For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்மணியின் அன்புக் காதலன்! எமோஷனல் காதல் பக்கங்கள்

நடிகர் கமல் ஹாசன் நடித்த திரைப்படத்தில் இடம் பெற்ற ரசிக்கும் காதல் கதைகள்.

|

காதல் மன்னன் கமல் ஹாசன் ஐந்து வயது குழந்தையாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமாகி திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இதோ இப்போது அரசியலில் களமிறங்க காத்திருக்கிறார். அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் புகைந்து கொண்டேயிருந்தாலும் கமல் பலருக்கும் ஆல் டைம் ஃபேவரைட் தான்.

அவர் நடித்திருக்கும் படங்கள் மூலமாக எண்ணற்ற காதல் பாடங்களை சொல்லியிருக்கிறார். மாணவனாக, காதலனாக, கணவனாக , தந்தையாக, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கமல் நடித்த படங்களின் காதல் அத்தியாங்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குணா :

குணா :

90 களின் ஆரம்பத்தில் இந்தப் படம் வெளியானது. மன நலம் சரியில்லாத குணா தன் நாயகியை சந்திக்கிறார். பார்த்தவுடனேயே பிரம்மிப்பு. அவள் பெயர் அபிராமி, அபிராமி என்று குணாவே முடிவு செய்து கொள்கிறான்.

ஏனென்றால் அவன் சிறு வயதில் படித்த அபிராமி அந்தாதி . அந்த அன்பு தீவிரமாகி ஒரு கட்டத்தில் நாயகியை கடத்தி ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுப்பகுதியில் வைக்கிறார். அதன் பின்னால் அவர்களை கண்டுபிடிப்பது படத்தின் மீதிக் கதை.

அவள் எனக்கானவள் என்று தீவிரமாக நம்பியதால் தான் அந்தப் படத்தில் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல' என்ற வசனத்தை வைத்திருப்பார்.

அன்பே சிவம் :

அன்பே சிவம் :

தொழிலார்கள் நலனில் அக்கறை கொண்டு வீதியில் இறங்கி போராடும் சிவத்திற்கு முதலாளி மகள் மீது அன்பு. வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது விபத்தில் சிக்கி உருக்குலைந்து விடுகிறார். காதலும் பிரிகிறது. நாயகியான பால சரஸ்வதியிடம் சிவம் இறந்துவிட்டார் என்றும். சிவமிடம் பாலாவுக்கு திருமணமாகிவிட்டது என்றும் பொய் சொல்லி பிரித்து விடுகிறார்கள்.

இறுதியாக, பாலாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை தன்னிடம் பொய் சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் வருத்தப்படும் கமல் அழுது புலம்பவில்லை, திட்டி தீர்க்கவில்லை, யாரையும் குறை கூறவில்லை மாறாக அங்கே தன் கொள்கையைத் தான் உயர்த்திப் பிடிக்கிறார்.

விருமாண்டி :

விருமாண்டி :

தென்கொரியாவில் நடைப்பெற்ற உலகத் திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படமாக இந்த படம் தேர்வானது. ஒரே கதையை இருவேறு கோணங்களில் சொல்லி, வில்லனை ஹீரோவாகவும், ஹீரோவை வில்லனாகவும் காட்டி அசத்தியிருப்பார்கள்.

தூக்கு தண்டனை குறித்து தான் மையப்புள்ளி. இதற்கு நடுவே ஓடும் விருமாண்டிக்கும் அன்னலட்சுமிக்கும் இடையிலான காதல்.

இவர்களது கெமிஸ்ட்ரி அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். காளைமாட்டை பிடித்து வரும் அசட்டுப் பெண் மீது கமலுக்கு காதல்.

தான் விருமாண்டியை திருமணம் செய்து கொள்வது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதால் திருட்டுத்தனமாக விருமாண்டியை திருமணம் செய்து கொண்டு மறைமுக வாழ்க்கையை வாழ நினைப்பார் ஆனால் புதிய வாழ்க்கை துவங்கிய மறு நாளே தாக்கப்படுவார்.

தன்னை வலுக்கட்டாயமாக நிர்பந்தப்படுத்தியதில் ஆத்திரமடைந்த அன்னலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாள்.

காதல் வாழும் :

காதல் வாழும் :

தன் மனதில் விருமாண்டியைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதில் அன்னலட்சுமி அவ்வளவு உறுதியாக இருப்பாள். வேறு ஒருவன் தன்னை நெருங்க கூட விடாமல் வேறு வழியில்லை எனும் போது தான் ஆசையாய் வளர்த்த காளை மாட்டின் உதவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாள்.

இதே போலத்தான் விருமாண்டியும். மனைவியையே கொன்று விட்டான். பெண்ணை கடத்தி கற்பழித்து விட்டான். அதனால் அந்தப் பெண் அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொண்டால் என்று சொல்லும் போதெல்லாம் தன் தரப்பு நியாயத்தை விளக்கவில்லை. மேலும் மேலும் அதைப் பற்றி பேசி அவளை அவமானப்படுத்த விரும்பாமல் தவிர்த்திருப்பார். எவ்வளவு பெருந்தன்மை! காதலில் எவ்வளவு உண்மையிருந்தால் இந்த உண்மை மௌனித்து கிடந்திருக்கும்.

இந்தியன் :

இந்தியன் :

காதல் அழகைப் பார்த்து அந்தஸ்த்தைப் பார்து எல்லாம் வராது என்பதற்கு சான்றாக இப்படத்தில் வரும் காட்சியை சொல்லலாம். முதுமையான கதாப்பத்திரத்தில் நடித்த கமல் மற்றும் சுகன்யாவின் காதல் அத்தியாயம் அது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த போது, அவர்களை தாக்கிய வெள்ளையர்கள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் ஆடைகளை எல்லாம் அபகரித்து விடுகிறார்கள். அவமானம் தாங்காத எல்லா பெண்களுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஒருவரைத் தவிர.

திருமண உறுதி :

திருமண உறுதி :

அவ்வழியாக சென்ற கமலுக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பது புரிய, அருகில் செல்கிறார். அப்போது அங்கேயிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து ஒரு குரல் வந்து நடந்த சம்பவத்தை விவரிக்கிறது.

இத்தகவலை யாருக்காவது தெரியபடுத்த வேண்டும் என்பதற்காகத்தன நான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். இவ்வளவு அவமானத்தை சந்தித்த பிறகு என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இனி நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று சொல்ல,

நீ எந்த சாதி என்று தெரியாது, கருப்பா? சிவப்பா? நெட்டையா? குட்டையா ? எதுவும் தெரியாது. உன்னை நான் திருமண செய்து கொள்கிறேன் என்பார்.

தன் ஆடையை அவிழ்த்துக் கொடுத்து சுகன்யாவை அழைத்து வருவார்.

பாபநாசம் :

பாபநாசம் :

ஒரு அப்பாவாக கமல் வாழ்ந்திருப்பார். இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாக, பட்ஜெட்டில் வாழும் குடும்பஸ்தன், மனைவியிடம் சில்மிஷம் செய்திடும் ஜாலி கணவராக பாபநாசம் கமல் அவ்வளவு தத்ரூபம்.

மகள் ஒரு இக்கட்டில் சிக்கிவிட்டார் என்று தெரிந்ததும். அதிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற கமல் போடும் நாடகமும் அதனை செயல்படுத்திய விதமும் மெய்சிலிருந்து ரசிக்ககூடியவை.

மூன்றாம் பிறை :

மூன்றாம் பிறை :

இரண்டு தேசிய விருதுகள் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்த திரைப்படம் மூன்றாம் பிறை. மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஸ்ரீ தேவி. விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார்.

அவரை சந்திக்கும் கமல் காப்பாற்றி அவரை தனது வீட்டிற்கு வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

அவளை பார்த்துக் கொள்ள ஆரம்பித்து அந்த பாசம் அப்படியே காதலாகிறது. ஸ்ரீ தேவி செய்திடும் சேட்டைகளும் அதனை கமல் சமாளிக்கும் விதமும் அட்டகாசம். இறுதிக்காட்சியில் புத்தி தெளிந்து இதுவரை காலமும் தன்னை பார்த்துக் கொண்ட கமலையே மறந்து விடுவார் ஸ்ரீ தேவி.

தன்னை நினைவுப்படுத்தும் விதமாக, ஶ்ரீதேவி செய்த சேஷ்டைகளை, ‘விஜி... சீனு விஜி' எனப் பரிதவிப்புடன் கமல் நடித்துக்காட்ட, ‘பாவம் பைத்தியம் போல' என்று சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கொடுத்து கமலுக்கு அதிர்ச்சி அளிப்பார் ஶ்ரீதேவி.

நடிப்பு :

நடிப்பு :

ரயிலுக்குள் அமர்ந்திருக்கும் ஶ்ரீதேவியின் பழைய நினைவுகளைத் திரும்பவைப்பதற்காக குரங்கு லீலை, பானை விளையாட்டு என நடித்துக்காட்டியபடியே சென்று இறுதியில், இரும்புக் கம்பியில் மோதி கீழே விழுவார். தன்னைக் கடந்து செல்லும் ரயிலையே இயலாமையோடு பார்த்துக்கொண்டு நிற்பார் கமல்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே வாழ்ந்த ஶ்ரீதேவிக்குக்கூட தேசிய விருது கிடைக்கவில்லை. கடைசி ஏழு நிமிடக் காட்சி மொத்தத்தையும் ஒரு அக்மார்க் கலைஞனாக திருடிச்சென்ற கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kamal love stories in movies

Kamal love stories in movies
Story first published: Tuesday, November 7, 2017, 18:27 [IST]
Desktop Bottom Promotion