முத்தம் என்ற பெயரில் உங்க துணையை இனிமேல் கண்ட இடத்தில் கடிக்காதீங்க!

Posted By:
Subscribe to Boldsky

கொஞ்சி விளையாடும் போது, ஃபோர் ப்ளே மற்றும் உடலுறவில் ஈடுபடும் போது செல்லமாக கடிக்கிறேன் என தம்பதிகள் லவ் பைட் செய்வார்கள். ஆனால், இது ஒருசில உடல் நிலையில் இருப்பவர்களது உடலில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

உண்மையில் லவ் பைட் செய்வதால் சருமம் சிவந்து போகும். சில சமயங்களில் சருமம் இப்படி சிவந்து போகும் போது விஷத்தன்மையை ஏற்படுத்த கூடும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இது குறித்த இந்த 6 விஷயங்கள் நீங்கள் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காயங்கள்!

காயங்கள்!

லவ் பைட் எனப்படும் இதனால் சருமத்தில் சிவப்பாக உண்டாவதை ஆங்கிலத்தில் Hickeys என குறிப்பிடுகின்றனர். ஹிக்கீஸ் எனப்படுவதை உண்மையில் காயம் என்றும் கூறலாம். சில சமயங்களில் இது விஷதன்மையாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.

இரும்புச்சத்து குறைபாடு!

இரும்புச்சத்து குறைபாடு!

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு லவ் பைட் என்ற பெயரில் கடிப்பதால் எளிதாக ஹிக்கீஸ் எனப்படும் சருமம் சிவந்து போதல் எளிதாக உண்டாகும். எனவே கொஞ்சும் போதோ, உடலுறவில் ஈடுபடும் போதோ சில பாகத்தில் கடிப்பதை தவிர்க்கவும்.

ஹெர்பெஸ் பரவலாம்!

ஹெர்பெஸ் பரவலாம்!

ஹிக்கீஸ் மூலமாக ஹெர்பெஸ் எனப்படும் பால்வினை நோய் தொற்று பரவும் அபாயங்கள் அதிகம் இருக்கின்றன.

எனவே, இந்த தொற்று உள்ள நபர்கள் தயவு செய்து இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்கள் துணைக்கும் இந்த நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

மருந்துகள்!

மருந்துகள்!

இதற்கு மருந்துகள் என எதுவும் இல்லை. சிறியளவில் தோன்றினால் உடனே மறைந்துவிடும். சில சமயங்களில் ஒருசில நாட்கள் கூட தொடர்ந்து இருக்கும். மிக அரிதாக இது விஷத்தன்மையாக மாறும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

தழும்புகள்!

தழும்புகள்!

இந்த ஹிக்கீஸ் சில சமயங்களில் தழும்புகளாகவும் மாறும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்ட்ரோக்!

ஸ்ட்ரோக்!

இந்த ஹிக்கீஸ் மூலம் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. நியூசிலாந்தில் ஒரு இளைஞர் இந்த ஹிக்கீஸ் மூலம் ஸ்ட்ரோக் உண்டாகி சில மணிகளில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Didn't Know About Love Bites

Are Hickeys Dangerous? 6 Things You Didn't Know About Love Bites, Because These Bruises Leave Scars
Please Wait while comments are loading...
Subscribe Newsletter