Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
தாம்பத்திய உறவை புதிப்பிக்க உதவும் அந்த மூன்று வழிகள்!
எப்போதுமே திருமணமான புதியதில் இருந்த மாதிரியே வாழ்நாள் முழுக்கு தாம்பத்திய உறவு இருக்காது. மனதளவிலான மற்றும் உடல் ரீதியான முதிர்ச்சி இதற்கு பல சமயங்களில் முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். ஆனால், அதற்காக தாம்பத்தியமே இல்லாமல் யாரும் இருந்துவிடுவதில்லை. ஆனால், முற்றிலுமாக குறைந்துவிடும் போது தான், சின்ன சின்ன சண்டைகள் கூட பெரிய பூகம்பம் போல வெடிக்க ஆரம்பிக்கும்.
புத்துணர்ச்சி என்பது அனைவருக்கும் தேவையானது. உங்கள் உறவில் லேசாக அலுப்பு ஏற்படுவது போல தோன்றினால் கூட எங்காவது உங்கள் துணையுடன் ஓர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். இந்த பயணம் உங்கள் வாழ்வை புதுப்பிக்கும் ஓர் சந்தாவாக இருக்கும். இது மட்டுமின்றி வேறு சில வழிமுறைகளினாலும் கூட தாம்பத்திய உறவில் புத்துணர்ச்சி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன...

ரெட் ஒயின்
உங்கள் துணையுடன் டின்னர் ஏற்பாடு செய்யும் போது ரெட் ஒயினை மறந்துவிட வேண்டாம். பாலியல் பத்திரிக்கை இதழிலேயே ரெட் ஒயின் பெண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒயின்
ரெட் ஒயினில் அதிகமாக இருக்கும் பாலிபினால்கள் தான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது இரத்த நாளங்களை இலகுவாக்கி, இரத்த ஓட்டதையும் சீராக்குகின்றன.

தீண்டுதலின் முக்கியத்துவம்
பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க செய்ய சரியான முறை தீண்டுதல் தான். விரல் நுணியால் தீண்டுதல் தான் பெரும்பாலும் கிளர்ச்சியடைய உதவுகிறது என பாலியில் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தீண்டுதலின் முக்கியத்துவம்
தீண்டுதலின் போது Oxycontin வெளிப்படுகிறது. இது பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க செய்கிறது என ஓர் ஆய்வில் சான் டியாகோவை சேர்ந்த மருத்துவர் இர்வின் கோல்ட்ஸ்டீன் கூறியுள்ளார்.

துணிகரமான பயணம்
உங்கள் இல்லற தாம்பத்திய வாழ்க்கை அலுப்பு தட்டுவது போல் இருக்கிறது என்ற எண்ணம் பிறக்கும் போதே, உங்கள் துணையுடன் எங்காவது சுவாரஸ்யமான பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். பீச் மணலில் கிலோமீட்டர் கணக்கில் கைகோர்த்து நடப்பது, மலை பயணம் போன்றவை எல்லாம் உறவில் புத்துணர்ச்சி ஏற்பட உதவும்.

துணிகரமான பயணம்
உறவில் புத்துணர்ச்சி ஏற்படுவதே கண்டிப்பாக உங்கள் தாம்பத்திய உறவும் சிறக்க உதவும். எப்போதும் ஒரே மாதிரியான சுழற்சி முறை வாழ்வில் இருந்து விடுப்பட்டு, ஓர் மாற்றத்தை காணுங்கள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தமிழகத்துக்கே ஓர் மாற்றம் தேவைப்படும் போது, நமது வாழ்க்கைக்கு தேவைப்படாதா என்ன?



Click it and Unblock the Notifications