தினந்தோறும் இனிமையாக இருக்க, தம்பதிகள் காலையில் தவறாமல் செய்ய வேண்டியவை!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் நாள் தினமும் அமர்களமாக இருக்க வேண்டுமா? நாள் முழுதும் உங்கள் துணையோடு இனிமையாக இருக்க வேண்டுமா? சண்டை சச்சரவுகள் இன்றி, சந்தோசமாக இருக்க வேண்டுமா? அப்போது நீங்கள் இந்த வேலைகளை தினமும் காலை செய்ய தவறேவே கூடாது.

ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சண்டைகள் இன்றி ஓர் சந்தோசமான கணவன் மனைவி உறவு அமையாது. சின்ன, சின்ன சண்டைகள் கட்டாயம் தேவை. ஆனால், அதற்கென தினந்தோறும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது கணவன், மனைவி மத்தியில் இருக்கும் நெருக்கத்தை மெல்ல மெல்ல அரித்துவிடும்.

ஜில், ஜங், ஜக் மட்டுமில்ல, மொத்தம் பத்து வகையான பொண்ணுங்க இருக்காங்களாம்!!!

இதில் இருந்து தப்பிக்க தான் நீங்கள் இங்க வேலைகளை தினமும் காலை உங்கள் துணையுடன் செய்ய வேண்டும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா

யோகா

உங்கள் நாளை அமைதியாகவும், நல்ல மனநிலையுடனும் துவங்க யோகா பயன் தருகிறது. மற்றும் சூரிய உதயத்தின் போது, அதிகாலை சூரிய ஒளி உங்கள் உடல் மேல் படும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் டி சத்து பெற உதவுகிறது.

உடலுறவு

உடலுறவு

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் மன சோர்வு குறைந்து, புத்துணர்ச்சி பெற முடியும். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தினமும் இல்லாவிட்டாலும், நீங்கள் சோர்வாக அல்லது மன அழுத்தமாக உணரும் போது காலை வேளையில் உடலுறவில் ஈடுபடலாம்.

வீட்டு வேலைகளை சேர்ந்து செய்வது

வீட்டு வேலைகளை சேர்ந்து செய்வது

மனைவி மட்டும் தனியே வீட்டு வேலைகள் செய்வதை தவிர்த்து, இருவரும் சேர்ந்து வேலைகளை பகர்ந்து செய்வது வேலை பளுவை குறைப்பது மட்டுமின்றி. மனதளவிலும் தம்பதி இருவரும் என்றும் நெருக்கமாக இருக்க உதவுகிறது. மற்றும் வீட்டில் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்து இது காலை வேளை பரபரப்பையும் குறைக்கும்.

உங்கள் நாளை திட்டமிடுங்கள்

உங்கள் நாளை திட்டமிடுங்கள்

இன்று என்ன செய்ய போகிறீர்கள், வீட்டிற்கு தேவையான வேலைகள் ஏதேனும் செய்ய வேண்டியிருக்கிறதா என நீங்கள் காலையிலேயே திட்டமிடுவது நல்லது. இல்லையேல், இடைப்பட்ட நேரத்தில் அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை என ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பது போல நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அலுவலக வேலைகளை காலையில் மறந்து விடுங்கள்

அலுவலக வேலைகளை காலையில் மறந்து விடுங்கள்

விடிந்தும் விடியாமல், காலை எழுந்ததும், அலுவலக மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை சரிபார்ப்பது போன்ற வேலைகளை விட்டுவிடுங்கள். வீட்டு வேலையை வீட்டிலும், அலுவலக வேலையை அலுவலகத்திலும் மட்டுமே பார்க்க பழகுங்கள். அப்துல் கலாம் ஒருமுறை , "யார் ஒருவர் அலுவலகத்தில் நீண்ட அதிக நேரம் செலவளிக்கிரானோ, அவன் அவனது வேலையை சரியாக செய்வதில்லை" என கூறியிருக்கிறார்.

ஆன்மீக வழிபாடு

ஆன்மீக வழிபாடு

கடவுளை தான் வழிப்பட வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்களது ரோல் மாடலாக நினைப்பவர் கூட சிறிது நேரம் நினைத்து வணங்கலாம். இது, உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவும். கணவன், மனைவி இருவரும் காலை வேளையில் சேர்ந்து ஆன்மீக வழிபாடு செய்தல் அவர்கள் மத்தியில் நேர்மறை எண்ணைகள் அதிகரிக்க உதவும்.

காலை உணவு

காலை உணவு

காலை உணவு சமைப்பதிலும், உட்கொள்வதிலும் நேர தாமதம் செய்ய வேண்டாம். பெரும்பாலும் கணவன், மனைவிக்குள் காலையில் சண்டை வருவதற்கு காரணமாக இருப்பது இந்த காலை வேளை உணவு சமைப்பதில் நேர தாமதம் ஆவதால் தானாம். இதை தவிர்க்க கணவனும் சேர்ந்து ஒத்தாசை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Morning Habits That Couple Should Follow Daily

Do you know about the morning habits that couple should follow daily? Read here.