பார்பி போல பர்ஃபெக்ட் ஷேப் வேண்டும் என கோடிகளை வாரியிறைக்கும் ரொமான்ஸ் ஜோடி!

Posted By:
Subscribe to Boldsky

காதலுக்கு கண்ணில்லை, ஊமை காதல், பார்க்காமலே காதல், காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்டது, தபால், காயின் பூத் என பலவகை காதல்கள் நாம் பார்த்திருப்போம். ஆனால், இது அதுக்கும் மேல லெவல்.

பொதுவாக திரையில் சில காதல் ஜோடிகளை பார்க்கும் போது நமக்கும் இப்படி ஒரு காதல் ஏற்பட்டால் செம்மையாக இருக்கும் என நாம் எண்ணுவோம்.

அப்படி தான் இவர்களும், காமிக், பொம்மைகளில் வரும் கதாபாத்திர காதலான பார்பி - கென் போலவே தாங்களும் இருக்க வேண்டும் என கோடிகளை குவித்து பர்ஃபெக்ட் ஷேப் கொண்டு வர இருவர் முயற்சித்து வருகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளாஸ்டிக் சர்ஜரி அடிக்ட்!

பிளாஸ்டிக் சர்ஜரி அடிக்ட்!

பிக்சி, ஜஸ்டின் இருவருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வதில் பெரிய ஆர்வம் அல்லது அடிக்ட் என கூறலாம். அந்த அளவிற்கு இருவரும் எண்ணிக்கைகளை தாண்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வருகின்றனர்.

Image Courtesy

பிக்சி, ஜஸ்டின்!

பிக்சி, ஜஸ்டின்!

பிக்சி எனும் இந்த பெண் மாடல் பார்பி போல ஆகவேண்டும் என்பதற்காக 17 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதில் தனது ஆறு விலா எலும்புகளை அகற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு முறை மார்பகங்களையும், இதழ்களையும் பெரிதாக்கியுள்ளார்.

ஜஸ்டின் 340 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஐந்து முறை மூக்கை மட்டுமே சர்ஜரி செய்துள்ளார். இது போல, தோள், பைசப் போன்றவற்றுக்கும் சர்ஜரிகள் செய்துள்ளார்.

Image Courtesy

விவாகரத்து!

விவாகரத்து!

பிக்சி ஜஸ்டினை திருமணம் செய்துக் கொள்வதற்காக தனது கணவனை திருமணம் செய்துவிட்டு வந்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி மீது இருந்த ஆர்வம் தான் இதற்கான காரணம்.

Image Courtesy

பர்ஃபெக்ட் ஷேப்!

பர்ஃபெக்ட் ஷேப்!

நிஜமான பார்பி - கென் உடல் வடிவம் பெரும் வரை இந்த பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்வதை நிறுத்துவதாக இல்லை என்கின்றனர் இந்த வினோதமான ஜோடி!

Image Courtesy

பிரபலம்!

பிரபலம்!

இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாலேயே இவர்கள் மிக பிரபலமாகிவிட்டனர். ஆனாலும், இத்தனை முறைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது இவர்களது ஆரோக்கியத்தை வெகுவாக கெடுக்கும்.

Image Courtesy

ஆரோக்கியம்?!?!?!

ஆரோக்கியம்?!?!?!

இது இவர்களுக்கும் தெரிந்திருக்கும். மருத்துவர்கள் இதை கூறாமல் இந்த சர்ஜரிகளை செய்யமாட்டார்கள். என்னவானாலும் சரி, தங்கள் கனவு நிஜமாக வேண்டும் என்ற பாதையில் இவர்கள் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love Couple Who Spent Crores of Money to Become Perfect Shape of Barbie and Ken

Love Couple Who Spent Crores of Money to Become Perfect Shape of Barbie and Ken
Story first published: Wednesday, October 5, 2016, 17:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter