அவன் மட்டும் அந்த நிமிடம் வரவில்லை என்றால்... நாங்கள் குடும்பத்துடன் இறந்திருப்போம்!

Written By:
Subscribe to Boldsky

எங்களது குடும்பம் மிகவும் கஷ்டப்படும் குடும்பம் தான்.. வீட்டுற்குள் புகுந்தாலே ஆங்காங்கே பழைய உடைந்த பொருட்கள் தான் பார்வையில் விழும். எனது சில தோழிகள் கூட எங்களது வீட்டிற்கு வர தயங்குவார்கள். நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் உடைந்தாலோ அல்லது பழுதானாலோ அதை மாற்ற சில வருடங்கள் கூட ஆகும். அந்த அளவுக்கு வறுமை எங்களை வாட்டிக் கொண்டிருந்தது. இந்த வறுமையிலும் எனக்கு கடவுள் தந்த பரிசு எனது குரல் தான். நான் சில டிவி நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் பாடுவேன். இதனால் எனக்கு கொஞ்சம் வருமானம் கிடைக்கும். இது எங்களது குடும்ப செலவுகளுக்கு சரியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிவி நிகழ்ச்சி!

டிவி நிகழ்ச்சி!

ஒருமுறை எனக்கு எங்கள் ஊரில் பெய்ந்த கன மழையால், தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அந்த சமயம் தான் நான் பங்கேற்ற டிவி நிகழ்ச்சி ஒன்றின் போட்டி நாள் வந்தது. இந்த போட்டியில் மட்டும் நான் வெற்றி பெற்று விட்டால், இறுதி சுற்றிற்குள் நுழைந்து விடுவேன். அந்த பரிசை கொண்டு எங்களது வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்ற கனவு இருந்தது. இத்தனை நாட்களாக போட்டியில் நான் நல்ல பெயரை தான் எடுத்தேன். இந்த முறை என்ன ஆகுமோ என்ற பயம் எனக்குள்...! தொண்டை வேறு சரியில்லை என்ற பதட்டம்!

பறிபோனது!

பறிபோனது!

போட்டி அன்று எனது தொண்டையின் நிலை இன்னும் மோசமானது... அன்று முதல் சுற்றில் நான் ஒரு பாடலை பாடினேன்..! ஆனால் துரதிஷ்டவசமாக நான் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன்! எனக்கு அந்த நீக்கம் மிகுந்த மனச் சுமையை கொடுத்தது. திருமண மேடையில் பாடும் வாய்ப்புகள் கிடைக்காத சமயத்தில், இந்த டிவி நிகழ்ச்சியின் போது வரும் வருமானம் தான் எங்களது பசியை ஆற்றியது. இப்போது அதுவும் இல்லாமல் போனாது.

ரசிகை!

ரசிகை!

என்னால் இனி டிவி நிகழ்ச்சியில் பாட முடியாமல் போனாதே என்ற சோகத்தில் நான் இருக்கும் போது எனக்கு போன் வந்தது. வெளிநாட்டில் வசிக்கும் எனது இரசிகையின் போன் கால் தான் அது...! இத்தனை நாட்களாக நான் மேடையில் பாடியதை பார்க்காத அவள், கடைசி நாள் நான் தொலைக்காட்சியில் பாடிய பாடலை கேட்டு எனது விசிறியாகிவிட்டாளாம்! எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..! அவளது பேச்சு என் மனதிற்கு ஒரு இதமளித்தது. அவ்வப்போது என்னிடம் போன் செய்து பேசுவாள். எனக்கு சில பரிசுகளையும் அவள் வெளிநாட்டிலிருந்து அனுப்பினாள். சில நாட்களிலேயே என் மனதிற்கு பிடித்த தோழி ஆனாள்.

அதிர்ச்சியளித்த நட்பு

அதிர்ச்சியளித்த நட்பு

எங்கள் நட்பு ஒரு முகம் பார்க்காத நட்பாகவே தொடர்ந்தது. ஒரு நாள் தீடிரென அவள் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா? என்றாள்... என்ன கேள் என்றேன்! நீங்கள் கேட்டாள் என் மீது கோபம் கொள்ள கூடாது.. என்னிடம் பேசாமல் இருக்க கூடாது.. நான் கேட்பதற்கு நீங்கள் சரி என்று சொல்லிவிட்டாள் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றாள்..! என்ன இது அது எப்படி நீ என்ன கேட்க போகிறாய் என்று தெரியாமல் சரி என்று சொல்ல முடியும் என்றேன்..! ப்ளீஸ்... ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். நானும் சரி அப்படி என்ன தான் கேட்டு விட போகிறாள் என்று சரி கேள் என்றேன்! என் அண்ணாவை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்றாள். நான் அதிர்ந்துவிட்டேன். நீ என்ன உளறுகிறாய்..? இப்படி எல்லாம் பேசாதே என்றேன். நான் உண்மையாக தான் கேட்கிறேன்..! உங்களுக்கு சம்மதமா என்று கேட்டாள்... இப்படி எல்லாம் விளையாடாதே என்று கூறினேன். நான் விளையாடவில்லை.. ஒருநிமிடம் என் அண்ணாவிடம் பேசுங்கள் என்று சட்டென்று போனை கொடுத்துவிட்டாள்.

நல்ல குணம்

நல்ல குணம்

அவர் என்னிடம் அதிகமாக பேசவில்லை.. என் தங்கை சட்டென்று கேட்டுவிட்டாள். உங்களது மனநிலை எனக்கு புரிகிறது. நாம் நண்பர்களாக பழகலாம். பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நல்ல நண்பர்களாகவே இறுதி வரை இருக்கலாம் என்று கூறினார். அதற்கும் மேலாக என்னுடன் உங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் எல்லாம் பேச வேண்டாம். நாம் பெரிதாக என்ன பேச போகிறோம்... உங்களது பெற்றோரிடம் என்னை பற்றி சொல்லி என்னை அறிமுகம் செய்து வையுங்கள் எனவும் கூறினார். என்னால் அந்த நட்பை வேண்டாம் என்று உதற முடியவில்லை. பெற்றோர்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தேன்.

எப்படி நம்புவது?

எப்படி நம்புவது?

என் பெற்றோரிடம் அவர் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார். என்னுடன் பேசும் அவரது பேச்சில், என்மீதும் எனது குடும்பத்தின் மீதுமான அக்கறை தெளிவாக தெரிந்தது..! எனக்கு அவரை பிடித்து போனாது ஆனால் அதனை அவரிடம் கூறவில்லை. ஒருநாள் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் அத்தனையையும் எனக்கு அனுப்பினார்கள். பார்த்தேன்.என் பெற்றோர்களிடமும் காண்பித்தேன். அவர்களுக்கும் இவரை பிடித்து போனது...! எனக்குள் அவர் பெரிய இடத்தை பிடித்து விட்டார் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். ஆனால் அவரும் அவரது தங்கையும் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நம்ப வேண்டிய சூழ்நிலை தான் இருந்தது. அவரகளை பற்றி முழுதாக எதுவும் தெரியவில்லை. திருமணம் செய்து கொண்டால் சரியாக வருமா? பார்த்து பார்த்து திருமணம் செய்து கொள்பவர்களது வாழ்க்கையை சில நேரங்களில் ஏமார்ந்து போகிறது.. இவர் யார் என்று கூட தெரியாது இவரை நம்பி திருமணத்திற்கு எப்படி சம்மத்திப்பது என்ற ஒரு மன போராட்டமும் மனதில் இருந்தது....!

பெற்றோர்களுக்கு தெரிந்தது

பெற்றோர்களுக்கு தெரிந்தது

ஆனால் இந்த விஷயத்தில் எனது முடிவை எதிர்பார்த்து பிரயோஜனம் இல்லை என்று கருதினாலோ என்னவோ தெரியவில்லை. அவரது தங்கை எனது பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்...! ஆனால் என் பெற்றோர்கள் எல்லா பெற்றோர்களை போல தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். போன் பேச்சுக்கு தடை வந்தது. என் பெற்றோர்கள் செய்ததும் சரி தான்... முன் பின் தெரியாத ஒருவருக்கு எப்படி பெண்ணை திருமணம் செய்து தருவார்கள்? என் உறவினர்களும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் சற்றும் ஓயவில்லை.. தொடர்ந்து முயற்ச்சித்தார்... ஒரு நாள் நான் போனை எடுத்து அந்த ஒரு நிமிடம் நீங்கள் சேனலை மாற்றும் போது நான் உங்கள் கண்ணில் விழாமல் இருந்தால், நான் சந்தோஷமாக இருந்திருப்பேன். என் வாழ்க்கையில் இருந்த நிம்மதியே பறிபோனது என்று திட்டி போனை வைத்து விட்டுடேன். அதன் பிறகு எனக்கு போன் வரவே இல்லை. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்..! எனது மனதில் இருந்த சோகம் முகத்திலும் வெளிப்பட்டது. பின் கண்களில் கண்ணீராகவும் சில சமயங்களில் வந்தது..! என் நடவடிக்கைகளை கண்டு என் பெற்றோர்கள் பயந்து போனார்கள்.

ஏன் பேசினோம்?

ஏன் பேசினோம்?

அவர் நல்லவரோ, கெட்டவரோ அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். பெற்றோர்களிடம் என் காதலை கூறினேன்.. அவர்களை சம்மதிக்க வைத்தேன்.. பின்னர் அவரிடமும் எங்களது சம்மதத்தை பற்றி கூறினோம். அவரும் அவரது தங்கையும் தான் அவர்களது வீட்டில், பெற்றோர்கள் இல்லை. ஒரே ஒரு பாட்டி இருக்கிறார் அவரால் திருமணத்திற்கு வர முடியாது என்று கூறினார்கள். இவை எல்லாம் நம்பிக்கையாக இல்லை. இருப்பினும் வேறு வழி இல்லாமல், திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம். திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தன. திருமணத்திற்கு நான்கு நாட்கள் தான் இருந்த நிலையில் எங்களால் திருமணத்திற்கு அரை மணி நேரம் முன்னால் தான் வர முடியும் என்று ஒரு பெரிய குண்டை தூங்கி தலையில் போட்டார்கள். நாங்கள் இடிந்து போனோம். இவர்கள் வருவார்களா? வர மாட்டார்களா? ஏமாற்ற பார்க்கிறீர்களா? திருமணத்திற்க்கு எந்த மாப்பிளையாவது அரை மணி நேரம் முன்னால் தான் வருவேன் என்று சொல்வார்களா? என்ற பல கேள்விகள், சந்தேகங்கள்!

உயிரை விட்டுவிடுவோம்!

உயிரை விட்டுவிடுவோம்!

திருமண நாளும் வந்தது. மணமகள் அறையில் நான்... யாரும் இல்லாத ஒரு மணமகன் அறை..! திருமண மண்டபத்தில் என் உறவினர்கள் மட்டும்! மணமகனின் உறவினர்கள் என்று யாரும் வரவில்லை...! என் நிலை அப்போது எப்படி இருக்கும்! இந்த திருமணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தூக்கு போட்டு இறந்து விடுவோம் என்று கூறும் என் பெற்றோர்கள். இவர்கள் என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்திருப்பேன்..! இப்போது இப்படியாகி விட்டதே! குறை கூற உறவினர்களுக்கு சொல்லி தரவா வேண்டும்? இப்பவே அனைவரது வாயும் எங்களை பற்றி முனுமுனுக்க தொடங்கி விட்டன...! அவர் மட்டும் வரவில்லை என்றால் என் நிலை என்னவாகும்? நான் கண்டிப்பாக விஷம் குடித்து இறந்து விடுவேன்.. என்று முடிவு செய்து கொண்டேன்.

மேடையில் வேறொருவர்

மேடையில் வேறொருவர்

பெண்ணை மணமேடைக்கு அழைத்து வாருங்கள்..! முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிறது என்ற ஒரு சத்தம்! நான் உறைந்து விட்டேன்! இன்னும் சில நிமிடங்களில் எங்களது குடும்ப மானம் போக போகிறது என்று படபடத்தேன்! மேடையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது! மேடையில் யாரோ ஒருவர் அமர்ந்திருந்தார். என் பெற்றோர்கள் முகத்தில் ஒரு நிம்மதி.! என் அருகில் வந்து, போய் உட்காரு மற்றதை அப்பறம் பார்க்கலாம் என்றார்கள்! வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதா என்ற மன போராட்டம்! பெற்றோர்களின் உயிர், மானம் இரண்டும் என் கைகளில், சென்று அருகில் அமர்ந்து கொண்டேன். என்னை உறசுவது போல அவரும் அமர்ந்தார். கண்களில் நீர் நிறைந்திருக்க அவரை கண்டேன்..! சில நிமிடங்கள் உறைந்தேன். புகைப்படத்தில் கண்ட அதே முகம்...! ஆம்! என் காதல் பொய்யாகவில்லை! அவர் வந்துவிட்டார். அண்ணி என்ற ஒரு குரல் பின்னால் இருந்து, அது அவரது தங்கை! கட்டிமேளம் கொட்ட எங்கள் திருமணம் இனிதே நிறைவடைந்தது!

நல்லவேளை பார்த்தார்!

நல்லவேளை பார்த்தார்!

இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல வேண்டும் என்றார்கள். புது நாடு, எதுவுமே தெரியாது..! இவர்களை மட்டுமே நம்பி சென்றேன். என் நம்பிக்கை வீணாகவில்லை. நான் என் வாழ்க்கையில் கண்டிராத அனைத்து இன்பத்தையும் அவர் எனக்கு கொடுத்தார். என் தேவைக்கு அதிகமாக எனக்கு செய்தார். வரதட்சணைக்காக பல கொலைகள் நடக்கும் இந்த காலத்தில், என் பெற்றோர்களும் நன்றாக இருக்க வேண்டுமென அவர் எங்களது சொந்த ஊரிலேயே அரண்மனை போல ஒரு வீடு கட்டு தந்துள்ளார். இப்போது நாங்கள் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம்..! என் பெற்றோர்களே பார்த்தாலும் இப்படி ஒருவரை கணவனாக அடைந்திருக்க முடியாது. இப்போது நினைக்கிறேன், அவர் மட்டும் அந்த நொடி சேனலை மாற்றி என்னை காணாமல், எனக்கு போன் செய்யாமல் இருந்திருந்தால் நான் என்னவாகியிருப்பேன் என்று...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

he is my life real life story

he is my life real life story
Please Wait while comments are loading...
Subscribe Newsletter