என் கணவன் இறந்ததே இரண்டு வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது!

Written By:
Subscribe to Boldsky

அது ஒரு மார்கழி மாத மாலை நேரம்.... மார்கழி மாதங்களின் அதிகாலை நேரத்தில் வழக்கமாக தலைக்கு குளித்து விட்டு விடிவதற்குள் கோவிலுக்கு சென்று நல்ல கணவனாக வர வேண்டும் என்று ஆண்டாளை போல நானும் வேண்டிக் கொள்வேன்.. இன்று தான் அந்த மார்கழி முதல் தேதி.. எனக்கு மாலையில் எனது தோழி ஒருத்திக்கு செல்போனில் இருந்து பாட சந்தேகம் கேட்பதற்காக போன் செய்தேன். பொதுவாக எனக்கு எண்களை எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை.. மனப்பாடமாக வைத்துக் கொள்வேன்.. என் தோழிக்கு கால் செய்தேன்...

ஹலோ பிரியாவா?

இல்ல.. நான் சூர்யா பேசற.. உங்களுக்கு யார் வேணும்?

ப்ரியா இருந்தா கொஞ்சம் போன கொடுக்கறீங்களா?

சாரி ராங் நம்பர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதட்டம்..!

பதட்டம்..!

உடனே போனை கட் செய்துவிட்டேன்.. எனக்கு ஒரே படபடப்பாக இருந்தது.. இது என்னுடைய போன் வேறு இல்லை.. என் தந்தையுடைய போன்.. அவர் மீண்டும் கால் செய்து விட்டால் என்ன செய்வது என்று பதட்டமாக இருந்தது... பல மணிநேர பதட்டம் அது.. சரி ஒரு மெசேஜ் செய்து அவனிடம் இனி போன் செய்ய வேண்டாம் என்று கூறி விடுவோம் என்று முடிவு செய்தேன்...! அந்த முடிவானது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது... ஆனால் அது கடைசியில் எங்களது உரையாடலுக்கு போட்ட ஒரு பிள்ளையார்சுழியாகிவிட்டது..

குடும்பத்தில் ஒருவன்

குடும்பத்தில் ஒருவன்

எனக்கு அதுவரை ஆண் நண்பர்களே கிடையாது... எனக்கென ஒரு ஆண் நண்பன் இருப்பது எனக்கு பிடித்திருந்தது. தினமும் அன்றைன்றைக்கு நடக்கு விஷயங்களை நாங்கள் ஷேர் செய்து கொள்வோம். ஆனால் அவன் என்னை விட ஆறு வயது மூத்தவன்.. ஒரு நாள் அவனிடம் நான் நீ யாரயாவது காதலிக்கிறாயா என்று கேட்டேன்... இல்லை நான் என் கடமையை எல்லாம் விட்டுவிட்டு காதல் பின்னால் போக மாட்டேன்.. என்றான். அவனது குடும்பம், தங்கைகள் பற்றி எல்லாம் என்னிடம் கூறினான்.. அவர்களை எல்லாம் என்னுடம் போனில் பேச வைத்தான்!

காதல் ஆசை

காதல் ஆசை

அவன் மீது எனக்கு நம்பிக்கை வந்தது.. எனது அம்மா, அப்பாவையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்! அவர்களுடன் நன்றாக பேசி அவர்களது மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டான். என்னிடம் அடிக்கடி என் அம்மா அவனை பற்றி விசாரிப்பார். என் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவருக்கு என்னை மிகவும் பிடித்தது. அவருக்கு இரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்று அதிக ஆசை... அவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நான் தினமும் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்வேன்.

இரகசிய காதல்

இரகசிய காதல்

ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு நல்ல செய்தியை கூறினார்....! அப்போது நான் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டேன்..! அந்த நல்ல செய்தி தான் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்பது...! சிறிது நாட்கள் சென்றன.. எங்களது நட்பும் நீண்டது.. என்னிடம் எதற்கு எடுத்தாலும் அடம்பிடிக்கும் குணம் அவருக்கு உண்டு.. வேறு வழியின்று அவருக்கு நான் பனிந்து போய்விடுவேன்...! எனக்கு நியூ இயர்க்கு கிரிட்டிங் கார்டு அனுப்பினார்... அதில் இதயம் துடிப்பது போல இருந்தது..!

நான் கால் செய்து என்ன ஒரே இதயமாக இருக்கிறது என்று கேட்டேன்..!

அது என் இதயம் தான்.. உனக்காக தான் துடிக்கிறது என்றார்..

எனக்கு வெட்கமாக இருந்தது.. என்ன புரியல என்றேன்..

ஆமா உனக்கு எது தான் புரியுது? இது மட்டும் புரியறதுக்கு என்றார்...!

சுவாரசிய பேச்சுக்கள்

சுவாரசிய பேச்சுக்கள்

எனக்கு அன்று இரவு தூக்கமே இல்லை...! ஒரே சந்தோஷமாக இருந்தது... அவர் என்னை காதலிக்கிறார் என்று தோன்றியது, ஆனால் அவரிடம் இதை கேட்டு இருக்கும் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தோன்றியது. இப்படியே ஒரு சில நாட்கள் மறைமுகமாகவே காதலை ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொண்டோம். ஒருநாள் அவர் என்னிடம் பேசிப்பேசி என் வாயில் இருந்தே என்னை கல்யாணம் பண்ணிக்கறயா என்ற வார்த்தையை வர வைத்து விட்டார்...! நான் கேட்ட இந்த கேள்விக்கு உடனே இது உன் வாயில் இருந்து எப்ப வரும்னு தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்... கண்டிப்பா உடனடியாக கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றார்.. எனது புகைப்படத்தை கேட்டார்.. நானும் அவரது புகைப்படத்தை கேட்டேன்..! பல புகைப்படங்களை தபால் வழியாக பறிமாறிக் கொண்டோம். நமது ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு என் நண்பர்கள் கூறுகிறார் என்று கூறினார்... ஆம் அப்படி தான் என் தோழிகளும் கூறினார்கள்...

இப்பவே பார்க்கணும்!

இப்பவே பார்க்கணும்!

எங்களது தொலைதூர காதல் மிகவும் மகிழ்ச்சியாக தொடர்ந்தது... அவர் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார். எங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்றும் கூறினார். எனக்கு இதுவரை போனில் பேசியவரை எப்படி நேரில் பார்க்க போகிறோம் என்ற ஒரு பதட்டம் இருந்தது..! நாங்கள் சந்திக்க போகிற அந்த நாளும் வந்தது..! என் நெஞ்சம் படபடத்தது..! அவனை என் அப்பா தான் அழைத்து வந்தார். நான் அப்போது அவரை கண்டு மாடியில் இருந்து ஓடி வந்தேன்...இருவரும் பார்த்துக் கொண்டோம்....! கண்களில் இருக்கும் காதலை மறைத்து சாதாரணமாக இருப்பது போல இருந்தோம்.. நாள் முழுவதும் எங்கள் வீட்டில் தான் இருந்தார். கிளம்பி செல்லும் போது அழுகையாக வந்தது.. ஏன் தான் பார்த்தோமோ என்ற ஒரு உணர்வு... மீண்டும் மீண்டும் பார்க்க துடித்த கண்கள்.... அதற்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்னை பார்க்க வந்துவிடுவார்....

துன்பம்!

துன்பம்!

இதுவரை மகிழ்ச்சியாக சென்ற நாட்கள் பின்னர் சோகமாக மாறியது... என் அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது அப்போது இவரது பேச்சு எனக்கும் என் அம்மாவிற்கும் ஆறுதல் அளித்தது... பின் சின்னசின்ன சண்டைகள் எங்களுக்குள் வர ஆரம்பித்தன... ஆனாலும் எங்களுக்குள் இருந்த புரிதலால் நாங்கள் இணைந்துவிட்டோம். எனக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் கனவு... எனக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது... ஆனால் என்னால் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை...

சத்தியம் வாங்கினார்

சத்தியம் வாங்கினார்

அவர் மிகவும் பொருப்பானவர்.. என் மீதும் என் குடும்பம், எனது படிப்பு அனைத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர் என்பதால் என்னை பலமுறை என்னுடன் அதிகமாக பேசாதே உன் படிப்பில் கவனம் செலுத்து என்று எச்சரித்தார்... ஆனால் என்னால் அது முடியவில்லை... சரி உன்னுடைய படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடங்கள் தானே இருக்கிறது... நீ அதுவரை நன்றாக படி... நானும் என் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முயல்கிறேன்.... என் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் வாங்குகிறேன்.. உன் படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல செய்தியை கட்டாயம் சொல்கிறேன் என்று கூறி என் கழுத்தில் ஒரு செயினை போட்டு இது உனக்காக எனது முதல் மாத சம்பளத்தில் வாங்கியது.. இது தான் நான் உனக்கு கட்டும் தாலி... நீ நாம் கொஞ்ச நாள் பிரிந்திருப்போம் பின் வாழ்க்கை முழுவதும் உன்னை விட்டு பிரியவே மாட்டேன் என்று சொல்லி சென்றார்...

காத்திருந்த அதிர்ச்சி!

காத்திருந்த அதிர்ச்சி!

நாட்கள் கடந்தது... நான் அவருக்கு கால் செய்யவில்லை.... இரண்டு வருடங்கள் கழித்து நான் அவரது எண்ணிற்கு எனது படிப்பு முடிந்ததும் கால் செய்தேன்.. எனது பட்டமளிப்பு விழாவிற்கு அவரை அழைத்து செல்வதற்காக...

ஹலோ... என்று ஒரு பெண்ணின் குரல்..

(பதட்டமானது எனக்கு) சூர்யா என்றேன்!

நீங்க யாரு என்றார்....

போனை வைத்து விட்டேன்!

இது நிஜமா?

இது நிஜமா?

யார் இந்த பெண்? ஒருவேளை அவருக்கு திருமணமாகிவிட்டதா என்று தோன்றியது...! என்னால் முடியவில்லை... மனம் எதையும் யோசிக்கவில்லை.. சிலை போல நின்று விட்டேன்! மீண்டும் அந்த எண்ணில் இருந்து கால் வந்தது...

உறைந்து விட்டேன்!

ஹலோ... நீங்க யார கேட்டீங்க?

சூர்யாவை கேட்டேன்... அவர் இல்லையா?

நீங்க யாரு சூர்யாக்கு?

நான் அவங்க பிரண்ட் தான்..

அவர் இறந்துட்டாரே.... உங்களுக்கு தெரியாதா? இறந்து 2 வருஷம் ஆச்சு என்றார்..

பின்னர் பல விவரங்களை சொன்னார்... பைக்கில் வேலைக்கு செல்லும் போது, லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்தது... பின் அவருக்கு நான் கடிதம் அனுப்பும் வீட்டின் முகவரிக்கு சென்றேன் அவர்கள் அங்கு இல்லை...! விசாரித்து பார்த்த போது அவர்கள் காலி செய்து விட்டு சென்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்..

தெரியாத மருமகள்

தெரியாத மருமகள்

என்னுடம் தொலைப்பேசியில் பேசியவர் அவரது பெரியம்மாவின் பெண். அவரது உதவியுடன் அவரது வீட்டிற்கு சென்றேன்.. அங்கே நுழைவாயிலில் அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது... எனக்கு அதை கண்டு நம்பமுடியவில்லை... சிறிய வீடு... இரண்டு கல்யாணம் ஆகாத தங்கைகள் அருகில் இருக்கும் கடைக்கு வேலைக்கு செல்கிறார்கள்.. இருதய நோயுள்ள அப்பா.. வயதான அம்மா.. தங்களது தினசரி வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்... எனக்கு ஒன்றுமே புரியவில்லை.... குடும்பத்தின் ஆணி வேராக இருந்த அவர் இறந்ததும் குடும்பமே சிதைந்து விட்டது... என்னால் நான் தான் உங்கள் மருமகள் என்று அவர்களிடம் கூற முடியவில்லை... என் கணவரின் முகத்தை கடைசியாக பார்க்கவும் முடியவில்லை... நிச்சயம் அவர் இறக்கும் போது என்னை தான் நினைத்திருப்பார்.... இன்றுவரை அவர்களது குடும்பத்திற்கு உதவி வருகிறேன்.. இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டேன்..! அடிக்கடி அவர்களை சென்று பார்த்துக் கொள்கிறேன்.... அவரது நினைவு வரும் போது எல்லாம் அவர் எனக்கு போட்டு விட்ட செயினை தொட்டு பார்த்துக் கொள்கிறேன்....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

he is my everything but he left

he is my everything but he left
Story first published: Tuesday, October 31, 2017, 18:10 [IST]
Subscribe Newsletter