காதலியை மகிழ்விக்க தவறியதால் காதலன் சந்தித்த ‘வினை’!

Posted By:
Subscribe to Boldsky

எத வேணாலும் கண்டுபிடிச்சிடலாம் ஆனா பொண்ணுங்க மனச மட்டும் கண்டுபிடிக்கவே முடியலன்னு புலம்பற ஆட்களா நீங்க ? அப்போ உங்களுக்குத் தான் இது , காதல் வாழ்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிக்கலே இது தான். தன் காதலிக்கு என்ன வேண்டும், அவள் என்ன நினைக்கிறாள் என்று நம் ரோமியோக்களுக்கு தெரிவதில்லை என்ன சொன்னாலும் குத்தம் கண்டுபிடிக்கிறா என்று அவனும் என்னைய ஒரு தடவையாவது பாராட்டியிருக்கிறியா என்று அவளும் கேட்டுத் தான் சண்டையை ஆரம்பிப்பார்கள்.

எதைப் பாராட்டுவது? என்ன சொல்லி பாராட்டுவது? பாராட்டுவது என்ன அவ்வளவு முக்கியமானதா? கேள்விகள் எல்லாம் உங்கள் மனதில் எழுந்தால் நீங்கள் இக்கட்டுரையை படிக்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆம், நாம் பாராட்ட வேண்டும். அதுவும் காதல் என்று வந்துவிட்டால் இது ஒரு படி மேலேயே இருக்கலாம். உங்கள் மீதான கவனம் குவிக்கச் செய்திடும். நீங்கள் சொல்லும் சின்ன சின்ன பாராட்டுகள் கூட மிகுந்த கவனம் பெரும்.நீங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக மாறிடுவர்.

Important Things Girls Like to Hear From Men

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காகத் தானே ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தேடிக்கொண்டிருக்கும், ஓர் அன்பு உங்களிடமிருந்து கிடைத்ததால் தான் உங்களை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான பாராட்டும் உங்களிடமிருந்தே கிடைத்துவிட்டால் இரட்டிப்பு நன்மை தானே!

இதனால் உங்கள் காதலிக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறுகள் மறக்கப்படும் :

தவறுகள் மறக்கப்படும் :

‘போன மாசம் லேட்ட வந்ததையெல்லாம் மனசுல வச்சிட்டு திட்றா மச்சி'.... இப்படி தன் நண்பர்களிடத்தில் புலம்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பெண்களுக்கு இயல்பாகவே கவனிக்கும் ஆற்றல் அதிகம்.

தன் காதலனுக்காக காத்திருக்கும் நேரத்தை அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அந்நேரத்தில் நீங்கள் தாமதமாக வந்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதைவிட அதற்கான பதிலும், காரணும் அவர்களை இன்னும் சமாதானப்படுத்தாமல் இருந்திருக்கும். இப்படியான சின்ன சின்னப் பொய்கள் உங்கள் காதலின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்துவிடக்கூடியது என்பதால் இதில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

 ஸ்பெஷல் :

ஸ்பெஷல் :

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய காதலி/காதலன் தான் பேரழகு மற்றும் ஸ்பெஷல். நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்பதை நீங்கள் உணர்ந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

யூ ஆர் மை கேர்ல் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்வதை விட அவர்களிடத்தில் சொல்லுங்கள்.அதை எப்படி வெளிப்படுத்த முடியும். சில நேரங்களில் நேரடியாக சொல்லலாம். எப்போதும் சொல்ல முடியுமா? அதற்காகத்தான் ‘பாராட்டு'. அடிக்கடி பாராட்டுங்கள்.

எதையெல்லாம் பாராட்டலாம் என்பதற்கு சில உதாரணங்கள்

லூசுப் பெண்ணே :

லூசுப் பெண்ணே :

சும்மாயிரு உனக்கு ஒண்ணும் தெரியாது, சொல்றத மட்டும் செய்... ஏன் தேவையில்லாம கேள்விக்கேக்குற போன்ற புராணங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் பாடாதீர்கள். அதைக்கேட்க இன்று யாருமே தயாராக இல்லை.

ஒரேயிடத்தில் மூடி , தட்டி தட்டி வைக்கப்படுவது அவர்களுக்கு பெரும் எரிச்சலை கொடுத்திடும். அவர்களுடைய பதில் உங்களுக்கு தேவையில்லை என்று நினைக்காதீர்கள். ஒரு ஆலோசனைக்காவது அவர்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. யோசனையை ஏற்க முடியாவிட்டாலும், இது நல்ல யோசனை தான் ஆனால் அதனை சாத்தியப்படுத்த முடியாது என்பதைச் சொல்லுங்கள். அந்த நல்ல யோசனைக்கு முன்னால் சில கொஞ்சல் வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

க்ரியேட்டிவிட்டி :

க்ரியேட்டிவிட்டி :

பெண்கள் மத்தியில் இந்த க்ரியேட்டிவிட்டி சென்ஸ் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அது அவர்களின் செயலில், அணிந்திருக்கும் உடையில்,ஆபரணங்களில், பேசும் பேச்சில், ஒரு விஷயத்தை அணுகும் விதத்தில் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

அதனை கவனித்து பாராட்டலாம் . இது அவர்களின் நாளையே உற்சாகமானதாக மாற்றிடும்.

தனிப்பட்ட குணம் :

தனிப்பட்ட குணம் :

தான் பிறரைப்போல அல்ல, உன்னிடம் தனித்திறமையாக இந்த விஷயம் ஒளிந்திருக்கிறது என்பதை யாராவது கண்டுபிடித்து சொன்னால் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதற்காக நீங்கள் அவர்களிடத்தில் பொய்களை அள்ளி வீச வேண்டும் என்றில்லை.

இது அவர்களுக்கே தெரிந்திருந்தாலும் உங்களின் பாராட்டுதலோடு கேட்க அதிகம் விரும்புவர்.

விவரிக்கும் போது கவனம் :

விவரிக்கும் போது கவனம் :

பெரும்பாலும் ஆண்கள் தவறு செய்வது இங்கே தான். பெண்களின் தனிப்பட்ட விஷயத்தை பாராட்டுகிறேன் என்று சொல்லி, அவர்களின் அழகினை தான் வர்ணித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களின் அழகினை வர்ணிப்பதை விட, நீங்கள் அதை எப்படி ரசித்தீர்கள், உங்களுக்கு எதனால் பிடித்துப் போனது என்று சொல்லிப்பாருங்கள்.

அவள் சொன்னால் மட்டும் :

அவள் சொன்னால் மட்டும் :

இந்த சண்டையை குறுஞ்செய்திகளில் பார்க்க முடியும். காலையில் குட்மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து இரவில் குட்நைட் சொல்கிற வரையில் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் யார் முதலில் ஆரம்பிப்பது என்பதில் சிக்கல் ஆரம்பிக்கும்.

தினமும் நானே தான் ஆரம்பிக்க வேண்டுமா? இன்றைக்கு அவளாக ஆரம்பிக்கிறாளா என்று பார்க்கலாம்? ஏன் அவள் ஆரம்பித்தால் என்ன? என்று வீம்படித்து சண்டை பிடித்துக் கொண்டிருக்காதீர்கள்.

காதலை கொடுக்கல் வாங்கல் முறையில் டீல் செய்ய நினைத்தால் அது உங்களை மொத்தமாக விழுங்கிடும்.

உங்களைப் பற்றி :

உங்களைப் பற்றி :

அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை விவரித்து விடுங்கள் . நீ என் வாழ்க்கையில் வருவதற்கு முன்னால் எப்படி உணர்ந்தேன் இப்போது எப்படி உணர்கிறேன் என்ற வித்யாசங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

உன்னால் என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஆரம்பித்திருக்கிறது என்பது அவர்களை வசீகரிக்கச் செய்திடும்.

எதிர்காலம் :

எதிர்காலம் :

உன்னுடனான எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கப்போகிறது என்பதை திட்டமிடுங்கள். அவர்கள் கனவுக்காகவும், லட்சியத்திற்காகவும் பாடுபட நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்பதை உணர்த்துங்கள் .

எதிர்கால வாழ்க்கை என்றதும். வீடு, குழந்தை, கார் என்ற விஷயத்தோடு நின்றுவிடாமல் கொஞ்சம் அன்பையும் சேமியுங்கள்.

நீ தான் வேண்டும் :

நீ தான் வேண்டும் :

காதலி உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை உணர்த்திடுங்கள். இது அவர்களை அதீத சந்தோசத்தை ஏற்படுத்தும். இதனை செய்யும் போது பெரும்பாலானோர் செய்கிற தவறுகளில் ஒன்று ‘ஒப்பீடு'. தயவு செய்து இதனை நீங்கள் செய்து விடாதீர்கள்.

யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர்களின் தனித்தன்மையை குலைக்க முயன்றால் அல்லது மட்டம் தட்டினால் அது உங்களின் உறவுக்கே ஆபத்து.

அட்வைஸ் :

அட்வைஸ் :

சொல்பவருக்கு பிடிக்கும் ஆனால் கேட்பவருக்குத் தான் கொஞ்சம் சிக்கல்.அவர்கள் நேரங்காலம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்க நாம் வேறு வழியின்றி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இதில் இருக்கும் ப்ளஸ் என்ன தெரியுமா? நீங்களாகவே சென்று சில நேரங்களில் அட்வைஸ் கேக்கும் போது, அல்லது ஏதேனும் யோசனை கேக்கும் போது அவை உங்கள் காதலை மேம்படுத்தும். ஆம், நிச்சயமாக என்னிடம் வந்து இந்த யோசனையை கேட்கிறார் என்று அவரை மிகவும் ஸ்பெஷலாக உணரச் செய்திடும்.

அது உங்களுக்கு பயனளித்ததோ இல்லையோ மறக்காமல் நன்றி சொல்லிடுங்கள்.

நல்ல நண்பன் :

நல்ல நண்பன் :

நீங்கள் நினைப்பதை விட உங்கள் நண்பர்கள், வீட்டினர், உறவினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் சொல்லுங்கள் இது பெண்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதுடன் உங்கள் மீதான ஆர்வமும் அதிகரிக்கும்.

ஆனால், மக்களே கவனம் இதில் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் பகிர்தல் நலம். அதே போல பிடிக்காத நண்பரின் பேரைச் சொல்லி அவர் பாராட்டியாதாக தயவு செய்து சொல்லாதீர்கள். இது பெரும் சூறாவளியையே ஏற்படுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Important Things Girls Like to Hear From Men

Important Things Girls Like to Hear From Men
Story first published: Monday, December 4, 2017, 11:00 [IST]