Latest Updates
-
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்!
இல்லற வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக பயப்படும் விஷயங்கள்!!!
உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கையின் அச்சாணி. வெறும் இச்சை என்று மட்டும் இதைக் கூறிட முடியாது, இன்பமான, வலிமையான உறவிற்கு இதுவும் ஓர் காரணியாக இருக்கிறது. வம்சத்தை மட்டுமின்றி நல்ல இல்வாழ்க்கையும் விருத்தியாக உதவுவது உடலுறவு.
இல்வாழ்க்கையை இன்பமாக்கும் சில விசித்திரமான விஷயங்கள் - அறிவியல் கூற்று!!!
இல்லற வாழ்க்கையில் எந்த விதத்தில் பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்துவிடலாம். ஆனால், இந்த விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டால் சமாளிப்பது சற்று கடினம் தான். இதற்கான தீர்வை மற்றவரிடம் கேட்க மனது தயங்கும். கூச்சம் மற்றும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்.
கணவனாக இருந்தாலும் கூட, பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் அந்தரங்க விஷயங்கள்!!!
அந்த வகையில், இந்த உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயத்தில் ஆண்கள் எதற்கெல்லாம் அதிகம் பயப்படுகின்றனர் என்று இனிப் பார்க்கலாம்...

இனப் பெருக்க திறன் இன்மை
தங்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாதோ அல்லது திறன் குறைவாக இருக்குமோ என்ற ஓர் அச்சம். உண்மையில் இவ்வாறு ஆண்கள் பயப்படும் போது தான் அந்த குறைபாடே ஏற்படுகிறது. உளவியல் ரீதியான பயம் தான் 90% இனப் பெருக்க திறன் குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆசைகளை நிறைவேற்ற முடியுமா
தங்களது துணையின் ஆசைகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியுமா என்ற பயம். உடல்ரீதியான இன்பம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மாறுப்பட்டு இருக்கும். மற்றும் பல ஆண்கள் வெளியில் கேட்ட கட்டுக் கதைகளை எண்ணி, தங்களால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். ஓர் நாளில், ஓர் சாதாரண ஆண்மகனால் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்பது தான் உண்மை.

மற்றவர் மீது ஆசை இருக்குமோ
திருமணம் ஆனாலும் கூட, உளவியல் ரீதியாக மற்ற பெண்கள் மீது ஆண்களுக்கும், மற்ற ஆண்கள் மீது பெண்களுக்கும் ஆசை ஏற்படுவது சகஜம் தான். ஆனால், சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் முக்கியம். பல ஆண்கள், தங்களைவிட சிறந்த துணையை (உடலுறவு சார்ந்து) தங்கள் துணை தேடுவார்களோ என்ற சந்தேகம் எழும். இந்த சந்தேகம் எழும் பட்சத்தில் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

மற்ற ஆண்களோடு ஒப்பிடுதல்
பெரும்பாலான ஆண்கள், தங்களது உடலுறவு வாழ்கையை மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். வெளிப்படையாக தாங்களும் அவ்வாறு தான் என்று சமமாக கூறிக்கொண்டாலும், உள்ளுக்குள் தான் அந்த விஷயத்தில் குறைபாடு உள்ளவராக இருக்கிறோமோ என்ற அச்சம் ஆண்கள் மத்தியில் பெரும்பாலும் இருக்கிறது.

விந்து வெளிப்படுதல்
உடலுறவில் ஈடுபடும் போது, விந்து விரைவாக வெளிப்படுதல் மிக பெரிய பிரச்சனையாக ஆண்கள் கருதுகின்றனர். ஆனால், இதுவும் கூட உங்களது உளவியல் ரீதியான ஒன்று தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் துணையின் சரியான ஒத்துழைப்பினாலேயே இதை சரி செய்திட முடியும். பெரும்பாலும் பதட்டத்தினால் தான் விந்து விரைவாக வெளிப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

சிறிய ஆண்குறி
பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் அச்சம் இது. சிறிய ஆண்குறி. நீங்கள் சில படங்களில் காண்பது போல ஆண் குறி அனைவருக்கும் 7,8 அங்குலம் எல்லாம் இருக்கவே இருக்காது. சராசரியாக ஓர் இந்திய ஆண்மகனின் ஆண்குறி 5-6 அங்குலம் தான் இருக்கும். ஆனாலும், உடலுறுவு கொள்ள ஆண்குறி நான்கு அங்குலம் இருந்தாலே போதுமானது.

உறவில் விரிசல் பயம்
சில வடிவான பெண்களை காணும் போது, இதனால் மனைவிக்கும் தங்களுக்கும் இருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அனைத்து ஆண்களிடமும் இருக்கிறது. இவ்வாறு பல பெண்கள் மீது ஆசை கொள்வது தவறோ என்ற அச்சம் பல ஆண்கள் மத்தியில் இருக்கிறது.



Click it and Unblock the Notifications