For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனின் உயிருக்காக போராடிய 9 மாத கர்ப்பிணி - காதலை உணர்த்தும் உண்மைக் கதை!

குளிர்பானம் அதிகமாக தொடர்ந்து குடித்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டு சிகிச்சையில் இருக்கிறான் கணவன் மனைவியோ ஒன்பது மாதம் கர்ப்பமாக இருக்கிறார் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது?

|

எல்லாருக்கும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை. லேசாக சோர்வானாலே உடனேயே உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும் போக்கு அதிகரிக்கிறது.

இதனால் தேவையின்றி உடலில் கலோரிகள் சேர்ந்து கொழுப்பு அதிகரிக்கும். அதோடு அது உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடியது. சக்தி தரும் பானங்கள் என்று விற்கப்படும் இவற்றில் காஃபின் அதிகமாக இருக்கிறது. அது இதயத்தைச் சுருங்கச் செய்கிறது. காஃபின் அதிகம் கலந்த பானங்களை அருந்தும்போது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இதயம் சீரற்ற முறையில் வேகமாகத் துடிக்கிறது, ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது.

தொடர்ந்து இது போன்ற பானங்களை குடிப்பதனால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் ஏற்படும் என்று பக்கம் பக்கமாக படித்தாலும் நமக்கு நம்புவதற்கு யோசனையாக இருக்கும். ஆனால் சாஃப்ட் டிரிங்க் குடித்ததனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் தன்னுடைய கதையை விவரிக்கிறார் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே காரணம் :

ஒரே காரணம் :

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதே ஆண்டு ஆஸ்டின் என்பவர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இருவருக்கும் ஒரே காரணம் தான் சொல்லப்பட்டது. என்ன தெரியுமா? உங்கள் உடலில் அதிகப்படியான கஃபைன் கலந்திருக்கிறது என்று.

சொல்லி வைத்தாற் போல இருவருக்கும் அதிகப்படியான சாஃப்ட் டிரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஆஸ்டீன் :

ஆஸ்டீன் :

இது ஆஸ்டினின் கதை. ஆஸ்டின் நோயின் தீவிரத்தை உணர்ந்து கொண்டிருந்த போது அவருடைய மனைவி ப்ரைனா அவர்களின் முதல் குழந்தையை கருவில் சுமந்து கொண்டிருந்தார். நோயின் தீவிரம் காரணமாக ஆஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கபட, கணவரையும் ,தன்னையும் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ப்ரைனா மீது விழுந்தது.

காதல் என்பது தனியாக உருவெடுப்பது, அல்லது பார்த்தும் தோன்றுவது, நினைவுகள், ஈர்ப்பு டேட்,செக்ஸ், என்று எது வேணாலும் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நான் நம்புவது புரிதலை. என் காதல் நல்ல புரிதலை ஏற்படுத்த வேண்டும் அப்போது தான் அது காதலின் உச்சத்தை தொட்டு நிற்கும்.

காதலுக்கு அடிப்படையான ஒன்று புரிதல் மட்டுமே. எல்லையற்ற அன்புக்கு புரிதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

திடீர் திருப்பம் :

திடீர் திருப்பம் :

அன்பான குடும்பம், காதலித்து கரம் பிடித்த கணவன், தற்போது ஒன்பது மாதங்கள் கர்ப்பம். இந்த நேரத்தில் என்னுடைய மகிழ்ச்சியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டுமா என்ன? அவ்வளவு சந்தோஷம். இந்த உலகத்திலேயே சந்தோசமான தம்பதிகள் நாங்களாகத்தான் இருப்போம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

இப்படி சந்தோஷமாக நினைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு நாள் வாழ்க்கையையே உங்களது அன்றாட நிகழ்வுகளையே உலுக்கிப் போட்டால் எப்படியிருக்கும். நீங்கள் தற்போது உணரும் சந்தோஷங்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு அழுகையை கொடுத்தால் எப்படியிருக்கும்.

மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேலையில் உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வியே முதன்மையானதாக இருந்தால் எப்படியிருக்கும்? நினைக்கவே பயங்கரமாய் இருக்கிறதல்லவா? நான் அனுபவித்தேன் இவை எல்லாவற்றையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

நான் ப்ரைனா . ஆஸ்டினின் காதல் மனைவி.

குழந்தை கனவுகள் :

குழந்தை கனவுகள் :

அன்று இரவு நிம்மதியாக தூங்கச் சென்றேன். இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்டின் வந்துவிடுவார். என்னருகில் படுத்துக் கொள்வார் இருவரும் சேர்ந்து குழந்தையைப் பற்றி நிறைய விவாதிப்போம். குழந்தை எப்படியிருக்கும்? எப்போது பிறக்கும்.

குழந்தையை யார் முதலில் பார்ப்பது? குழந்தை குறித்த கனவுகள் பேச்சுக்கள் எங்களுக்குள் நீண்டு கொண்டேயிருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு புதிய வாழ்க்கையை துவங்கப்போகிறோம்.

எங்களின் காதல் வாழ்க்கை அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது என்றே சொல்லலாம். ஆஸ்டின் சீக்கிரம் வா... நம் குழந்தையை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்.

இனி ஆயுசு முழுக்க இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அந்த இரவு தான், அப்படி நான் வேண்டிக் கொண்ட அந்த நேரத்திலேயே என்னுடைய கனவு சுக்குநூறாகும் என்று கற்பனை கூட செய்திருக்க வில்லை.

அத்தையின் அந்த வார்த்தைகள் :

அத்தையின் அந்த வார்த்தைகள் :

நான் அசந்து தூங்கிவிட்டிருக்கிறேன். ஆஸ்டின் இன்னும் வரவில்லை. லேசாக விழிப்பு வந்த போது விடியற்காலை ஆகியிருந்தது. அத்தை என் அறையை நோக்கி ஓடி வந்தார். அவர் மிகவும் பரபரப்பாக இருந்தார் அவர் கொண்டுவந்திருந்த செய்தி என்னை உலுக்கியெடுக்ககூடியதாய் இருந்தது. ஆம். ப்ரைனா, மனதை திடப்படுத்திக் கொள்... ஆஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றார்.

அதை புரிந்து கொள்ளவே எனக்கு சில நேரம் பிடித்தது. நன்றாகத்தானே இருந்தான். என்னிடம் அரைமணி நேரத்தில் வீட்டில் இருப்பேன் என்றானே, திடீரென்று என்ன ஆயிற்று அவனுக்கு, அதுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு?

Image Courtesy

ஆஸ்டீன் திரும்பி வா :

ஆஸ்டீன் திரும்பி வா :

நான் எமோஷனலாகிவிடக்கூடாது, குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்பட்டுவிடக்கூடாது என்று அத்தை மிகவும் பயந்திருந்தார். என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு. ஆஸ்டீனுக்கு எதுவும் ஆகியிருக்காது.

குழந்தை பிறக்கும் போது அவன் என்னுடன் இருப்பான். அவனுக்கு ஒன்றுமில்லை மீண்டும் மீண்டும் என்னுள் சொல்லிக்கொண்டேன். இரண்டு மணி நேரம் பயணித்து ஆஸ்டீனை அனுமதித்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம் நானும் அத்தையும்.

மருத்துவமனையில் :

மருத்துவமனையில் :

என் உயிரையே வைத்திருக்கும் நபர், நான் எல்லையில்லாமல் நேசிக்கும் நபர், என் குழந்தையின் தந்தை, அங்கே படுத்துகிடக்கிறார். நான்கு கண்ணாடி சுவர்களுக்குள் உயிர் காக்கும் செய்ற்கை சுவாசக் கருவிகளோடு தலையில் மிகப்பெரிய கட்டுடன் பார்க்க பார்க்க தலைச் சுற்றியது. என் காதலனை வலுக்கட்டாயமாக யாரோ என்னிடமிருந்து பிடுங்குவது போல் இருந்தது. இல்லை ஆஸ்டின் எனக்கானவன். நான் யாருக்கும் தரமாட்டேன்,.ஆஸ்டீன் எழுந்து வா உனக்காக நான் காத்திருக்கிறேன். ஆஸ்டீன் ஆஸ்டீன்.... கண்ணாடிசுவரிடம் அழ மட்டும் தான் முடிந்தது.

அப்போது உள்ளிருந்த வந்த மருத்துவர், ஆஸ்டினுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டிருக்கிறது என்றார். ஆஸ்டீனுக்கா? திரும்ப திரும்ப கேட்டேன். ஆம் ஆஸ்டீனுக்குத்தான் என்று உறுதியாக கூறினார்.

இதற்கு முன்னால் அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லையே திடீரென்று எப்படி மூளையில் ரத்தக்கசிவு? என்ன தான் அவனுக்குப் பிரச்சனை என்று எதுவுமே எனக்கு புலப்படவில்லை.

Image Courtesy

உண்மை விளங்கியது

உண்மை விளங்கியது

அப்போது தான், சமீப காலங்களில் அவன் அதிகமாக எடுத்திருக்கும் எனர்ஜி டிரிங்க்ஸ் காரணமாக அவன் உடலில் அதிகளவு கஃபைன் சேர்ந்திருக்கிறது. அவை ரத்தத்தில் கலந்து மூளையையே பாதித்திருக்கிறது. மருத்துவர் விவரிக்க விவரிக்க, ஆஸ்டீன் உட்கார்ந்த இடத்திலிருந்து ரோலிங் சேரை நகற்றி 4 டின்களை எடுத்துச் செல்லும் காட்சி நினைவுக்கு வந்தது, ஆம் அவன் நிறைய குடிப்பான்.சாப்பிட நேரமில்லை அதான் இப்பிடி என்பான். நீண்ட நேரம் வேலையிருந்தால் எக்ஸ்ட்ரா இரண்டு டின் எடுத்துக் கொள்வான்.

சிகிச்சை :

சிகிச்சை :

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. அவனை பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். அவன் உயிர் பிழைத்ததே எங்களுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. வயர்கள் அங்கும் இங்கும் என்று சுற்றப்பட்டு சொருகப்பட்டு மருத்துவமனை அறையில் கிடந்தான். அருகில் சென்றால் முன் தலையில் பாதியைக் காணவில்லை. முதலில் எங்களுக்கு எதுவும் பிடிபட வில்லை, சிகிச்சையை பாதியில் விட்டுவிட்டீர்களா? ஏதோ வித்யாசமாக இருக்கிறதே ஏன் அவனுக்கு அப்படி இருக்கிறது? தானாக சரியாகிடுமா? என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆஸ்டின் மயக்கத்திலேயே இருந்தான். இனி எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது ஆஸ்டின் பிழைப்பானா? எங்கள் குழந்தையின் கதி இவற்றையெல்லாம் நினைத்து ஆஸ்டீனின் பெற்றோர் அழுது கொண்டிருந்தனர். இதுவரை நான் சந்தித்திராத வலியாக அமைந்திருந்தது அது.

விட்டுத்தர மாட்டேன் :

விட்டுத்தர மாட்டேன் :

அதற்கு அடுத்த நாள் அவனுக்கு மூளையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே ஆஸ்டீன் எழுந்து வா .. ஆஸ்டீன் வந்து விட வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவன் பெயரை மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். எந்த காரணத்திற்காகவும் ஆஸ்டினை என்னைவிட்டு போக விடமாட்டேன். விட்டுத்தரக்கூடாது. எங்கள் காதலை நிரூபிக்க வேண்டும். அவன் எப்படியிருந்தாலும் அவன் பக்கம், அவனுக்கு துணையாக நான் நிற்பேன். அவனை எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

Image Courtesy

டெலிவரி :

டெலிவரி :

இரண்டு வாரங்கள் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்தான். ஓரளவுக்கு தெறியிருந்தான். அப்போது எனக்கு டெலிவரி தேதி நெருங்கிவிட்டது. அது ஒரு எமோஷனலான நேரம் என்றே சொல்லலாம். மனதளவில் நான் மிகவும் நொறுங்கிப் போயிருந்த சமயம் டெலிவரிக்கு எப்படி என்னால் ஒத்துழைப்பு கொடுக்க முடியும் என்றே சந்தேகமாய் இருந்தது.

டெலிவரியின் போது ஆஸ்டீன் எனக்கு பக்கபலமாக உடனிருக்க வேண்டும் என்று விரும்பினேன் குழந்தையின் தொப்புள் கொடியை நான் தான் கட் செய்ய வேண்டும் என்று ஆஸ்டீன் அடிக்கடி கூறுவான். ஆனால் ஆஸ்டீன் தான் மருத்துவமனையில் கிடக்கிறானே .

மகன் பிறந்திருக்கிறான் :

மகன் பிறந்திருக்கிறான் :

கிட்டதட்ட ஒருவாரம் நான் மருத்துவமனையில் இருந்தேன். குழந்தை பிறந்த போது ஆஸ்டீனுக்கு விழிப்பு வந்து விட்டது. மருத்துவமனையில் இருந்த ஒரு வார காலமும் நான் ஆஸ்டீனை சந்திக்க வில்லை ஆஸ்டினைப் போலவே பிறந்ததிருந்த என் மகனைப் பார்த்து ஆறுதலடைந்தேன். குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆன பின்பு குழந்தையை அத்தையிடம் விட்டுவிட்டு நான் ஆஸ்டினை பார்க்க ஓடினேன்.

எனக்குத் தெரியும், ஆஸ்டீன் எனக்காக காத்திருப்பான்.அவனிடம் சொல்லவேண்டும் உன்னைப் போலவே நமக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு நீ தேவை, தந்தையாய் நீ செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

 திரும்பிய சந்தோஷம் :

திரும்பிய சந்தோஷம் :

தொடர்ந்து பல்வேறு மருத்துவ சிகிச்சைகள். கிட்டத்தட்ட குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கழித்து தான் ஆஸ்டீன் தன்னுடைய குழந்தையை முதன் முதலாக சந்திக்கிறான். என் மகிழ்ச்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆஸ்டீன் எனக்கு கிடைத்துவிட்டான்.

குழந்தை கிடைத்த நேரத்தில் ஆஸ்டீனும் ஒரு குழந்தையாய் மாறியதைத் தவிர வேறெந்த குறையும் எனக்கு இல்லை முதன் முதலாக சந்திக்கிறவர்கள் ஆஸ்டீனின் தலையைப் பார்த்து முகத்தை சுழிப்பார்கள், அல்லது கத்துவார்கள் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஏனென்றால் அந்த கூட்டிற்கு உள்ளேயிருக்கும் ஆன்மாவை நான் காதலிக்கிறேன் கூடு எப்படியிருந்தால் என்ன?

Image Courtesy

அன்றாட வேலை :

அன்றாட வேலை :

தினமும் காலை குழந்தையை பார்த்துக் கொள்வது போல ஆஸ்டினையும் கவனித்துக் கொள்கிறேன். அவனுக்குத் தேவையான உணவுகளை தனியாக தயாரிக்கிறேன்.

பிசிக்கல் தெரபி,ஸ்பீச் தெரபி,ஆக்குபேஷனல் தெரபி எல்லாவற்றை கொடுக்கிறேன். அதோடு கழிவறைக்கு கூட்டிச் செல்வது, உணவு ஊட்டுவது, அவனுக்கு உடை மாற்றிவிடுவது என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்கிறேன். அவ்வப்போது நடைப்பயிற்றிக்கும் கூட்டிச் செல்கிறேன். அவனது ஒவ்வொரு முயற்சிகளிலும் நான் உடனிருக்கிறேன்.

Image Courtesy

காதல் எல்லையில்லாதது :

காதல் எல்லையில்லாதது :

கடினமானது தான். ஒரு சேர குழந்தையையும் ஆஸ்டீனையும் பார்த்துக் கொள்வது எனக்கு சிரமமாகத்தான் இருக்கிறது ஆனால் இது பிடித்திருக்கிறது என் காதலனை என்னைத் தவிர வேறு யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது என்று முழுதாக நம்புகிறேன். விரைவில் ஆஸ்டீன் முழுவதும் குணமடைவான்,எங்கள் சந்தோஷம் திரும்பும். காதல் எல்லையில்லாதது தானே . காதிலித்துக் கொண்டேயிருப்போம்..

உற்சாகம் தெரிக்கிறது ப்ரைனாவின் வார்த்தைகளில்

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Emotional Real life love story of pregnant woman

Emotional Real life love story of pregnant woman
Desktop Bottom Promotion