ஆவூன்னா கெமிஸ்ட்ரி-னு சொல்றாங்களே, அதுக்கு இது தான் காரணமாம்!

Posted By:
Subscribe to Boldsky

விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இருந்து தான் இந்த வார்த்தை பிரபலம் அடைந்தது. ஆவூன்னா செம கெமிஸ்ட்ரி, சான்சே இல்ல... என கூற ஆரம்பித்துவிடுவார்கள்.

தமிழகத்தில், ஒரு காதல் ஜோடியை பார்த்து கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை பயன்படுத்தாத கல்லூரி முடித்த நபர்களை பார்க்கவே முடியாது, எனும் அளவிற்கு இந்த வார்த்தையை ஜோடி நம்பர் 1 பிரபலமாக்கியது.

அப்படி கெமிஸ்ட்ரி னா என்ன? வேதியியல் பாடத்தில் இருந்த இந்த வார்த்தையை ஏன் காதல் உறவில் கொண்டு வந்து திணிக்கின்றனர் என்ற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கலாம். காதலில் கெமிஸ்ட்ரியை உட்புகுத்தியதற்கு காரணங்கள் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

ஆண், பெண்ணுக்கு மத்தியில் ஒரு உறவில் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று கூறுவதற்கு காரணம், நமது மூளையின் இரசாயன மாற்றங்கள். இந்த கெமிக்கல் ரியாக்ஷன்கள் கட்டுப்படுத்த முடியாதவை.

ஒருவர் மீதி நாம் அதிக ஈர்ப்பு கொள்வதில் இவை பெரிய பங்குவகிக்கின்றன. இதனால் தான் கெமிஸ்ட்ரி என்ற வார்த்தை பயன்பாட்டில் வந்தது.

உண்மை #2

உண்மை #2

இவை எல்லாம் தான் சிறந்த கெமிஸ்ட்ரியின் அறிகுறிகள் என குறிப்பிட்டு எதையும் கூற முடியாது.

இது ஒவ்வொருவர் மத்தியிலும் வெவ்வேறு வகையில் வெளிப்படலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஈர்ப்பு வெளிப்படலாம்.

உண்மை #3

உண்மை #3

கெமிஸ்ட்ரி என்பது மன ரீதியானது, உடல் ரீதியானது, உணர்வு ரீதியானது என பிரிக்க எல்லாம் முடியாது.

இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மூன்றாகவும் இருக்கலாம். இதை வகைப்பிரித்து கூற முடியாது.

உண்மை #4

உண்மை #4

சற்று சிந்தனை செய்து பாருங்கள். நீங்கள் ஒருவரை யதேச்சையாக பார்த்திருப்பீர்கள். மீண்டும் அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். இது உளவியல் ரீதியான காரணம். இதுவே, காலப்போக்கில் ஒருவர் மீது ஈர்ப்பு அதிகரிக்க, அவர், நம் மீது ஈர்ப்பு கொள்ள, நெருக்கம் வளர காரணியாகலாம்.

உண்மை #5

உண்மை #5

ஒரு நபரை பார்த்ததும், ஒருவிதமான படபடப்பு, வியர்த்து கொட்டுவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்றவை உடல் ரீதியான காரணங்கள்.

இதில், பலவிதமான உற்சாகம் வெளிப்படலாம். இது அவருடன் உடலுறவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கலாம்.

உண்மை #7

உண்மை #7

சிலரை பார்க்கும் போது நல்ல உணர்வு வெளிப்படும். இதயம் அதிகமாக பாசிட்டிவாக எண்ணும்.

அவருடன் காலத்தை கழித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றும். இவை எல்லாம் உணர்வு ரீதியான காரணங்கள்.

உண்மை #7

உண்மை #7

தவறான உறவு இல்லை என்ற வரையில் இந்த வகையில் நாம் கெமிஸ்ட்ரி என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். வேறு சில உறவுகளுக்கு இது ஒத்துவராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Exactly Is 'Chemistry'?

What Exactly Is 'Chemistry'? read here in tamil.
Story first published: Wednesday, August 31, 2016, 15:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter