம் அப்படியே உருண்டோடியது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து சந்தித்த கடைசி நாள். இனி இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாது என்று நினைத்தபோது என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்திருந்தது.

போய்ட்டு வரேன் :

போய்ட்டு வரேன் :

பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டி பயங்கரமாக கொண்டாடித் தீர்த்தோம் அந்த கடைசி நாளை. கடைசியாக பிரியும் தருணம் வரும் போது எல்லார் மனதிலும் ஒரு கணத்த மவுனம் பரவிக்கிடந்ததை யாராலும் மறக்க முடியாது.

எல்லா ஆசிரியர்கள் வந்து கடைசியாக ஒரு உறை நிகழ்த்தினார்கள். வகுப்பறையே ஒரு எமோஷனாலன தருணத்தில் மிதந்து கொண்டிருந்தது.

எல்லாரும் ஒவ்வொருவராக கிளம்பினார்கள்.

 நானும் அவளும் :

நானும் அவளும் :

சரி நான் கிளம்பவா?

போறியா... உடம்ப பாத்துக்கோ... போன் பண்ணு ரிசல்ட் வந்ததும் எந்த காலேஜ் டிசைட் பண்ணிருக்கன்னு சொல்லு என்று வரிசையாக திக்கித்திணறி அடுக்கினேன்.

எப்போதும் டச்சில் இருப்பேன் என்று உறுதிகூறினாள்.ரிசல்ட் நாளிலும் சென்னையில் இருக்கும் ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கப்போவதாகவும் இரண்டு முறை போன் செய்தவள் அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை மறைந்து போனாள் என் நினைவுகளிலிருந்து.

எப்போது பள்ளிக் காலங்களை நினைக்கும் போது அவ்வப்போது அவள் முகமும் அந்த ரிகர்சல் நடந்த பத்து நாட்களும் நினைவுக்கு வரும் அவ்வளவு தான்.

மீண்டும் போர்சியா :

மீண்டும் போர்சியா :

தற்போது கல்லூரி முடித்து பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை கடந்தாண்டு துவங்கி நிறைய வரன்களைப் பார்த்து ஒவ்வொரு போட்டாவாக வாட்சப்பில் அனுப்புவதும் பின்னர் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களே நிறுத்துவதும் என்று இருந்தார்கள்.

அன்றைக்கு வாட்சப்பில் வந்த முகம் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது, பெயரைக் கேட்டு முகநூலில் தேடிப்பார்த்தேன். என் பள்ளி நண்பர்கள் சிலர் மியூச்சுவல் லிஸ்டில் இருந்தார்கள்.

ஆம்.... என் போர்சியா தான்.

யுவர் லவ் பெசானியோ :

யுவர் லவ் பெசானியோ :

இரு வீட்டினருக்கும் பிடித்துப் போக பெண் பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றோம். அவளால் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அங்கே தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, பின்னால் தோட்டத்திற்கு சென்றோம்.

என்னை ஒன்றுமே புரியாதது போல பார்த்தால். பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன். பிரித்துப் படித்தாள்.

My Dear Portia,Its Perfect time to get Married

Your Love,

Bassanio.

என்று எழுதியிருந்தது.

Image Courtesy

யெஸ் மை கிங் :

யெஸ் மை கிங் :

படித்தவள் அதிர்ந்தபடி நிமிர்ந்து பார்க்க. பள்ளிக்காலத்தில் நடத்திய மெர்ச்சண்ட் ஆஃப் லைஃப் நாடகத்தின் டயலாக் பேப்பர் பழுப்பேறி, நைந்திருந்ததை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

உன் நியாபகமா என்கிட்ட இது மட்டும் தான் இருக்கு என்று சொல்ல... அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை... ஃபர்ஸ்ட் பேரக் கேட்டதுமே எனக்கு உன் நியாபகம் தான் வந்துச்சு, இந்த ஸ்கூல் டிராமா உன் கூட பழகினது தான் எல்லாத்தையும் நினச்சு சிரிச்சேன். கல்யாணத்துக்கு கூப்டணும்னு நினச்சேன் என்று சிரித்தாள்.

ஹோ... எப்போ கல்யாணத்துக்கு கூப்டப்போற?

இப்பவே என்று சொல்லி கன்னத்தில் முத்தமொன்றை வைத்தாள். என் முதல் காதலியே மனைவியாக வாய்க்கப்பெற்றேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real love story of Shakespeare play

Real love story of Shakespeare play
Story first published: Monday, December 11, 2017, 16:20 [IST]
Subscribe Newsletter