அந்த காலத்தில் அரசர்களை ராணிகள் இப்படி தான் மயக்கினார்களாம்!

Posted By:
Subscribe to Boldsky

பண்டைய காலத்தில் பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக தான் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இப்போது கெஸ்ட் ஹவுஸ் இருப்பது போல, அப்போது அந்தப்புரம் அமைத்து அதில் தங்களுக்கு பிடித்த பெண்கள், அயல்நாட்டு போரில் வென்று சிறைப்பிடித்த ராணிகளை தங்கவைத்து "இன்பம் பொங்கும் வெண்ணிலா..." என இன்பத்தில் மூழ்கி இருந்துள்ளனர்.

Ever Wondered How Queens Used To Attract Kings In Ancient Times?

Image Credit : gyanchand.wittyfeed.com

இப்போதிருக்கும் தலைமுறையில் மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கூட தாக்குப்பிடிப்பது இல்லை. ஆனால், அப்போது அவர்கள் எப்படி பல ஆண்டுகள் ஈர்ப்பு குறையாமல் இருந்தார்கள் என்பது ஆச்சரியத்தை எழுப்பலாம். அதற்கு அவர்கள் கடைப்பிடித்த பல விஷயங்கள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈர்ப்பு!

ஈர்ப்பு!

ராணி மீது ஈர்ப்பு இல்லாத அரசனே இல்லை. ராணிகளின் அழகு குறையாமல் இருக்க பல விஷயங்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். குளியல், அழகு பராமரிப்பு, ராணிகளின் அழகை பராமரிக்க என அரண்மனையில் தனி வைத்தியர்கள்.

மருத்துவர் கொடுக்கும் சிறப்பு மருந்துகள் மற்றும் உணவு எடுத்துக் கொள்ளுதல் என அழகும், வடிவும் சீர்குறையாமல் இருக்க பின்பற்றி வந்துள்ளனர்.

குளியல்!

குளியல்!

ரோஜாப்பூ இதழ்கள் இட்ட நீரில் குளிப்பது ராணிகளின் அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்காக இருந்துள்ளது. இது இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க செய்யும் என அப்போதே அறிந்து வைத்துள்ளனர். இது சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவியுள்ளது.

கழுதை பால்!

கழுதை பால்!

கழுதை பால், ஆலிவ் ஆயில் மற்றும் தேன் கலந்து குளியலுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் தன்மை அவர்களது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியிருக்கிறது.

கலை!

கலை!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அவர்கள் அன்று உடற்பயிற்சி எல்லாம் செய்யவில்லை. ஆனால், அதற்கு மாறாக அதே பயனை அளிக்கும் நடனம் ஆடுதல் போன்ற கலைகளை தினமும் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

நகை, உடை!

நகை, உடை!

ராணி என்றாலே நம் மனதில் தோன்றும் உருவம் அடம்பர உடை மற்றும் நகை உடுத்திய ஒரு பெண்ணின் தோற்றம் தான் வரும். தங்களுக்கான தனித்துவமான உடை மற்றும் நகைகள் உற்பத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

பிற நாடுகளை வெற்றிக் கொண்ட பிறகு அல்லது வணிக ரீதியாக நட்பு நாடுகளுக்கு பயணம் செல்லும் போது, அரசர்களே தங்கள் ராணிகளுக்கு இது போன்ற விலைமதிப்பற்ற பரிசுகளை தான் அளித்துள்ளனர்.

வாசனை திரவியம்!

வாசனை திரவியம்!

கலைநயம் மிக்க நகைகள், உடைகள் உடுத்துவதை தாண்டி, அரசர்களை மயக்க வாசனை திரவியம் பயன்படுத்தவும் செய்துள்ளனர். ஒவ்வொரு ராணியும் தங்களுக்கான தனி வாசனை திரவியம் தயாரித்து தரவும் தனி நபர்களை பணியமர்த்தி இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ever Wondered How Queens Used To Attract Kings In Ancient Times?

Ever Wondered How Queens Used To Attract Kings In Ancient Times?
Subscribe Newsletter