பெண்களே! உங்கள் மீது ஒரு ஆணை காதலில் விழ வைக்க 8 டிப்ஸ்...

By: Ashok CR
Subscribe to Boldsky

காதல் என்பது எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை. கண்டிப்பாக மனிதன் பிறந்தவுடன் காதலும் பிறந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல் இந்த உலகம் உள்ளவரை கண்டிப்பாக நீடிக்கும். காதலில் ஒரு முறையாவது விழாதவர்கள் இருக்கவே முடியாது. குறைந்தது ஒரு தலை காதலாவாவது இருந்திருக்கும். பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் வேகமாக காதலில் விழுவார்கள். ஆனால் அதற்காக பெண்களுக்கு காதல் வருவதில்லை என்றெல்லாம் இல்லை.

பொதுவாக இந்த காலத்தில் தனியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் கஷ்டமாக உணர்வாள். இந்த குளிர்ச்சியான நேரத்தில் உங்களை அன்புடன் அரவணைத்து கொள்ள ஒரு ஆண் துணையை நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள். அதுவும் விடுமுறை காலம் வேறு; காதல் இல்லாமல் தனியாக இருந்தால் சும்மா காதல் படம் பார்த்து தான் பொழுதை கழிக்க வேண்டி வரும். சரி வெளியே செல்லலாம் என்றால், போகும் இடத்தில், குளிர் காலத்தில், சாயங்கால நேரத்தில், காதலர்கள் கை கோர்த்து ஜோடியாக சுற்றுவதை பார்த்தால் எரிச்சல் தான் ஏற்படும்.

சரி, ஏன் நீங்கள் தனியாக இருக்க வேண்டும்? சொல்லப்போனால், நீங்கள் நினைப்பதை போல் ஒரு ஆணை உங்கள் மீது காதலில் விழ வைப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயம் ஒன்றும் கிடையாது. அது நடக்கவே நடக்காது என நீங்கள் நினைக்கலாம், நீங்கள் அதற்கு கொடுத்து வைக்காதவர் எனவும் நீங்கள் நினைக்கலாம்; ஆனால் கண்டிப்பாக அது நடக்கும். காதல் என்பது கொட்டி கிடக்கிறது. அது வேண்டுமானால் நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். எப்படி ஒரு ஆணை உங்கள் மீது காதலில் விழ வைப்பது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த மாதிரியான ஆண் வேண்டும்?

எந்த மாதிரியான ஆண் வேண்டும்?

நீங்கள் ஒரு ஆணை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்றால், அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? எனக்கு வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு தெரியும்; அப்படிப்பட்டவரை விட்டு விட்டு நான் டேட்டிங் செல்ல முயற்சிப்பேன் என நீங்கள் நினைத்தால், அது வேலைக்கு ஆகாது. உங்களுக்கான ஆணை தேட ஆரம்பிக்கும் முன்பு, நீங்கள் எந்த மாதிரி ஆணை தேட போகிறீர்கள் என்பதை நன்றாக உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு ஆணிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு கொள்ளுங்கள்; அது தோற்றத்தில் இருந்து ஆளுமை வரை அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்து விட்டால், என்ன தேட வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்து விட்டால், உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காதல் அமையாது.

நீங்கள் எந்த மாதிரி பெண்ணாக இருக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்

நீங்கள் எந்த மாதிரி பெண்ணாக இருக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கைக்கு எந்த மாதிரியான ஆண் வேண்டும் என்பதை முடிவு செய்வது மட்டும் போதாது. ஆனால் நீங்கள் எந்த மாதிரியான பெண்ணாக இருக்க போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு, உங்களை நீங்களே காதலிக்காத வரையில், உங்களால் மற்றொரு ஆணை புரிந்து கொண்டு காதலிக்க முடியாது.

உங்களை முதலில் காதலியுங்கள்

உங்களை முதலில் காதலியுங்கள்

சில நேரங்களில் நாம் தனிமையை உணரும் போது நாம் யாரென்று மறந்து விடுவோம். அதற்கு காரணம் நம் தனிமையை போக்க ஒருவரை தேடுவதில் நம் கவனம் படிந்திருக்கும். ஆனால் அப்படி இருக்க கூடாது. முதலில் நீங்கள் உங்களால் சந்தோஷமாக இருங்கள். அதன் பிறகு நீங்கள் மற்றவர்களால் சந்தோஷமாக இருக்கலாம்.

பொழுதுபோக்குகளை கொண்டு சுவாரசியமானவராக இருங்கள்

பொழுதுபோக்குகளை கொண்டு சுவாரசியமானவராக இருங்கள்

ஆண்களுக்கு சுவாரசியமான பெண்களை தான் பிடிக்கும். உங்களுக்கு மூளை இல்லை என்றாலோ அல்லது பொழுது போக்குகள்/விருப்பங்கள் இல்லை என்றாலோ உங்கள் மீது அவருக்கு வெகு விரைவிலேயே அலுப்பு தட்டி விடும். அதனால் உங்களுக்கென முதலில் ஒரு பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் காதலனிடம் பேசுவதற்கு உங்களுக்கு விஷயம் கிடைக்கும் அல்லவா? பொழுது போக்குகள் இருப்பதால் பேச்சு வளர்வதோடு மட்டுமல்லாது, உங்களின் சுய மரியாதையும் அதிகரிக்கும்.

வெற்றிக்காக ஆடை அணியுங்கள்

வெற்றிக்காக ஆடை அணியுங்கள்

இது நம்ப முடியாத படி இருந்தாலும் கூட உண்மையே. நீங்கள் ஒரு ஆணுடன் காதலில் ஈடுபட வேண்டுமானால், வெளியே செல்லும் போது உங்கள் தோற்றம் எப்போதும் கவரும் வண்ணம் இருக்க வேண்டும். கூந்தலை நன்றாக அலங்கரித்து கொள்ளவும், கொஞ்சமாக மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளுங்கள். பார்க்க பார்க்கும் படியாக இருக்கும் வேண்டும். உங்களுக்கானவரை எங்கே வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம் அல்லவா?

ஆரோக்கியமாக இருங்கள்

ஆரோக்கியமாக இருங்கள்

உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்! சரியான உணவை உண்ணுங்கள், போதிய வைட்டமின்களை சேர்த்துக் கொள்ளுங்கள், கொஞ்சமாக சூரிய ஒளியில் தென்படுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என உணர்ந்தீர்கள் என்றால், உங்களால் எதையுமே ஆற்றல் திறனுடன் செய்ய முடியாது.

உங்களுக்கு நீங்களே கற்பியுங்கள்

உங்களுக்கு நீங்களே கற்பியுங்கள்

ஆண்களுக்கு புத்திசாலியான பெண்களையே பிடிக்கும். உண்மை தாங்க, பொய் சொல்லவில்லை. உங்கள் புத்திசாலித்தனத்தை பார்த்து ஒரு ஆண் ஈர்க்கப்படுகிறாரா இல்லையா என்பதை பொறுத்து அவர் உங்களுக்கானவரா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை ஒருவரால் பாராட்ட முடியவில்லை என்றால் அல்லது அவரை விட உங்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது என அவர் வருத்தப்பட்டார் என்றால், அவர் உங்களுக்கு பொருத்தமானவர் கிடையாது. அழகிய முட்டாளாக இருக்காதீர்கள். புதிதாக கற்றுக் கொள்ளுங்கள், புத்தகங்கள் படியுங்கள், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். புத்திசாலித்தனமும் ஒரு வகையில் கவர்ச்சியே!

உங்கள் வாழ்க்கையுடன் சந்தோஷமாக இருங்கள்

உங்கள் வாழ்க்கையுடன் சந்தோஷமாக இருங்கள்

எப்போதுமே அழுத்தத்துடன் இருக்கும் பெண்ணை எந்த ஆணும் விரும்பமாட்டார். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்; ஆனால் ஒரு ஆணை ஈர்க்க மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதை போல் நடிக்காதீர்கள். சொல்லப்போனால், மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உங்களாலான அனைத்தையும் செய்யுங்கள். காதலுக்கு முதலில் தேவைப்படுவது சந்தோஷமே! உங்களாலேயே உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியவில்லை என்றால், எப்படி பிறரிடம் இருந்து உங்களுக்கு அது கிடைக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips on How to Make a Man Fall in Love with You

Love is out there, you just have to put in a little bit of effort. So lets discuss on how to make a man fall in love with you.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter