சூர்யா ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மாடர்ன் காதல் டிப்ஸ்!!!

Posted By:
Subscribe to Boldsky

பூவெல்லாம் கேட்டுப்பாரில் தொடங்கிய இவர்களது பயணம், "காக்க... காக்க..." படத்தில் காதலையே காக்க வைத்தது! இந்திய திரையுலகிலேயே ஒரு சமத்தான, அழகான, க்யூட்டான காதல் ஜோடி என்றால் அது சூர்யா, ஜோதிகாவாக தான் இருக்க முடியும்.

உறவுகள் குறித்து திரைப்படங்கள் சொல்லும் கதை!

சில்லென்று ஒரு காதலாக மட்டும் இவர்களது காதல் இருக்கவில்லை. என்ன தான் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு இடையிலும் பிரச்சனைகளும், தடைகளும் தலைத் தூக்கின.

பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?

அனைத்துத் தடைகளையும் தகர்த்து மாலை சூடி இன்று வரை காதல் திருமணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர், சூர்யாவும், ஜோதிகாவும். அவர்களிடம் இருந்து சில மாடர்ன் காதல் டிப்ஸ்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தடைகளைக் கண்டு பின் வாங்கவில்லை

தடைகளைக் கண்டு பின் வாங்கவில்லை

இன்றைய இளைஞர்கள் சிறு சிறுப் பிரச்சனைகளுக்கே பிரிந்து செல்லும் சூழலில் இருக்கின்றனர். ஆனால் சூர்யா, ஜோதிகா பல தடைகளை தாண்டி காதலில் வெற்றி கண்டனர். எவ்வளவுப் பெரியப் பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் குணத்தை இன்றைய இளைஞர்கள் இவர்களிடம் இருந்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெற்றோரை அவமதிக்கக் கூடாது

பெற்றோரை அவமதிக்கக் கூடாது

எவ்வளவுப் பிரச்சனைகள் வந்தாலும், கடைசி வரை பெற்றோர்களை அவமதிக்காது அவர்களது சம்மதத்திற்காகக் காத்திருந்து திருமணம் செய்தனர் சூர்யா மற்றும் ஜோ. இன்றைய காதலர்கள் மிக முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இதுவாகும்.

திருமணத்திற்கும் பின்னும்...

திருமணத்திற்கும் பின்னும்...

திருமணத்திற்கு பின்னும், ஒரு துளி அளவுக் கூடப் பிரியம் குறையாது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் சூர்யாவும், ஜோவும். இன்று பலரும் காதல் திருமணம் செய்து ஒரு சில மாதங்களில் பிரிந்து விடுகின்றனர். இவர்களை போல நல்ல புரிதல் இருந்தால் எந்த பிரச்சனையும் எழாது!

குடும்பத்தின் மீது அக்கறை...

குடும்பத்தின் மீது அக்கறை...

எவ்வளவுப் பெரிய வேலையாக இருந்தாலும், முக்கியமான வேலையாக இருந்தாலும், குடும்பத்தின் மீது அக்கறையாக இருத்தல். அனைவரும் இந்த ஜோடியிடம் இருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

குழந்தைகள்...

குழந்தைகள்...

காதல், திருமணத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. நமக்கு அடுத்த தலைமுறையான நமது குழந்தைகள் மீதான அக்கறையும், பரிவும் மிகவும் முக்கியம். எனவே, இவர்களை போல குழந்தைகள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம்

புகுந்த வீடு..

புகுந்த வீடு..

இன்று பெரும்பாலான பெண்கள் திருமணமான சில மாதங்களிலேயே புகுந்த வீட்டுப் பிரச்சனையெனப் தனிக் குடித்தனம் போகும் சமயத்தில். வட இந்திய பெண்ணாக இருப்பினும், சூர்யாவின் பெற்றோருக்கு ஒரு மகள் போல இருந்து அக்கறையாகப் பார்த்துக் கொண்டார் ஜோ. இது, இன்றைய பெண்கள் பலரும் பின் பற்ற வேண்டிய விஷயமாகும்.

கணவன், மனைவி

கணவன், மனைவி

இன்றையக் காதல்களில் கணவன், மனைவிக்கு இடையேப் புரிதல் மிகக் குறைவாக இருக்கிறது. சில கணவர்கள் மனைவிகளின் திறமையை வெளிக்கொண்டு வர நினைப்பதில்லை. ஏன்? அறிந்துக் கொள்வதுக் கூட இல்லை. ஆனால், திருமணத்திற்கு பின் ஜோ நடிப்பை தவிர்த்தப் பின்னும் கூட, அவரது திறமை வீணாகப் போய்விடக் கூடாது என மீண்டும் நடிக்க ஒத்துழைத்தார் சூர்யா. இதேப் போல அனைவரும் தங்களது காதல் மனைவிகளின் கனவுகளும், திறமைகளும் மெய்ப்பட உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும்.

சிறந்த எடுத்துக் காட்டு...

சிறந்த எடுத்துக் காட்டு...

காதலுக்கு மட்டுமில்லாமல், இல்லற வாழ்க்கைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர் சூர்யாவும், ஜோவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Everlasting Love Tips From Surya And Jyothika

The most lovable couple from kollywood, Surya and Jyothika. They are living example for love and care in this modren era. Here, some everlasting love tips from Surya and Jyothika.
Story first published: Tuesday, April 7, 2015, 14:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter