For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலை உதறி செல்ல, இவர்கள் கூறும் லொட்டு லொசுக்கு காரணங்கள்!!!

|

பூக்கும் மலரெல்லாம் ஓர் நாள் மண்ணில் வாடி விழும் நேரம் வரும் என்பது போல தான் காதலும். அதுவும் இந்த காலத்து டிஜிட்டல் காதல் காவியங்கள், மொபைல் ஸ்க்ரீனில் கீறல் விழுந்தால் மாற்றும் ஸ்க்ராட்ச் கார்டு போலதான் காதலையும் எதிர் கொள்கின்றனர். வடுக்கள் இல்லாத சிலை இந்த பூமியில் நிலைத்தது இல்லை என்பது இந்த காலத்து போட்டோ ஷாப் காதலர்களுக்கு தெரிவதில்லை என்பது தானே நிதர்சனம்!

பெண்கள் தங்களை விட முதிர்ச்சியான ஆண்களை விரும்புவதற்கான காரணங்கள்!!!

உரசல்களில் சூடேறி, தேகம் தீப்பற்றியதும் அணைப்பில் இருந்து விலகி எழுந்து ஓடும், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு குருட்டு காதலாக தான் இருக்கிறது 21 ஆம் நூற்றாண்டின் இளசுகளின் காதல் பிரயாணம்! இவர்களுக்குள் பிரிவு ஏற்படும் லொட்டு லொசுக்கு காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேசுவது குறைதல்

பேசுவது குறைதல்

ஃபேஸ் புக், வாட்ஸ் அப் என பேசிக் கொள்ள ஆயிரம் வழிகள் இருந்தும் இவர்களுக்குள் ஏற்படும் இடர்பாடு தான் பிரிவுக்கான முதல் கூற்றாக கூறப்படுகிறது. வருடங்கள் பேசாமல் இருந்து யுகங்கள் சேர்ந்து வாழ்ந்த காதல் எல்லாம் அப்போது. நிமிடங்கள் பேசாது இருந்து நொடிகளில் பிரிந்து செல்லும் காதல் தான் விளைகிறது இப்போது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

காதலில் மட்டும் அல்ல அனைத்து உறவுகளிலும் வாக்குவாதம் ஏற்படுவது என்பது இயல்பு. இதன் மூலம் அறிவு தான் வளர வேண்டும். இன்றைய காதலில் உறவை முறித்துக் கொள்ள தான் பெரும்பாலும் இது காரணம் காட்டப்படுகிறது.

மகிழ்ச்சியின்றி இருப்பது

மகிழ்ச்சியின்றி இருப்பது

அகத்தில் தோன்றும் காதலில் தான் மகிழ்ச்சி ஊற்றென கிளம்பும். முகத்தை கண்டு முளைக்கும் காதலில் மகிழ்ச்சி பருக்களை போல அங்கொன்று, இங்கொன்றுமாய் முளைக்கும், அதுவும் சிறிது நாட்களில் காணமல் போய்விடும் காதலோடு சேர்த்து.

நெருக்கம் குறைதல்

நெருக்கம் குறைதல்

தொடக்கத்திலேயே டாப் கியரில் பயணிக்கும் இன்றைய இளசுகளின் காதல் பிரேக் டவுன் ஆகி நடுவில் நிற்பதை பற்றி கூறுவதில் வியப்பிற்கு இடமில்லை. இடைவெளி குறைந்து குறைந்து நெருக்கத்தில் முடிவது தான் காதல். இவர்களுக்கு நெருக்கத்தில் தொடங்கி இடைவெளி அதிகமாகி அதிகமாகி பிரிந்து விடுகின்றனர்.

மன புழுக்கம்

மன புழுக்கம்

காதலில் பிரிவு ஏற்படும் போது இவர்களுக்கு மனது புழுங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த புழுக்கம் காய்வதற்குள் இன்னொரு பக்கம் காதல் மலர்ந்து விடுகிறது என்று இவர்கள் சொல்லும் போது தான், "இது மெய்யாலுமே லவ்வா மச்சான்!!??"என்று கேட்க தோன்றுகிறது.

 பிரியும் எண்ணங்கள்

பிரியும் எண்ணங்கள்

பிரிவில் பிரியம் அதிகரிப்பது தான் காதல். பிரிய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் பின்பு எப்படி அது காதலாக இருக்க முடியும்.நல்லா யோசிங்க மக்களே இப்படி தான் சாக்கு போக்கு சொல்லி காதல் என்ற சொல்லி திரிகின்றனர். (உண்மையான காதல் என்று சொல்லும் நபர்களிடம் ஒரு கேள்வி, அப்போ, காதல் என்றால் பொய்யா? உண்மையான காதல் மட்டும் தான் உண்மையானதா???)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Signs That It's Time To Take A Relationship Break

Do You Know About That Six Signs Indicates You It's Time To Take A Relationship Break? Read Here.
Story first published: Monday, March 23, 2015, 18:31 [IST]
Desktop Bottom Promotion