Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
ஆன்லைன் காதலிக்காக ஏர்போர்ட்டில் 10 நாட்கள் சோறு, தண்ணி இல்லாமல் காத்திருந்த காதலன்!
பார்காமலே காதல், கடிதங்கள் மூலமாக காதல், தொலைப்பேசி அழைப்பு காதல், இணையத்தின் மூலமாக காதல் என தமிழ் சினிமாவில் நாம் நிறையவே பார்த்துவிட்டோம். தற்போது பார்த்து, பேசி, பழகியவர்களும் பலர் ஆன்லைன் மூலமாக சமூக தளங்கள் வாயிலாக தான் தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், நேரில் பார்க்காமல் உலகின் ஒரு மூலையில் இருந்து, வேறு மூலையில் இருக்கும் நபரை ஆன்லைன் மூலம் காதலிப்பவர்களும் இருக்கின்றனர். இப்படி மலர்ந்த ஒரு காதலினால் நெதர்லாந்து ஆண் ஒருவர் சீன இளம் பெண்ணை காண பறந்து சென்று ஏமாற்றம் அடைந்து திரும்பியுள்ளார்.

அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக்
அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக் (41) நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆண். நீண்ட நாட்களாக ஆன்லைன்-ல் காதலித்து வந்த தன் சீன காதலியை காண விருப்பம் தெரிவித்து விமானத்தில் பறந்து சென்றுள்ளார் அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக்.

கம்பி நீட்டிய காதலி!
முதன் முதலாக தனது சீனத்து காதலியை நேரில் காண ஆசை, ஆசையாய் பறந்து வந்த அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக்-க்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இவர் காதலித்த ஷாங் எனும் சீன பெண் இவரை காண வரவே இல்லை.

ஜோக் என நினைத்த ஷாங்
அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக் விமான டிக்கெட் எல்லாம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், ஷாங் அலெக்சாண்டர் ஜோக்காக சொல்கிறார் வரமாட்டார் என நினைத்துக் கொண்டு. அவர் வருகிறேன் என்று கூறிய நாளில் வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.

பிளாஸ்டிக் சர்ஜரி!
அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக் வந்தடைந்த அந்த நாளில், ஷாங் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வதற்காக பக்கத்து நகரத்திற்கு சென்றுவிட்டார். சிகிச்சையில் இருந்ததால், ஷாங் மொபைலை பார்க்கவே இல்லை.

சோறு, தண்ணி இல்லாமல் காத்திருந்த க்ரிக்!
இது எதுவும் தெரியாமல், தன் சீனத்து காதலி தன்னை பார்க்க வருவாள் என ஏர்போர்ட்டிலேயே காத்திருந்தார் க்ரிக். ஏறத்தாழ 10 நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்ததால், உடல் நலிந்து காணப்பட்டுள்ளார் க்ரிக்.

மருத்துவமனையில் சேர்த்தனர்
யார், எவர் என அறியாத நிலையில், உடல்நலம் குன்றி இருந்த க்ரிக்கை விமான நிலையத்தில் இருந்தவர்கள் அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

சோகம் என்னவெனில்...
நெதர்லாந்தில் இருந்து சீனாவிற்கு வந்து விமான நிலையத்தில் 10 நாட்கள் தவமாய் தவமிருந்து, மருத்துவமனை வரை சென்ற அலெக்சாண்டர் பீட்டர் க்ரிக்கால் கடைசி வரை அவரது காதலியை பார்க்க முடியாமல் போய்விட்டது.
இவர் நாடு திரும்பிய பிறகு தான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் க்ரிக்-ன் காதலி ஷாங். அதன் பிறகு தான் செய்திகள் யாவும் இவருக்கு அறியவந்துள்ளது.

ஊடகங்களுக்கு பேட்டி!
இதன் பிறகு க்ரிக்-ன் ஆன்லைன் காதலி ஷாங் ஊடகங்களுக்கு கூறியது, " நான் சிகிச்சைக்கு சென்றதால் தான் அவரை காண முடியவில்லை. நான் அவருடனான காதல் உறவில் தொடர்ந்து நீடிக்கவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
