Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத 5 விஷயங்கள்!
முதலிரவின் போதே அனைத்தையும் நடத்திவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதல் இரவு என்பது புதுமண தம்பதிகளின் வாழ்க்கையில் முக்கியமான நாள் தான். அதற்கென அன்றே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.
முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளுங்கள். பிறகு உடலுறவை பற்றி பேசுங்கள். அதன் பிறகு உடலுறவில் ஈடுபடலாம். முதலிரவுக்கு முன்பு திருமணம் வேலைகள், சம்பிரதாயங்கள் என உங்கள் உடல் ஏற்கனவே நிறைய சோர்வடைந்திருக்கும்.
இதில் நீங்களே நினைத்தலும் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாது. எனவே, முதலில் முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத ஐந்து விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

அதிரடியான உடலுறவு
ஏற்கனவே இரண்டு நாட்கள் திருமணம், வரவேற்ப்பு என்று நின்றுக் கொண்டே இருந்து ஒய்ந்து போயிருப்பீர்கள். இந்த நிலையில் அன்று இரவே முதலிரவிலும் அதிரிபுதிரியான உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

முதல் நாளே உச்சம்
முதல் முறையிலேயே உச்சம் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். பொதுவாகவே பெண்களுக்கு உச்சம் அடைவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். முதல் முறை ஈடுபடும் போது கட்டாயம் அவர்களுக்கு கூச்சம் அதிகம் இருக்கும் எனவே, முதல் முறையே அவர்கள் உச்சம் அடைவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

நடிக்க வேண்டாம்
முதல் முறையே உச்சம் அடைந்தது போல நடிக்க வேண்டாம். முடிந்தால் இருவரை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். காதல் திருமணத்தில் இதற்கு வழியில்லை. எனவே, இயற்கையாக நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ, அவ்வாறே நடந்துக் கொள்ளுங்கள்.

உடலுறவை பற்றி பேசுங்கள்
இதில் எந்த தவறும் இல்லை, உடலுறவை பற்றி முதலில் பேசி தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ஆணை பற்றி பெண்ணும், பெண்ணை பற்றி ஆணும் முதலில் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

முதலில் ஆண்கள் தான் துவங்க வேண்டும்
முதலில் ஆண்கள் தான் துவங்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் சாக்குப்போக்கு. முதலில் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். முதல் நாளிலேயே அவசரப்பட்டு முட்டி மோத வேண்டாம். நாட்கள் நிறைய இருக்கின்றன.



Click it and Unblock the Notifications
