அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!! 'ஆலமரம்' மீது தீராக் காதலில் நடந்த ஊடல்.....

Posted By:
Subscribe to Boldsky

காதலிக்கிறவங்க வாழ் நாள் முழுக்க சந்தோஷமா இருக்க முடியுமா? சினிமால வேணும்னா நடக்கலாம் ஆனா நிஜவாழ்க்கையில அது சாத்தியமே இல்லன்னு சொல்றவங்க.... மறுக்க

முடியுமா நம்புறவங்க எல்லாம் இந்தக் கதையை படிங்க.

ஸ்டாலின்.புரட்சிக்கான பெயர், அதே போலத்தன அவனது சிந்தனைகளும், செயல்களும்...அவனுடையே வேகத்துக்கு இன்னும் இந்த உலகம் சுத்த ஆரம்பிக்கலன்னு தான் சொல்லணும்.வாழ்க்கையில ஒரு மனுஷனுக்கு எத்தன காதல் வரும்னு நீங்க நினைக்கிறீங்க...

1....2 அட 3. எப்டியும் ஸ்கூல் லைஃப், காலேஜ் லைஃப்,வொர்க்ன்னு கணக்கு வச்சா எல்லா இடத்துலயும் ஒரு காதல்னு சொன்னாக்கூட மூணு தான் வருது. நம்ம வேணா எக்ஸ்ட்ராவா

ஒண்ணு சேத்துக்கலாம் 4.

Real Life Love Story And taught a Lesson In Love Life

ஆனா இந்த கதையில வர்ற ஸ்டாலின் வாழ்க்கையில இதுவரைக்கும் எத்தனை லவ்

தெரியுமா?

8

ஸ்டாலினின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகநூலில்....

முகநூலில்....

முகநூல் அதிகமா பயன்படுத்துற வழக்கம் இருக்கு எனக்கு, திடீர்னு ஒரு நாள் ஃப்ரண்ட்ஸ் யூ மே நோ...ல இந்த பேரு ஃப்ரோஃபைல் படமா யாரையோ நடுரோட்டுல வெட்டி போட்டிருக்காங்க ரத்தச் சகதியோட கிடக்குற அந்த மனுஷனோட போட்டோ.

பாத்ததும் கொஞ்சம் பயங்கரமா தெரிஞ்சாலும்,எதோ ஒரு குறுகுறுப்புல ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தாச்சு..

பாத்ததும் லவ்? ...

பாத்ததும் லவ்? ...

பாத்ததும் எல்லாம் எங்களுக்குள்ள காதல் எல்லாம் இல்ல.... பிடிக்கும் நிறைய பேசுவோம். விவாதிக்கலாம்... எதப்பத்தி வேணும்னாலும் கேக்கலாம் அதப்பத்தி பேச ஸ்டாலின் கிட்ட

விஷயமிருக்கும்.

அந்த விவாதம் ஒரு நாள் காதல்ல வந்து நிக்க, சில நாட்கள் அமைதி.அப்பறம் கிட்டத்தட்ட ஒரு வருஷம் சுத்தல்ல விட்டு காதல ஏத்துகிட்டா அப்பறம் தான் புது அத்தியாயம் ஆரம்பம்.

மாமா :

மாமா :

'இப்போதிருந்து ஸ்டாலின் பெயர் மரியாதையாகவும், செல்லமாகவும் மாமா என்று குறிப்பிடப்படும்'.

எல்லா நேரங்களிலும் மாமா மட்டுமே நினைவில் ஆட்கொண்டிருந்தான்,கதை சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அதைவிட அவனோடு ஆட்டோவில் இறுக்க கை கோர்த்து செல்வதில் எனக்கு ரொம்ப இஷ்டம்.

கை பிடிச்சுக்கோ :

கை பிடிச்சுக்கோ :

மாமா கை பிடிச்சுக்கோ என்ற அவனின் வார்த்தைகளுக்காகவே கொஞ்ச நேரம் தள்ளி உட்கார்ந்து கொள்வேன்.

எந்தச் சூழலில், எந்த நிமிடத்தில் அவன் மீது அத்தனை ப்ரியங்கள் அரும்பியது என்று நினைவில் இல்லை. அவனின் பெயரைச் சொன்னாலே சிரிக்கும் அளவுக்கு மாமா மீதான

ப்ரியம் வளர்ந்திருந்தது.

சண்டைகள் :

சண்டைகள் :

கடும் கோபத்துடன் ஆரம்பிக்கும் எங்கள் சண்டையில் முடிப்பது என்னவோ முத்தங்களாகத்தான் இருக்கும்.நீ எனக்கு வேணாம்..

மாமாக்கு நீ தான் வேணும்.

இது போதாதா? ஒருவனுக்காக நம் வாழ்க்கையை அர்பணிக்கலாம் என்று நினைப்பதற்கு.

வழக்கமான க்ளீஷே லவ் சீன்கள் எல்லாம் இந்தக் காதலில் எதுவும் இருக்கவில்லை.

 சரியான ஃப்ராடு :

சரியான ஃப்ராடு :

நட்பாக பேசிக் கொண்டிருந்த சமயம், வாட்சப்பில் வரிசையாக புகைப்படங்கள் வந்து விழுந்தது...

யார் இது?

என் லவ்வர்...

பக்கத்துல...

அவளோட லவ்வர்.

கையில அவங்க பாப்பா.

சிரிப்பை அடக்க முடியவில்லை. அடுத்த போட்டோ அதிலும் இதே கொடுமை ஆனால்

கொஞ்சம் மாடுலேஷன் மாற்றிச் சொன்னான்.

ஃப்ராடு... கொஞ்சமாவது நம்புற மாதிரி பொய் சொல்லு என்று அந்த டாப்பிக் அன்றுடன்

முடிந்து,மீண்டும் காதலிக்க ஆரம்பித்து ஆறேழு மாதங்கள் கழித்து என்னால்

தோண்டியெடுக்கப்பட்டது.

ரசிக்க மட்டும் :

ரசிக்க மட்டும் :

நிறைய வேலைகள் எல்லாம் எதுவும் வைக்கவில்லை. எனக்குத் தெரியாது என்று நினைத்து அவன் செய்திடும் சில கள்ளத்தனங்கள் எல்லாம் எனக்கு தெரிந்து விட்டது என்று காட்டிக்கொள்ளாமல் அவன் சொல்லும் பொய்களையும், சில சமாளிப்புகளையும் ரசித்திருக்கிறேன்.

ரசிக்க மட்டுமா? இழுத்துப் பிடித்து சண்டை பிடித்தால் ஒற்றை வார்த்தையில்

எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கிவிடுவான்.

எனக்கான ஆயுதம் :

எனக்கான ஆயுதம் :

அந்தக் கதைகளை எல்லாம் எனக்கான ஆயுதங்களாக எடுத்துக் கொள்ள முயற்சித்து, ஒவ்வொரு காதலையும் கேட்டால்.... சிரிப்பும், கும்மாளமுமாக நினைவுகள் நகரும். காதலில் இப்படியான பக்கங்கள் எல்லாம் இருக்கிறதா? என்று நாம் சற்றும் யோசிக்காத பக்கங்களுக்கு

எல்லாம் போகிற போக்கில் கடந்து சென்று வந்திருப்பான்.

சண்டையில கிழியாத சட்டை ஏது? :

சண்டையில கிழியாத சட்டை ஏது? :

காதலில் சண்டையில்லாமலா..... எங்களுக்கும் சண்டை வரும். நான் தான் அதன் ஆரம்பப் புள்ளி.... ரிப்ளை அனுப்பாததற்கும், போன் அட்டெண்ட் செய்யாததற்கும் தான் பெரும்பாலும் சண்டை நடக்கும்.

நாள் முழுவது போன் செய்து கடுங்கோபத்தில்.... இனி நம்ம ப்ரேக் அப் தான் என்ற ரேஞ்சில் பக்கம் பக்கம் டைப் செய்து அனுப்பினால்... லூசு போய்த்தூங்கு.... காலைல பேசலாம் என்பான்

அவ்ளோ தானா? என்று சப்பென்று முடிய, இச்சண்டை குறித்து பேசும் காலை தான் தள்ளிக் கொண்டே போகும்.நடுவில் அந்த சண்டையையே மறந்து புதிய சண்டைக்காக தயாராகிக் கொண்டிருப்போம் என்பது தனிக்கதை.

காதலில் பிரிவு :

காதலில் பிரிவு :

காதலில் சின்ன சின்ன பிரிவுகள் ஏற்படும். நீ எனக்கு வேணாம்... உனக்கு என் மேல லவ் இல்லவே இல்ல ஹேட் யூ... என்ற வசனங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பேன்.

அந்த வார்த்தைகள் எவ்வளவு காயமூட்டும் என்பதை தெரிந்து கொள்ளமல் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் தான் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தது.

என்ன பாடம் :

என்ன பாடம் :

காதலிப்பவர்களின் பெரும் சண்டையாக வந்து நிற்பது எனக்கான இடத்தை அங்கீகரிக்கவில்லை, எனக்காக நேரத்தை ஒதுக்கவில்லை என்பதாகத்தான் இருக்கும்.

சண்டை அங்கேயிருக்க வெவ்வேறு பரிமானங்களில் அந்த சண்டை வளர்ந்து நிற்கும்.அவனின் வார்த்தைகளிலிருந்து கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடம் இது தான்... காதலில்

இருப்பவர்கள் நேரத்தை செலவழித்தால் தான் அது காதல் என்று அர்த்தம்மல்ல.

எது காதல் :

எது காதல் :

உனக்கான தனியிடம் எப்போதும் என்னிடம் இருக்கும். அதை காதல் என்ற போர்வையில் ஒவ்வொரு நாளும் உன் மீது திணித்துக் கொண்டேயிருக்கமாட்டேன்.

இந்த திணிப்பு ஆரம்பத்தில் சுவாரஸ்யமானதாக தெரிந்தாலும் சில நாட்களில் சலிப்பு தட்டி பெரும் அவஸ்த்தைக்குள்ளானதாக்கி விடும்.

வாழ்க்கை ஓட்டத்தின் இடைஞ்சல் மிக்க பகுதியாக இந்த காதல் உருவாகிடும்.எப்படியாவது இந்த நெருக்கடியை விட்டு ஓடிட வேண்டும் என்று தோன்றிடும்.சொன்னதை மெல்ல யோசித்தேன். காதலில் இந்த சுதந்திரம் யாருக்கு வாய்க்கும்.

புரிதல் :

புரிதல் :

காதல் என்பது அன்பு மட்டுமல்ல..... புரிதலும் கூட. எனக்கான வாழ்க்கையில் காதல் ஒரு பகுதி அதுவே வாழ்க்கையல்ல.... இந்த காதல் ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டலாம்.

புதிய உறவு கிடைக்கலாம்.அது உனக்கான இடம்,உனக்கான காதல்,உனக்கான உணர்வுகள்..... இருக்கிற ஒரு வாழ்க்கையில் அதை வாழ்ந்து அனுபவித்திடு.

மாமாவுக்கு முத்தங்கள் :

மாமாவுக்கு முத்தங்கள் :

காதலென்ற அத்தியாயத்தில் இது போன்ற சுதந்திரத்தைப் பற்றி இதுவரை கேட்காத சூழலில் திடிரென்று அதை அனுபவித்துப் பார் என்று கைகளில் கொடுத்தால் திக்குமுக்காடித்தானே போவோம்.

அவ்வப்போது இது எனக்கான சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்வதில் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது.

காதல் கதைகள் :

காதல் கதைகள் :

எப்டி டா... லவ் பண்றீங்க விட்டுப் போறாங்க அத நினச்சு ஃபீல் பண்ண மாட்டியா? ஒரு லவ் விட்டுப் போனாலே தண்ணியடிச்சுட்டு தாடிய வளத்துட்டு சுத்துவாங்க என்று நான் கேட்க....

நான் ஆலமரம்டீ.... என்றான்.முதலில் புரியவில்லை,பின்னர் புரிந்து வியந்தேன்,சிரித்தேன்..

நினைவுகள் :

நினைவுகள் :

காதலென்றாலே எப்போதும் பசுமையான நினைவுகள் மட்டுமே காதல் ரசம் சொட்ட அவனுடான ஊடல்கள் மட்டும் தான் நினைவில் வர வேண்டும் என்று நினைத்தால் அது

போன்றதொரு முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.

அன்புடன் வாழ்ந்த நாட்கள், சண்டை பிடித்து பிரிந்து அழுது திர்த்த நாட்கள் எல்லாமே நினைவுக்கு வரும்.

எல்லாமே சேர்ந்தது தானே காதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Love Story And taught a Lesson In Love Life

Real Life Love Story And taught a Lesson In Love Life
Story first published: Wednesday, December 27, 2017, 14:30 [IST]