For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலியின் பெற்றோரை சந்திக்கும் போது செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!

காதலியின் பெற்றோரை சந்திக்கும் போது செய்ய வேண்டியவை

By Lakshmi
|

காதலின் அடுத்த நிலை திருமணம். காதல் திருமணத்தை பெற்றோர்களின் சம்மதம் பெற்று செய்வது உன்னதமானது. உங்கள் திருமணம் பற்றி பேச உங்கள் காதலியின் பெற்றோர்களை சந்திக்க செல்கிறீர்களா? அப்போது கவனமாக இருக்க வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். எனவே முதல் முறை அவர்களை சந்திக்கும் போது சில விஷயங்களை செய்ய வேண்டும். சில விஷயங்களை செய்ய கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அப்ப தொடர்ந்து படித்து தெரிஞ்சுக்கங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நேரம் தவறாமை

1. நேரம் தவறாமை

உங்கள் காதலியின் பெற்றோர்களை காக்க வைப்பது அவர்களுக்கு உங்களை பார்க்கும் முன்னரே தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கிவிடும். எனவே குறித்த நேரத்திற்கு செல்லுங்கள்.

2. நேர்த்தியான உடை

2. நேர்த்தியான உடை

உங்கள் வெளித்தோற்றம் நன்றாக இருப்பது அவசியம். அயர்ன் செய்த முழு கை உள்ள பார்மல் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து செல்லுங்கள். பார்ட்டிக்கு செல்வது போல இல்லாமல் இண்டர்வியூ செல்வது போல செல்லுங்கள்.

3. சேவ்விங்

3. சேவ்விங்

முடி மற்றும் தாடியை நேர்த்தியாக திருத்தம் செய்வது அவசியம். இதில் எல்லாம் கவனம் பல ஆண்கள் கவனம் செலுத்துவது இல்லை.

4. மரியாதை

4. மரியாதை

அவர்களை மரியாதையான முறையில் அழைப்பது அவசியம். உங்களது ஊர் வழக்கப்படி இல்லாதவாறு அவர்களது வழக்கப்படி மரியாதையாக அழையுங்கள்.

5. அளவான சாப்பாடு

5. அளவான சாப்பாடு

அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது மிகவும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்காக மிகவும் குறைவாகவும் சாப்பிடாதீர்கள். அது அவர்களுக்கு ஒருவேளை சங்கடங்களை தரலாம்.

6. நேர்த்தியான உடல் அசைவு

6. நேர்த்தியான உடல் அசைவு

உங்கள் உடல் அசைவுகள் நேர்த்தியாக இருக்க வேண்டியது அவசியம். நேராக அமருங்கள். அவர்களது கண்களை பார்த்து பேச வேண்டியது அவசியம்.

7. பாராட்டுதல்

7. பாராட்டுதல்

உங்களுக்காக அவரது வீட்டில் சிரமபட்டு சமைத்திருப்பார்கள். ஒருவேளை உணவு சரியாக இல்லை என்றால் குறை எல்லாம் கூற கூடாது. நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். உங்கள் காதலியின் அம்மாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

8. ரொமேன்ஸ் செய்தல்

8. ரொமேன்ஸ் செய்தல்

உங்களது காதலியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களின் முன்னிலையில் உங்கள் காதலியுடன் ரொமேன்ஸ் செய்ய முயலாதீர்கள். அது அவர்களது பெற்றோர்களுக்கு தர்ம சங்கடத்தையும் உங்கள் மீது வெறுப்பையும் உண்டாக்கும்.

9. காதலிக்கு மரியாதை

9. காதலிக்கு மரியாதை

நீங்கள் உங்கள் காதலியுடன் எப்படி வேண்டுமானலும் பேசிவிடலாம். ஆனால் அவரது பெற்றோர்களின் முன்பு உங்கள் காதலியிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to meet girls friend father

How to meet girls friend father
Story first published: Thursday, June 29, 2017, 17:26 [IST]
Desktop Bottom Promotion