உங்கள் துணையால் ப்ளாக்மெயில் செய்யப்படுவரா நீங்கள்?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

மூளைச்சலவை (Brainwashing) என்பது உறவுகளுக்குள் நடக்கும் ஒருவிதமான உணர்ச்சி துஷ்பிரயோகம் ஆகும். சிலரது துணைகள் இது போன்ற தவறான தந்திரங்களில் ஈடுபடுவது உண்டு.

relationship

இது ஒரு நபரை கட்டுப்படுத்திக்கொள்ள அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வழி. இது பொதுவாக ஒருவரது எண்ணங்களை கட்டுப்படுத்த அல்லது மாற்ற உதவும் ஒரு தந்திரம்.

என்ன வகையான மக்கள் பொறிக்குள் விழுவார்கள்? பொதுவாக, நீங்கள் ஒரு பரிபூரண அல்லது திறமையுள்ளவராக அல்லது குறிக்கோள் அல்லது சுய தியாக மனப்பான்மை உடையவராக இருந்தால், மூளை சலவை என்ற பொறியில் எளிதில் விழலாம்.

உங்கள் துணை மூளைச்சலவைக்காக பயன்படுத்தும் உத்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் குண்டுவீச்சு

காதல் குண்டுவீச்சு

காதல் குண்டுகளை உங்கள் மீது எரியும் போது இனிமையாக தான் இருக்கும், ஆனால் இது ஒரு மூளைச்சலவைக்கான உத்தி.

உங்கள் காதலன் / காதலி அளவுக்கு அதிகமாக பாச மழை பொழிவது, மிக அதிகமாக உங்களை வியக்க வைக்கும் காரியங்களில் ஈடுபடுவது ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், பரிசு மழையில் உங்களை அடிக்கடி நனையச்செய்வது போன்றவை நீங்கள் அவரை விட்டு எங்கேயும் செல்லாமல் உறவிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

 சீர்கேடு

சீர்கேடு

உங்கள் துணை உங்களை குறைத்து, உங்கள் சுய மதிப்பைக் கொல்ல முயன்றால் அதுவும் ஒரு மூளைச்சலவை செய்யும் ஒரு தந்திரமாகும்.

சர்வாதிகார கருத்துக்கள், அதிகமாக குறைகூறல், ஏமாற்றுவது, கத்தி இழிவுபடுத்துதல், அச்சுறுத்தல், தனது பேச்சுக்கள் மூலம் உங்களை குற்றவாளியாக உணர வைத்தல் போன்றவை உங்களை கட்டுப்படுத்தி வைக்கும் தந்திரங்கள் ஆகும்.

குறைவாக உணர வைத்தல்

குறைவாக உணர வைத்தல்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது, உங்களது குறைகளை மிகைப்படுத்தி காட்டுவது ஆகியவை உங்கள் மனதை கட்டுப்படுத்தி உங்களை குறைவாக உணர வைக்க அவர் செய்யும் ஒரு முயற்சியாகும்.

பிளாக்மெயில்

பிளாக்மெயில்

அடிக்கடி உறவை முறித்துக்கொள்ளலாம் என்று கூறி உங்களை பிளாக்மெயில் செய்வது. நீங்கள் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டும் என்றால் இவ்வாறு கூறி செய்ய வைப்பது ஆகியவை உங்களை பயப்படுத்தி வைக்க அவர் எடுக்கும் ஒரு உக்தியாக்கும்.

கட்டுப்படுத்துதல்

கட்டுப்படுத்துதல்

உங்கள் துணை ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஏதேனும் கடுமையாக பேசுவது, அல்லது உங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற உரையாடல்கள் போன்றவை மூளை சலவை ஆகும்.

கவலை

கவலை

தேவை இல்லாமல் கவலையாக இருப்பது போல காட்டிக்கொள்ளுதல், கொடுமைப்படுத்துதல், பயமுறுத்தி வைத்திருப்பது போன்றவை முளைச்சலவை செய்யும் யுக்திகள் ஆகும்.

அதிகமான எதிர்பார்ப்பு

அதிகமான எதிர்பார்ப்பு

தகுதிக்கு மீறிய வாழ்க்கையை எதிர்பார்த்து, உங்களிடம் இருந்து அது கிடைக்கவில்லை என்றால், உங்களை குப்பையை போல தூக்கி வீசிவிடுவது போன்றவை உங்களை குற்றவாளியாக உணர வைக்க செய்யப்படும் மூளைசலவை ஆகும்.

தனிமை

தனிமை

மற்றவர்களிடம் இருந்து உங்களை தனிமைப்படுத்துவது, உங்களுக்கு தேவையான நேரங்களில் உதவிக்கு யாரும் இல்லாமல் போகும் போது நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டத்தை உணருவீர்கள்.

சுரண்டல்

சுரண்டல்

மனைவிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல கணவர்கள் பண ரீதியாக, உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களது மனைவிகளால் சுரண்டப்படுகிறார்கள். விலை உயர்ந்த விடுதிகளில் உணவு போன்ற ஆடம்பர செலவுகள் மூளைச்சலவை செய்யப்பட்ட கணவர்களுக்கு நேருகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

உணர்ச்சி வெளிப்பாடுகள், வாதங்கள், நிறைய நாடகங்கள் , திடீர் மனநிலை மாற்றங்கள், வன்முறை மற்றும் நிலையான கவலை ஆகியவை நீங்கள் உறவுவை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும் ஒரு நபர் என காண்பிக்கும் சில அறிகுறிகள் ஆகும்.

பிரைன் வாஸ் செய்பவர் எவ்வாறு மறைக்கிறார்

பிரைன் வாஸ் செய்பவர் எவ்வாறு மறைக்கிறார்

உங்களது அமைதியையும், எல்லைகளையும் பரிசோதித்து பார்த்த பிறகு உங்கள் மீது காதல் மழை பொழிவார்கள். நீங்கள் இந்த உறவு வேண்டாம் என்று நினைத்து முறித்துக்கொள்ள நினைக்கும் போது, பசமழை பொழிந்து உங்களை உறவுக்குள் இழுத்து கொண்டுவந்துவிடுவார்கள்.

இத்தகைய உறவு ஆரோக்கியமற்றதாகும். இது போன்ற உறவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உளவியல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Your Partner Brainwashing You

Here are some signs you are being brainwashed by your partner
Please Wait while comments are loading...
Subscribe Newsletter