திருமணமான புதிதில் நடக்கும் சில வினோதமான செயல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் என்பது நல்லறமாக நிலைக்க வேண்டும், பயணம் பூங்காவனமாக மலர வேண்டும் என்று தான் ஆசை. போர்களத்தில் நின்றுக் கொண்டு சமாதானம் பேசுவதற்கு எதிர்பார்ப்பது நியாயமா? ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை சமாதான பேச்சு நிகழுமே தவிர 365 நாட்களும் எதிர்பார்ப்பது தவறு.

ஜில், ஜங், ஜக் மட்டுமில்ல, மொத்தம் பத்து வகையான பொண்ணுங்க இருக்காங்களாம்!!!

இதுவரை காவல் நிலையத்தில் மாமியார் கொடுமை என்று தான் 99.99% புகார்கள் வந்துள்ளதே தவிர, மாமனார் கொடுமை என்று ஒரு புகாரும் வந்தது கிடையாது. உங்கள் வீட்டிலேயே கூட நாத்தனார் தொல்லை என்று வெடிப்பார்களே தவிர கொழுந்தனார் தொல்லை என்று யாரும் கேள்விப்பட்டது கிடையாது.

பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!!

இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி, கடிச்சாலும் மனைவி, மிதிச்சாலும் பொண்டாட்டி என்று நீங்கள் தான் இல்வாழ்க்கையை இன்பமாக நினைத்து, குறைந்தது கனவாவது கண்டு கழிக்க வேண்டும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்னடா நேத்து ஜமாய்ச்சியா?

என்னடா நேத்து ஜமாய்ச்சியா?

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கூட நண்பர்கள், தோழிகள், உடன் பணிபுரிவோர் என அனைவரும் முதலிரவு கழித்து மறுநாள் அதிகமாக கேட்கும் கேள்வி இதுதான். உடலுறவு என்பது எல்லா தம்பதியினர் மத்தியிலும் நடக்கும் பொதுவான செயல் இதை பற்றி கேள்வி கேட்பது நாகரீகமற்ற செயலாக தான் இருந்து வருகிறது இன்றளவும்.

விசேஷம் ஏதாச்சும் உண்டா?

விசேஷம் ஏதாச்சும் உண்டா?

மனைவி முழுகாமல் இருக்கிறாரா? என்பதை தான் இப்படி கேட்பார்கள். இது ஒருபக்கம் சிலருக்கு புரியாத புதிராகவும், பலரை எரிச்சல் ஊட்டும் வகையிலும் அமையும். கலாச்சாரம், வாழ்வியல் முறையில் மாற்றம் கண்டாலும், இந்த கேள்வி மட்டும் இன்று வரை மாறவே இல்லை.

விருந்தோம்பல்

விருந்தோம்பல்

திருமணமான முதல் ஒரு மாதம் முழுக்கு வயிறுப் புடைக்க விருந்தோம்பல் விருந்து நடைப்பெறும். உறவினர் வீடு, நண்பர்கள் வீடு என அழைத்து விருந்து தருவார்கள். விருந்தில் இருக்கும் உணவை விட அந்த இடத்தில் அவர்கள் கேட்கும் கேள்விகள் தான் நிறைய இருக்கும். உங்களை பற்றி உங்கள் மனைவியிடமும், பெண் வீட்டு உறவினர்கள் அவர்களை பற்றி உங்களிடமும்.. நீங்களாக அறிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை கலாய்க்கிறோம் என்ற பெயரில் மொக்கையாக சொல்லிவிடுவார்கள்.

செல்ல பெயர்கள்

செல்ல பெயர்கள்

திருமணமான புதிதில் செல்ல பெயர்களுக்கு பஞ்சமே இருக்காது வாயில் வருவது எல்லாம் செல்ல பெயர் தான். இதில் ஒன்றிரண்டு கூட ஓர் வருடத்திற்கு பிறகு நினைவில் இருக்காது என்பது தான் நிதர்சனம்.

நித்தமும் முத்தம்

நித்தமும் முத்தம்

சமைக்கும் போது, எழுந்திருக்கும் போது, வேலைக்கு செல்லும் போது, வீடு திரும்பும் போது என இருவர் மத்தியிலும் முத்த மழை ஓயாமல் பெய்துவரும். சரியாக ஓரிரு மாதங்களில் அவை பருவ மழை முடிவடைந்ததை போல காணாமல் போய்விடும்.

இன்ப அதிர்சிகள்

இன்ப அதிர்சிகள்

சினிமா, பரிசுகள், புடவை, இனிப்பு என இன்ப அதிர்சிகள் ஏராளாமாக தந்து மனைவியின் எதிர்பார்ப்பை ஆண்கள் தான் தூண்டிவிடுகிறார்கள். ஓரிரு மாதங்களில் தாகம் தீர்ந்தவுடன் அனைத்தையும் மறந்து விடுவது. பிறகு அவர்கள் எதிர்பார்த்தால், "உனக்கு வேற வேலையே இல்லையா, சம்பாதிக்கிற பணம் மொத்தமும் உனக்கு செலவு பண்ண முடியுமா???" என்று எரிந்து விழுவார்கள். (பெண்களே உஷார்!!!)

உங்களுக்கே பழகிடும்

உங்களுக்கே பழகிடும்

திருமணமான புதிதில், "பரவால அம்மா, என் மாமியாரே சமைக்கிறாங்க, என்கிட்டே ஒரு வேலையும் சொல்றதே கிடையாது..." இரண்டு மாதங்கள் கழித்து "அம்மா எல்லா வேலையும் என்னையே செய்ய சொல்றாங்க... இதுல நாத்தனார் வேற.. ரெண்டு நாளுக்கு ஒருதடவ வந்துறா வீட்டுக்கு.." இவங்களும் பிறந்த வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு தான் இருப்பாங்க. ஆனா, குத்தம் சொல்றதுன்னு ஆயிடுச்சு, எக்ஸ்ட்ரா பிட்டு போட்டா தானே அஸ்திவாரம் நிலைக்கும்!! (என்ன நான் சொல்றது) இது எல்லாம் உங்களுக்கே போக போக பழகிடும்.

படுக்கையறை மாற்றங்கள்

படுக்கையறை மாற்றங்கள்

முதல் ஓரிரு மாதங்களில் உரசல்கள், கொஞ்சல்கள் என பூந்தோட்டமாக மலர்ந்திருக்கும். பிறகு உராய்வுகள், முறைத்தால், புகார்கள் என பூகம்பமாய் வெடிக்கும். இதனால் தான் திருமணமான புதிதில் ஆண்கள் வீட்டுக்கு விரைவாகவும், பிறகு நேர தாமதமாகவும் போக முக்கிய காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Things Happens On The Early Days Of Marriage Life

Do you know about the weird things happens on the early days of marriage life? read here.
Story first published: Wednesday, October 14, 2015, 13:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter