செக்ஸில் பெண்கள் உச்சம் அடைய 7 வழிகள் இருக்கிறதாம். அதில் உங்களுக்கு எத்தனை தெரியும்?

Posted By: Admin
Subscribe to Boldsky

செக்ஸ் என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. ஆனால், மனிதர்கள் மத்தியில் இது மன அழுத்தம், உறவுகளின் இணைப்பு, ஆரோக்கியம் என பலவற்றை வலுப்படுத்தும், இலகுவாக உணர செய்யும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது.

உடலுறவில் ஆண், பெண் காணும் இன்பங்கள் வேறுப்பட்டே இருக்கும். அதிலும், பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைய தாமதம் ஆகும் என்றும் கூறுவர். அனால், பெண்கள் இந்த இன்பத்தை அடைய 7 வழிகள் இருப்பதாக செக்ஸ் எக்ஸ்பர்ட்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கிளைடோரல்: இந்த வகை இன்பம் பெரும்பாலான பெண்கள் அறிந்தது தான். பெண்ணுறுப்பில் ஒரு பகுதி இது. இது சிறுநீர் வெளிப்படும் துவாரத்திற்கு மேல் அமைதிருக்கும். இந்த இடத்தை தீண்டுவதால் பெண்கள் சில நிமிடங்களில் உச்சக்கட்ட இன்பம் அடைய வாய்ப்புகள் இருக்கின்றன.

#2

#2

ஜி - ஸ்பாட்: இப்படி ஒன்று இருக்கிறதா? இல்லையா? என ஒருபுறம் விவாதங்கள் நடந்துக் கொண்டிருந்தாலும். முப்பது சதவீத பெண்கள் இந்த ஜி-ஸ்பாட் தூண்டுதல் பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.

இது பெண்ணுறுப்பில் இருக்கும் உச்சம் தூண்டும் தசை. வெளிப்புற பெண்ணுறுப்பில் இருந்து 2-3 இன்ச் உள்ளே இது இருக்கும்.

#3

#3

எ - ஸ்பாட்: எ - ஸ்பாட் என்பது 4-5 இன்ச் உள்ளே இருக்கும் பகுதி. இது ஜிஸ்பாட்டுக்கு பின்னாடி அமைந்திருக்கும். இது பெண்ணை இரண்டாவது முறையாக இன்பம் பெற உதவும்.

#4

#4

கலவை: கிளைடோரல் மற்றும் ஜி-ஸ்பாட் இரண்டும் கலந்தது தான் இந்த கலவை வகை. இதன் மூலமாக ஒரு பெண்ணை 15 நிமிடங்கள் வரை இன்பத்தை உணர வைக்க முடியுமாம்.

#5

#5

ஸ்குயிரிட் (Squirt): எல்லா பெண்களாலும் இதை எட்ட முடியாது. ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது போல, பெண்களுக்கு நீர் திரவம் போன்றது வெளிப்படும். இது சிறுநீர் பாதை வழியாக வெளியேறும். இது எல்லா பெண்களுக்கும் வராது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#6

#6

கோர்கேஸ்ம் (Coregasm): இது பெண்கள் வயிறு போன்ற பகுதிகளுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு. இது வயிறு முதல் பெண்ணுறுப்பு வரை உணர்ச்சியை தூண்டும். இதுவும் எல்லா பெண்கள் மத்தியில் காணப்படுவதில்லை.

#7

#7

மார்பகம்: மார்பக பகுதிகளை தீண்டுவதால் சில பெண்களுக்கு கிளைடோரல் வகை இன்பம் கிடைக்கிறது. இது மார்பக காம்பு பகுதியை தீண்டுவதால் மட்டுமே பெற முடியும் என செக்ஸ் எக்ஸ்பேர்ட்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு!

குறிப்பு!

இந்த ஏழு வகை உச்சக்கட்ட உணர்வுகளும் எல்லா பெண்கள் மத்தியிலும் ஏற்படும் என கூற முடியாது. அவரவர் உடல்நிலை மற்றும் இயற்கையாகவே ஒருசிலது ஒரு சில பெண்கள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did You Know? There are Seven Types Of Female Orgasms!

Did You Know? There are Seven Types Of Female Orgasms!