பெண்கள் டேட்டிங் செய்ய விரும்பாத 7 வகையான ஆண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

டேட்டிங் என்றால் உடனே காதலுக்கு முன்னே நெருங்கி பழகும் சமாச்சாரமாக பலர் கருதுகின்றனர். ஆனால், டேட்டிங் என்பது திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க போவது போல, காதலுக்கு முன் பழகி பார்ப்பது. இவர்கள் நமக்கு செட் ஆவார்களா? ஆகமாட்டர்களா? என்பதை அறிவது.

Types Of Men Who Aren't Worth Dating

எளிமையாக சொல்ல வேண்டுமானால், "வாங்க பழகி பாக்கலாம்..." என சிவாஜியில் ரஜினி ஸ்ரேயாவை அழைப்பது போன்றது தான் டேட்டிங். டேட்டிங் செய்ய விருப்பமாக இருந்தாலும், ஆண்களில் இந்த ஏழு வகையானவர்களை டேட் செய்ய பெண்களுக்கு விருப்பம் இருப்பதில்லையாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகை #1

வகை #1

"நான் இதுவரைக்கும் யார பார்த்தும் கல்யாணம் பண்ணிக்கலாம்-னு யோசிச்சதே இல்ல. உன்ன பாக்குற வைக்கும்.." என ஸ்டேட்மென்ட் கொடுக்கும் டயலாக் ஆண்களை பெண்கள் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் எல்லாரிடமும் இப்படி தான் கூறுவார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

வகை #2

வகை #2

நான் மிகவும் ஜோவியலாக பழகக் கூடிய நபர், சோசியல் பர்சன் என்ற பெயரில், உடன் இருக்கும் போதெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் டேட்டிங் போக பெண்கள் விரும்பிவதில்லையாம்.

வகை #3

வகை #3

எதற்கெடுத்தாலும் ஏதோ ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பதில் எழுதுவது போல மிகவும் யோசித்து, தயங்கி தயங்கி பேசும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை.

வகை #4

வகை #4

டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆண் மிக ரிச்சாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசைப் படுவதில்லையாம். டேட்டிங் என்பது பார்த்ததும் பழகி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் நபராக இருப்பது என்கின்றனர் பெண்கள்.

வகை #5

வகை #5

பணிவான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதற்காக எல்லாவற்றுக்கும் அடங்கி போகும் ஆண்களை பெண்கள் நேசிப்பதில்லை. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும், ஆண் ஆணாக நடந்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

வகை #6

வகை #6

தான் இதையெல்லாம் சாதித்துள்ளேன், நான் இதை எல்லாம் வென்றுள்ளேன் என தற்பெருமை அடிக்கும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் அதிக ஈகோ காண்பிப்பார்கள். பெண்களை தங்களுக்கு கீழ் இருக்கும்படி பார்ப்பார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.

வகை #7

வகை #7

எல்லாவற்றிலும் கணக்கு பார்த்து ஒரு ப்ரோக்ராம் செய்த கணினி போல வாழ்க்கை நடத்தும் ஆண்களை டேட் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பணத்தை மட்டும் தான் பார்ப்பார்கள், சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Types Of Men Who Aren't Worth Dating

Types Of Men Who Aren't Worth Dating
Story first published: Monday, November 28, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter