இந்திய ஆண்கள் 20 வயதை கடக்கும் போது பெண்களிடம் அதிகம் விரும்பும் சில விஷயங்கள்!!!

By: John
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த வயதை பொருத்து சில ஆசைகள், ஆவல்கள் பிறக்கும். சிறு குழந்தையாக இருக்கும் போது விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள் மீதும், முதிர்ச்சியுற்ற வயதில் கோவில், குளங்களுக்கு செல்லவும் மனம் ஆவாலாய் இருக்கும்.

முப்பது வயதை எட்டும் திருமணமாகாத இந்திய ஆண்கள் விரும்பும் விஷயங்கள்!!!

நாடு வயது என்பது குடும்பத்திற்காக உழைக்கவே ஆண்களுக்கு சரியாக இருக்கிறது. இதற்கெல்லாம் நடுவில், பருவ வயதைக் கடந்து இருபது வயதுகளில் நுழையும் நமது இந்திய ஆண்கள் எந்த விஷயங்களை எல்லாம் பெண்களிடம் இருந்து அதிகம் விரும்புகிறார்கள் என தெரியுமா???

முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உல்லாசமாக இருக்க வேண்டும்

உல்லாசமாக இருக்க வேண்டும்

எவ்வளவு பெண்களிடம் நட்பு பாராட்டி ஊர்சுற்ற முடியுமோ, அவ்வளவு பெண்களிடமும் இருபது (20s) வயது முடிவதற்குள் ஆசை தீர ஊர்சுற்றிட வேண்டும் என்று பெரும்பாலான இந்திய இளைஞர்கள் விரும்புகிறார்களாம். (இதெல்லாம் சகஜம்'பா பொண்ணுகளும் இதே தான விரும்புறாங்க!!!)

உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்

உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்

திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொள்வதில் இன்றைய இளைஞர்கள் நிறைய ஆர்வம் காட்டுகின்றனர். இதில், ஆண், பெண் என்ற மாற்றுக் கருத்துகளுக்கு இடமே இல்லை. இருபாலரும் அப்படி தான் இருக்கின்றனர். 20வது வயதை கடக்கும் இந்திய ஆண்களும் இதை அதிகம் ஆசைப்படுகின்றனர்.

திருமண பந்தம் வேண்டாத காதல்கள்

திருமண பந்தம் வேண்டாத காதல்கள்

காதல் வேண்டும் ஆனால், திருமணத்திற்கு "நோ" என்று சொல்லும் இளசுகள் தான் இப்போது அதிகம் இருக்கின்றனர். இதற்காக தான் பெரும்பாலான பன்னாட்டு நிறுவன இளசுகள் "ஓகே கண்மணி உறவில்" ஈடுபட ஆவலாக இருக்கிறார்கள்.

பெண்களுக்கு சம உரிமை

பெண்களுக்கு சம உரிமை

முன்பு போல எங்கு சென்றாலும் தாங்களே அனைத்து பில்'களையும் கட்டுவதில் இப்போதைய ஆண்களுக்கு விருப்பம் இல்லையாம். ஒருநாள் தான் என்றால் மறுநாள் அந்த பெண் தான் பில்'களுக்கு காசு தர வேண்டும். மொத்தமாக டேட்டிங் செலவுகளை கூட அவர்களே ஏற்றுக்கொண்டாலும் ஓகே தானாம். (அட்ரா சக்க......!! இது செம டீலிங்!!!)

கூட்டமாக சுற்றுவது

கூட்டமாக சுற்றுவது

ஆணும், பெண்ணும் தனித்தனியாக வெளியிடங்களுக்கு செல்வதை விட, அதிகமாக நண்பர் கூட்டம் அல்லது அவரவர் டேட்டிங் செல்லும் பெண்களோடு கூட்டாக செல்லவே விரும்புகிறார்கள். (செலவு மிச்சமாகும் போல..!!!)

பெண்ணின் குடும்பத்தை காண விரும்புவதில்லை

பெண்ணின் குடும்பத்தை காண விரும்புவதில்லை

தாங்கள் இருபது வயதில் விரும்பும் பெண்களின் குடும்பங்களோடு பேச்சு வைத்துக்கொள்ள விரும்புவதில்லையாம். (ஆமா, பின்ன நீங்க கல்யாணம் பண்ணிக்க போறதும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல, அப்பறம் எதுக்கு வீண் வேலை..!!)

மிக அழகான பெண்ணுடன் காதல் கொள்ள வேண்டும்

மிக அழகான பெண்ணுடன் காதல் கொள்ள வேண்டும்

20வது வயதை கடக்கும் இந்திய ஆண்கள் மிகவும் அழகான பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். இதற்கு சினிமா ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூட கூறலாம்.

பெண்களின் உடல் உறுப்புகள் மீதான ஆவல்

பெண்களின் உடல் உறுப்புகள் மீதான ஆவல்

இதிலும் சில இளைஞர்கள், பெண்களின் உடல் பாகங்களை காண வேண்டும் என்று அதிகம் விரும்பிகிறார்கள். இது அவர்களை சில செய்யக்கூடாத காரியங்களில் கூட ஈடுபட வைக்கிறது.

கருத்து

கருத்து

இணையத்தின் பெரும் உதவியோடு இன்றைய இந்திய இளைஞர்கள் (சிலரை தவிர்த்து) பெரும்பாலானவர்கள், இருபதுகளில் இச்சைக்கு அடிமையாகி தங்களது கடமைகள் மற்றும் கனவுகளில் இருந்து தடம் மாறி சென்றுவிடுகின்றனர் என்பது தான் உண்மை!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Things Indian Men In Their 20s Want From Women

Do you know about the seven things, what Indian men in their 20s want from women? read here.
Subscribe Newsletter