இந்த 5 அறிகுறி வெச்சு, அந்த பொண்ணு உங்கள ஏமாத்த மாட்டங்கன்னு தெரிஞ்சுக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

இப்போதெல்லாம் எப்படி காதலில் விழுகிறார்கள், எந்த காரணத்தால் காதலில் இருந்து பிரிகிறார்கள் என்பதே தெரிவதில்லை. பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் பல காதல், வேலைக்கு சென்ற பிறகென காதலும் பலவகைப்படும் என கட்டுரையே எழுதலாம்.

ஆனால், இது போன்ற போலி காதல்களுக்கு மத்தியில் உங்கள் காதல் உண்மையானது. உங்கள் காதல் துணை உங்களை விட்டு பிரியாமல், நீண்ட நாள் உறவில் இனைந்து இருப்பார்கள் என்பதை எப்படி அறிவது?

இதோ! இந்த அறிகுறிகள் உங்கள் உறவில் தென்பட்டால், உங்கள் காதல் உறவு கண்டிப்பாக திருமணத்தில் தான் முடியும் என்பதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நேரத்தை வீணடிக்காமல் எதிர்கால திட்டங்கள் குறித்து எப்போதும் பேசுவார்கள். மேலும் அவர்கள் பேசும் எதிர்கால திட்டத்தில் உங்களுக்கான பங்கு அதிகம் இருக்கும். உங்களை அதில் சேர்க்காமல் எந்த ஒரு திட்டத்தையும் இடமாட்டார்கள்.

#2

#2

மேலும், நீங்கள் ஒவ்வொரு செயலில் ஈடுபடும் போதும், எதிர்கால திட்டங்களை நினைவில் வைத்து செயல்படு, இது உன் நாளைய வாழ்க்கையில் எந்த விதமான தாக்கத்தை உண்டாக்கும் என்பதை புரிந்து நடந்துக் கொள் என அறிவுரைதுக் கொண்டே இருப்பார்கள்.

#3

#3

இன்று நீ இப்படி இருக்கிறாய், பத்து அல்லது இருபது வருடங்களுக்கு பிறகு நீ எந்த நிலையில் இருப்பாய். அதற்கு நீ எப்படி உன்னை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும், பிள்ளைகள், வீடு, வாசல் என முழுமையான எதிர்கால துணையாய் உங்கள் அருகில் நிற்பார்கள்.

#4

#4

நம்பிக்கை இல்லாத உறவுகள் என்றும் நிலைக்காது. உங்கள் வாழ்வில் எதிர்மறை தாக்கங்கள் நிறைந்திருந்தாலும், உங்களுடன் துணை நிற்பார்கள். உங்கள் தோல்வியில் தோள் கொடுப்பார்கள். அவர்களது இதயம் என்றும் உங்களுக்காக துடித்து கொண்டே இருக்கும்.

#5

#5

அவர்களுடைய பண்பு உங்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டே இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவர்கள். ஒரு துளி கூட சந்தேகம் இன்றி, உங்களை நல்வழி நடத்துவார்கள்.

#6

#6

உங்கள் இருவருக்கு மத்தியில் சந்தேகம் என்பது ஒரு பொழுதும் எழுதிருக்காது. சந்தேகம் என்ற தீய கருவி தான் உறவுகளை சீரழிக்கும் முதல் விஷயம். இந்த தீய எண்ணம் உங்கள் உறவில் இல்லை என்றாலே, அந்த உறவு ஆண்டுகள் பல கடந்து மண் மேல வாழும் என்பதை நூறு சதவீதம் கூறலாம்.

#7

#7

மூன்றாம் நபர்கள் உங்களை பற்றி தவறாக அல்லது கிசுகிசு பேசினால் கூட, அதை அப்படியே வந்து உங்களிடம் கூறி, இப்படி தன்னிடம் கூறுகிறார்கள், இந்த வகையிலான நட்பு வைத்துக் கொள்ளாதே என அறிவுரை கூறி செல்வார்கள்.

#8

#8

நீ எப்போ கல்யாணம் பண்ணிப்ப, உனக்கெல்லாம் கல்யாணம் நடக்கும்-னு நெனச்சுட்டு இருக்காத, ஏன் இன்னுமா உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கல... என உங்களை கல்யாணம் என்ற ஒரு ஆயுதத்தை வைத்து வறுத்து எடுப்பார்கள்.

#9

#9

கல்யாணம் பண்ணா இப்படி எல்லாம் இருக்கணும், இதெல்லாம் செய்யனும், இதெல்லாம் தவிர்க்கணும் என கல்யாணம் குறித்த டிப்ஸ் எல்லாம் வழங்குவார்கள். இதெல்லாம், எப்படா கல்யாண பண்ணிக்க கேட்ப என அவர்கள் எதிர்பார்த்து ஜாடையாக பேசுபவை.

#10

#10

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே உங்களை ஏற்றுக் கொள்வார்கள். தனக்காக இதையெல்லாம் நீ மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி இருந்தால் தான் நான் ஏற்றுக் கொள்வேன் என எந்த விதிகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்க மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Signs Shows That Your Relationship Will be Long Term!

Five Signs Shows That Your Relationship Will be Long Term!
Subscribe Newsletter