Latest Updates
-
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
முடிஞ்சா இந்த குறிப்பிட்ட 7 விஷயத்துல இருந்து உங்க ஆள மாத்திக் காண்பிங்க பாப்போம்!
வேலை விட்டு வீடு திரும்பியதும் கார்டூன் பார்ப்பது, சேலை, அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பது, வினோதமான முக பாவனைகள் வெளிப்படுத்துவது, கலாச்சார ரீதியான, மத, ஆன்மீக ரீதியான எண்ணங்களில் என சிலவற்றில் இருந்து உங்களால் உங்கள் துணையிடம் மாற்றம் கொண்டுவர முடியுமா?
சொட்டை, தாடி, முழு ஷேவ் யார் மிகவும் செக்ஸியானவர்கள்? ஆய்வில் பெண்கள் கருத்து!
முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிறந்ததில் இருந்து அவர்கள் மூளையிலும், இரத்தத்திலும் கலந்து, புதைந்து, நகமும், சதையுமாய் பிணைந்து போன சில பழக்கவழக்கங்களில் ஒரு நபரிடம் மாற்றம் கொண்டு வருவது மிகவும் கடினமாம். சரி, கணவன், மனைவியாக வாழும் உங்களால் இந்த மாற்றங்களை உண்டாக்க முடியுமா கூறுங்கள்....
புருஷன்கிட்டே இந்த 12 குவாலிட்டி கண்டிப்பா இருக்கணும்னு பொண்ணுக எதிர்பாக்குறாங்கப்பு!

எண்ணங்கள் / அடம்
உடை தேர்வு செய்வதில் இருந்து, அந்த உடையை எப்படி அணிவது என சிலவற்றை இப்படி தான் செய்ய வேண்டும், இப்படி செய்யக் கூடாது என்பதை உணர்த்தி புரிய வைத்து, அதை பின்பற்ற வைப்பது கடினம் தான். ஏனெனில், சிலர் ஸ்டைல் அல்லது இது தான் அழகாக தெரிகிறது என மாற்றிக் கொள்ள மறுப்பார்கள்.

எண்ணங்கள் / அடம்
இன்னும் 80-களின் ரஜினி ஸ்டைலில் பெல் பாட்டம் பேன்ட் அணிபவர்களை கூட நீங்கள் காணலாம். இது இப்போது இந்த காலக்கட்டத்திற்கு உகந்தது அல்ல டிரென்ட் மாறிவிட்டது என என்ன கூறினாலும், அவர்கள் மாற மாட்டார்கள்.

பொழுதுபோக்கு
குழந்தை பெற்று எடுத்தவர்கள் கூட கார்டூன், குத்து சண்டை போன்றவற்றை தொடர்ந்து நேரம் தவறாமல் பார்ப்பது. முதல் நாள், முதல் ஷோ அடித்து பிடித்து தனக்கு விருப்பமான நடிகர்களின் படங்களை பார்ப்பது போன்ற சில பொழுதுப்போக்கு விஷயங்களில் இருந்து உங்கள் துணையை மாற்றுவது கடினம்.

அடிமையாகியிருப்பது
மது, புகை என்று மட்டுமில்லை. உணவு, படம் பார்ப்பது, சோம்பேறித்தனம், சைட் அடிப்பது, புடவை வாங்குவது, சீரியல் பார்ப்பது என சில விஷயங்களில் ஆண், பெண்கள் அடிமையாக இருப்பார்கள். இவற்றில் இருந்து அவர்களை மாற்றுவது என்பது இயலாத காரியம்.

மதம் சார்ந்த எண்ணங்கள்
சிலர் என்னதான் அறிவியல் ரீதியான உண்மைகளை கூறினாலும், ஆன்மிகம், மதம் சார்ந்த மூடநம்பிக்க எண்ணங்களில் இருந்து அவர்களை மாற்றுவது என்பது முடியாத ஒன்று.

உடலுறவு
இதுவும் ஒருவகையான அடிமையாதல் தான். சிலரால் உடலுறவில் ஈடுபடாமல் இருக்கவே முடியாது. கெஞ்சியாவது ஈடுபட வேண்டும் என விரும்புவார்கள். இப்படிப்பட்டவர்களை இந்த எண்ணத்தில் இருந்து வெளிக் கொண்டுவருவது சற்று கடினமே!

கலாச்சாரம்
கலாச்சாரம் என்பது புத்தியில், இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. வேலை காரணமாக இடம் பெயர்ந்து போய்விட்டால் சிலவற்றை மாற்றிக் கொள்ள தான் வேண்டும். ஆனால், படித்தவர்களுக்கே அவரவர் கலாச்சார வகையில் சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்வது சிரமமாக தான் இருக்கிறது.

பாவனை
சிலர் சிரிக்கும் போது, ஆச்சரியப்படும் போது, அழும் போது அவர்களிடம் இருந்து விசித்திரமான பாவனைகள் வெளிப்படும். வீட்டில் இன்றி பலர் மத்தியில் வெளியில் இவ்வாறு செய்ய வேண்டாம் என நாம் எடுத்துக் கூறலாம், ஆனால் மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்கள்.

பாவனை
அரங்கம் அதிரும் அளவு சிரிப்பது, யாராவது பேசுவதை கேட்கும் போது வினோதமான முக பாவனை வெளிப்படுத்துவது போன்றவற்றை அவர்களால் கட்டுப்படுத்தக் கூட இயலாது என்பது தான் உண்மை. இதற்கு மரபணு கூட காரணியாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications