Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
உங்கள் காதலில் இந்த "அஜால், குஜால்" தருணங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிறதா!!!
காதல் ஒரு தவம், கலை, தியானம் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஏனென்று தெரியுமா? இவை அனைத்திற்குமே பொறுமை, கட்டுப்பாடு, சமநிலை தேவைப்படுகிறது. காதல் ஒரு அஞ்சறைப் பெட்டியைப் போல அனைத்தும் கலந்த கலவை தான் அது!
சூர்யா ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மாடர்ன் காதல் டிப்ஸ்!!!
இன்று இச்சைக்காக மட்டுமே பலர் கட்டிப்பிடித்து திரிகின்றனர், காதல் என்ற முகமூடியைப் பயன்ப்படுத்திக் கொண்டு. அவர்களுக்கு இந்த அஞ்சறைப் பெட்டி சமாசாரம் எல்லாம் கசப்பாக தான் தெரியும்.
காதலுக்கு முன், காதலுக்கு பின் ஆண்களுக்கு ஏற்படும் "OMG" மாற்றங்கள்!!!
ஆனால், உண்மையாக விரும்புபவர்களால் மட்டுமே, இந்த அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல மகிழ்வான நிகழ்வுகளின் சுகத்தை உணர முடியும். முதல் முத்தம், முதல் அரவணைப்பு என தொடங்கி எண்ணற்று கடந்துப் போகும் அந்த நிகழ்வுகளைப் பற்றி தான் இனி பார்க்கப் போகிறோம்...

நள்ளிரவு பிறந்தநாள் பரிசு
பெரும்பாலும் காதலன் தான் நள்ளிரவு பிறந்த நாள் பரிசு தர, தன் காதலியின் வீட்டு மதில் சுவர் ஏறி குதித்து, நாயிடம் இருந்து கடி வாங்காமல் தப்பிப்பவர்கள். எத்தனை பிறந்தநாள் வந்தாலும், காதலிக்க ஆரம்பித்த பின் வரும் அந்த முதல் பிறந்த நாளுக்கு நள்ளிரவு சென்று பரிசு தந்து வருவது என்பது மிகவும் மகிழ்சிகரமான விஷயம் ஆகும்.

வீட்டிற்கு விசிட்
காதலன் வீட்டுக்கு காதலியோ, காதலி வீட்டுக்கு காதலனோ, யாரும் இல்லாத போது சென்று வரும் முதல் விசிட் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக அமையும். "எப்போது யார் வருவார்கள், யாராவது பார்த்துவிட்டால்" என்ற பல பயங்களுக்கு மத்தியில் நிகழும் அந்த சந்திப்பு காதலிப்பவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் மகிழ்ச்சியான தருணம்.

கட்டிப்பிடி வைத்தியம்
மனமுடைந்து போகும் தருணங்களில் காதலியிடம் இருந்தோ, காதலனிடம் இருந்தோ கிடைக்கும் கட்டிப்பிடி வைத்தியம் தான் பெரும் உறுதுணையாக இருக்கும். தாய்க்கு பின் அந்த அரவணைப்பு காதலில் தான் கிடைக்கும்.

முதல் முத்தம்
தெகிட்டாத இன்பமாய் எத்தனை முத்தங்கள் கிடைத்தாலும், தயங்கி, தயங்கி கொடுக்கப்படும் அந்த முதல் முத்தத்திற்கு ஈடு ஆகாது.

பிரிவிற்கு பின்...
சண்டைகள் இல்லாத காதல் வெறும் பொம்மை காதலாக தான் இருக்க முடியும். ஒவ்வொரு சண்டையும் உங்கள் காதலை அதிகரிக்க செய்யும். அந்த சண்டைக்கு பிறகு சேரும் போது, காதலியிடம் இருந்து வரும் சில கொஞ்சலான வார்த்தைகள், "இனிமே நாம சண்டை போடாம இருக்கலாம், போட்டாலும் சின்னதா சண்டை போட்டு, உடனே பேசிக்கலாம்.." போன்ற குழந்தைத்தனமான செயல்களில் கிடைக்கும் சுகத்திற்கு வேறு எதுவும் ஈடிணை ஆகாது.

அழுகை
ஒருவேளை காதலி அழைத்தப் போது எந்த பதிலும் அளிக்க முடியாத சூழலில் இருந்து, வெகு நேரம் கழித்து நீங்கள் பதிலளிப்பதற்குள், உங்களுக்கு என்ன ஆனதோ, ஏதானதோ என்ற பரிதவிப்பில் காதலியிடம் இருந்து வெளிப்படும் அழுகை - ஒவ்வொரு ஆணும் வேண்டி தவமிருக்கும் உறவு அது! உங்களுக்காக சிரிக்க ஆயிரம் பேர் இருப்பினும், அழுவதற்கு யார் இருக்கின்றார் என்பதில் தான் உங்கள் வாழ்க்கையின் பொருள் அடங்கி இருக்கிறது.

ஒத்துபோதல்
அவளுக்கு பிடிக்காது என்பதால், தனக்கு பிடித்த ஒன்றை விட்டுக்கொடுத்து போகும் செயல், வேறு எந்த உறவிலும் கிடைக்கப் பெறாத இன்பம்.



Click it and Unblock the Notifications